ராஜாங்கம் வீட்டில் கோலாகலமாக நடக்கும் விசேஷம், சந்தோஷத்தில் சேது-தமிழ்செல்வி - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தாமரை, காமேஷிற்கு ஃபோன் செய்து நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி வீட்டில் வந்து பெண் கேட்க சொன்னார். காமேஷ், என்னால் யாரிடமும் கைகட்டி பதில் சொல்ல முடியாது என்று திமிராக பேசிவிட்டு போனை வைத்து விட்டார். இன்னொரு பக்கம் தமிழ்-சேது சந்தோஷமாக பேசிக்கொண்டு வந்தார்கள். அப்போது ரவுடிகள் சேதுவை சேதுவை தாக்கினார்கள். ஒரு கட்டத்தில் சேதுவை அந்த ரவுடிகள் மடக்கி பிடித்து விட்டார்கள்.
சேதுவை அடித்துப் போட்டுவிட்டு தமிழை கடத்தி சென்று விட்டார்கள். அந்த பக்கம் வந்தவர்கள் சேதுவின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி விசாரித்தார்கள். சேதுவும் கண்விழித்து தமிழை தேட்டார். பின் சேது, ராஜாங்கத்திற்கு போன் செய்து நடந்ததை சொன்னார். ராஜாங்கம், சேது, தமிழின் அப்பா, கருப்பு எல்லோரும் தமிழை தேடி சென்றார்கள். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, தன் உறவுக்கார தம்பியிடம் தமிழை கொலை செய்ய சொல்கிறார்.
சின்ன மருமகள்:
அவருமே தமிழை கொலை செய்வதற்கு தன் ஆட்களிடம் சொன்னார். தமிழ் ரொம்பவே பயந்து போய் இருந்தார். இன்னொரு பக்கம் எல்லோரும் தமிழை தேடி அலைகிறார்கள். ஒரு கட்டத்தில் கருப்பு , தன் வண்டியின் டயர் அடையாளத்தை வைத்து தமிழிருக்கும் இடத்திற்கு சென்று விடுகிறார்கள். சேது அங்கு இருக்கும் ரவுடிகள் எல்லாம் அடித்துப் போட்டு விட்டு தமிழை காப்பாற்றி விட்டார். கடைசியில் போலீஸ் அந்த ரவுடி கும்பலை கைது செய்து விடுகிறது.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் நல்லபடியாக ராஜாங்கம் குடும்பத்தினர் வைர வேலை எடுத்துக்கொண்டு கோயிலுக்கு போகிறார்கள். அங்கு கோயிலில் வேலிற்கு நல்லபடியாக அபிஷேகம் செய்து முருகனின் கையில் வைத்து விடுகிறார்கள். ராஜாங்கம், சேது, தமிழ் மூவருமே சந்தோஷப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டில் தமிழ், சேது இருவருக்கும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று அப்பத்தா
சாமியிடம் வேண்டிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து ராஜாங்கம், சேது, தமிழ் எல்லோருமே வீட்டிற்கு வருகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
வீட்டில் உள்ள எல்லோருமே தமிழ்-சேதுவை விசாரிக்கிறார்கள். பின் ராஜாங்கம் வீட்டில் வளைகாப்பிற்கான ஏற்பாடுகளால் நடந்து கொண்டிருக்கின்றது. தமிழை வளைகாப்பிற்கு தயார் செய்கிறார்கள். தமிழ்ச்செல்வியும் அழகாக தயாராகி விடுகிறார் அப்போது சேது, தமிழ்செல்வியின் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறார். பின் தமிழ்- சேது இருவரும் ரொம்ப சந்தோஷமாக தங்களுடைய வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வளைகாப்பிற்காக எல்லோரும் வந்து விடுகிறார்கள் .