பொருட்களை பயன்படுத்த சேது வைத்த செக், தமிழ்செல்வி கொடுத்த தரமான பதிலடி - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஹாஸ்பிடலில் தமிழ்ச்செல்வியை செக் பண்ண டாக்டர், இரட்டை குழந்தை என்று சொன்னார். இதை கேட்டு தமிழ் செல்வின் அம்மாவும், அப்பத்தாவும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். அப்போது அப்பத்தா, இந்த விஷயத்தை தமிழ்செல்வி இடம் சொல்ல வேண்டாம். என் பேரன் பேதியை சேர்த்து வைக்க வேண்டும் என்றார். இந்த விஷயம் தமிழ் செல்விக்கு தெரியவில்லை. இரட்டை குழந்தை விஷயத்தை தமிழிடம் இருந்து அவர் அம்மா மறைத்து விட்டார். ஆனால், தமிழுக்கு அப்பத்தா மீது சந்தேகப்பட்டார்.
அதற்குப்பின் வீட்டிற்கு வந்த அப்பத்தா, ஹாஸ்பிடலில் நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னார். ஆனால், இரட்டை குழந்தை விஷயத்தை சொல்லவில்லை. இதை எல்லாம் கேட்ட சேது கடுப்பாகி அப்பத்தாவை திட்டிவிட்டு சொன்னார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி தன்னுடைய அம்மாவிடம் ஏதாவது என்னிடம் மறைக்கிறீர்களா? என்ன பிரச்சினை என்று கேட்டார். ஆனால், தமிழ்செல்வியின் அம்மா ஏதேதோ சொல்லி அனுப்பினார். அதற்குப்பின் வெளியே வரும்போது தரை வழுக்கியதால் சேது, தமிழ்செல்விக்கு அடிபட்டு விடுமோ என்று பயந்து ஒரு பேப்பரில் கவனமாக செல்லவும் என்று எழுதி வைத்தார்.
சின்ன மருமகள் சீரியல்:
சேது நினைத்தது போலவே தமிழ் பாசியில் கால் வைத்து வலிக்கு விழ போனார். உடனே சேது அவரை பிடித்து விட்டார். தன்மீது சேது வைத்த அக்கறை பார்த்து தமிழ் சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் தமிழ், தன்னுடைய துணிகளை எல்லாம் துவைக்கப் போனார். அதை பார்த்த மலர், நான் துவைத்து தருகிறேன் என்றார். தமிழ், வேண்டாம் நானே பார்த்துக்கொள்கிறேன். இதையெல்லாம் கேட்டு சேது, தமிழுக்காக வருத்தப்பட்டார்.
கடந்த வாரம் எபிசோட்:
பின் அடுத்த நாளே சேது, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டிவி, மிக்சி என்று வீட்டுக்கு தேவையான அனைத்து பொருள்களையுமே வாங்கி வந்தார். இதை பார்த்து ஈஸ்வரி, தாமரை அம்மா பயங்கரமாக கோபப்பட்டார்கள். உடனே அவர்கள், எதற்காக இதெல்லாம் வாங்கி வந்தாய் என்று கேள்வி கேட்டார்கள். அதற்கு சேது, எனக்கு தான் வாங்கி வந்தேன். இதில் என்ன பிரச்சனை என்று சென்று விட்டார். இன்னொரு பக்கம் போஸ், ராஜாங்கத்தை பழிவாங்க அவருடைய எதிர் உடனே கூட்டணி வைத்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ், தன்னுடைய துணிகளை எல்லாம் கைகளில் துவைக்க போகிறார். உடனே சேது, எல்லா பொருள்களும் வீட்டில் எனக்காக வாங்கினேன். அதை நீயும் உபயோகித்துக் கொள்ளலாம். அதுக்காக மாத வாடகை கொடுத்து விடலாம் என்று சொல்கிறார். இதனால் தமிழமே எல்லா பொருட்களையும் உபயோகிக்கிறார். இதை பார்த்து சேது மனதுக்குள் சந்தோஷப்பட்டு கொள்கிறார்.
பின் சேது, பொருட்களை பயன்படுத்தியதற்கு அட்வான்ஸ் தொகை 350 ரூபாய் கேட்கிறார். அதற்கு தமிழ், உங்களுடைய துணி எல்லாம் அயன் பண்ணி வைத்துவிட்டேன்.
சீரியல் ட்ராக்:
நீங்கள் தான் எனக்கு பணம் தரணும் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் பிக்னிக் போன கண்மணி, அவருடைய கணவரும் வந்துவிடுகிறார்கள். வீட்டில் எல்லோருமே சந்தோசமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். பின் சேது, தமிழுக்காக பொருட்கள் வாங்கி வைத்திருக்கும் விஷயத்தை அறிந்த அப்பத்தா ரொம்ப சந்தோஷப்படுகிறார். அதை பற்றி சேதுவிடம் கேட்கிறார். ஆனால், சேது எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.இன்றைய எபிசோட்: