மருந்தை தேடி காட்டுக்குள் செல்லும் சேது, தமிழ் செய்த வேலையால் பதறிய குடும்பம் - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் மருத்துவர்கள் எல்லோருமே அவர்களுக்கு உடனடியாக சிகிச்சையும் கொடுக்கிறார்கள். சேதுவும் தன்னுடைய குடும்பத்தை நினைத்து ரொம்பவே பரிதவித்து நிற்கிறார். இன்னொரு பக்கம் போஸ், எதிரியுடன் சேர்ந்து ராஜாங்கம் இருக்கும் இடத்திற்கு வந்தார்கள். வண்டு கடித்து ராஜாங்கம் குடும்பத்தில் எல்லோருமே ஹாஸ்பிடலில் அவஸ்தை பட்டு இருப்பதை அறிந்து சந்தோஷப்பட்டார்கள். போஸ், தன்னுடைய அம்மா, தங்கை இருவருமே பாதிக்கப்பட்டு இருப்பதை நினைத்து கவலைப்பட்டார்.
நேற்று எபிசோட்டில் ஹாஸ்பிடலில் வழி தாங்க முடியாமல் எல்லோருமே கதறி அழுதார்கள். இன்னொரு பக்கம் சேது, இதற்கு என்னதான் வழி? என்று கேட்டார். அதற்கு அந்த கிராம மக்கள், சித்தர் சொல்லும் இடத்திற்கு போனால் தான் அந்த மருந்து கிடைக்கும் என்றார்கள். உடனே சேது, அந்த சித்தரை தேடி சொன்னார். தமிழுமே சேதுவுக்கு தெரியாமல் அவர் பின்னாடியே சொன்னார். அப்போது அந்த சித்தர், பல மைல் தூரத்தில் ஆயிரம் கணக்கான வண்டுகள் வசிக்கும் கூட்டில் தான் வண்டு கடிக்கான மருந்து இருக்கிறது. ஆனால், அதை எடுத்து வருவது ரொம்பவே கஷ்டம்.
சின்ன மருமகள்:
அந்த இடத்திற்கு போனவர்கள் யாருமே உயிருடன் வந்ததே கிடையாது என்றெல்லாம் சொன்னார். உடனே சேதுவும் அந்த வண்டு இருக்கும் இடத்திற்கு செல்ல நினைத்தார். தமிழ்ச்செல்வியுமே மருந்தை கண்டுபிடிப்பதற்காக காட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் சென்றார். இன்னொரு பக்கம் ராஜாங்கம் குடும்பத்தில் எல்லோருமே வழி தாங்க முடியாமல் கதறினார்கள். மருத்துவர்கள் போடும் மருந்து எதுவும் பயனளிக்கவில்லை. எல்லோருமே அபாய கட்டத்திற்கு சென்று விட்டார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஹாஸ்பிடலில் ஈஸ்வரியின் மகள், தாமரையின் மகள் இருவருமே மூச்சு திணறி இறந்து போனது போல காண்பிக்கிறார்கள். ராஜாங்கமும் வலி தாங்க முடியாமல் கத்துகிறார். அப்பத்தா, மலர், கண்மணி எல்லோருமே வெளியில் ரொம்பவே பதறிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சேது, நான் காட்டுக்குள் சென்று மருந்து எடுத்து வருகிறேன் என்று செல்கிறார். சேது செல்லும் வழியில் வந்த சாமியை கும்பிட்டு விட்டு செல்கிறார். ஆனால், தமிழ் யாரிடமும் சொல்லாமல் மருந்தை தேடி செல்கிறார்.
சீரியல் ட்ராக்:
தமிழ் ஹாஸ்பிடலில் இல்லை என்பது அதற்கு பிறகு தான் எல்லோருக்குமே தெரிய வருகிறது. தமிழ் காட்டுக்குள் செல்வது யாருக்குமே தெரியாது. தமிழை தேடி எல்லோருமே அழைக்கிறார்கள். அப்போது அங்கு வந்த நபர் தமிழ்ச்செல்வி காட்டுக்குள் சென்ற விஷயத்தை சொல்கிறார். அதனால் வீட்டில் உள்ள எல்லோருமே ரொம்பவே பதறி போகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.