தூக்கத்தில் எழுந்து தமிழ்செல்வி செய்யும் அமர்க்களம், பழிவாங்க துடிக்கும் தாமரை - சின்ன மருமகள்

By subhashini · 6/3/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சாவித்திரி பசியோடு இருப்பதை பார்த்து அப்பத்தா சாப்பாடு கொடுத்தார். அதற்கு பின் எல்லோருமே அதே இடத்தில் படுத்து உறங்குகிறார்கள். அப்போது வானில் எரிகள் போவதால் தமிழ்-சேது இருவரும் தங்களுடைய ஆசையை சொன்னார்கள். அதற்குப்பின் எல்லோரும் தூங்கி எழுந்து மீண்டும் தங்களுடைய பாத யாத்திரையை தொடங்கினார்கள். அப்பத்தா, நானும் நடக்கிறேன் என்றார். எல்லோரும் வேண்டாம் என்று சொல்லியுமே அப்பத்தான் கேட்கவில்லை. வீட்டில் எல்லோரும் சந்தோஷமாக முருகனின் பாட்டை பாடிக்கொண்டு நடக்கிறார்கள்

தமிழும், அப்பத்தாவுடன் சேர்ந்து நடந்து வந்தார். கோயில் நெருங்கும் நேரத்தில் அப்பத்தா மயக்கம் போட்டு விழுந்து விட்டார். எல்லோருமே பதறி விட்டார்கள். எல்லோருமே பரிகாரம் நின்று விடுமோ? என்று பயத்தில் இருந்தார். அந்த சமயம் பார்த்து முருகருடைய ஊர்வலம் வருகிறது. அப்போது அந்த கோயில் பூசாரி, நீங்கள் இருப்பது முருகன் சன்னதியில் தான். இன்னும் ஐந்து நிமிடத்தில் கிரகணம் முடிய போகிறது. உங்கள் மனதில் இருக்கும் குறைகளை எல்லாம் முருகனிடம் சொல்லுங்கள் என்றார். பின் ராஜாங்கம் குடும்பத்தில் உள்ள எல்லோருமே முருகனை கும்பிட்டு தங்களுடைய பரிகாரத்தை முடித்தார்கள்.

சின்ன மருமகள்:

பாதயாத்திரியை முடித்துவிட்டு ராஜாங்கம் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து விட்டார்கள். ராஜாங்கம், எல்லோருமே தான் சொன்ன வார்த்தைக்காக பாதயாத்திரை நடந்ததற்காக நன்றி என்றார். இன்னொரு பக்கம் சாவித்திரி, ஈஸ்வரியின் சதி செய்து தான் திருமணம் நடந்தது என்று எல்லா விஷயத்தையும் சொன்னார். இதனால் தாமரைக்கு பயங்கர கோபம் வருகிறது. அப்போது வந்த காமேஷிடம் சாவித்திரி- தாமரை இருவரும் கேட்டார்கள். காமேஷ், நான் உண்மையாலுமே தாமரையை காதலிக்கிறேன் என்றெல்லாம் டயலாக் பேசி இருந்தார். இதனால் தாமரை இன்னும் கோபப்பட்டார். இன்னொரு பக்கம் சேது- தமிழ் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பாகவும் பாசமாகவும் நடந்து கொண்டார்கள்.

இன்றைய எபிசோட்:

இன்று எபிசோட்டில் தாமரை, ராஜாங்கத்திடம் எல்லா உண்மையையும் சொல்லி நியாயம் கேட்க சொல்கிறார். சாவித்திரி, தாமரையை தடுத்து நிறுத்தி இதற்கு நாம் வேறு வழியில் ஈஸ்வரிக்கு பதிலடி கொடுக்கலாம். பொறுமையாக இரு என்று சமாதானம் செய்கிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி,
பரிகாரம் நிறைவேறியது என்று ராஜாங்கம் குடும்பத்தில் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஆனால், தமிழ்- சேது இருவரும் சேர்ந்து வாழ மாட்டார்கள். அதை நடத்த விட மாட்டேன் என்று வில்லிப்போல் பேசிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் தமிழ்ச்செல்வி தூக்கத்தில் எழுந்து உட்கார்ந்து அழுது கொண்டிருக்க சேதுபதி விசாரிக்கிறார். அப்போ தமிழ் செல்வி, நான் கரப்பான் பூச்சியை மிதித்து விட்டேன். என்னால் ஒரு உயிர் போனவிட்டது. அந்த பாவம் எனக்கும் என் குழந்தைக்கும் வந்துவிடும் என்று ஏதேதோ சொல்லி அழுகிறார். சேது, கோழி ஆட்டை சாப்பிடும் போது பாவம் வரவில்லையா? என்று கேட்டவுடன் தமிழ்ச்செல்வி கோபப்பட்டு கத்துகிறார். அதற்குப்பின் ராஜாங்கம், அப்பத்தா எல்லோருமே பரிகாரம் நல்லபடியாக நடந்து முடிந்ததை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full