கண்மணி வாழ்க்கைக்காக போராடும் தமிழ்செல்வி, ராஜாங்கம் எடுக்க போகும் முடிவு என்ன? சின்ன மருமகள்

By subhashini · 12/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கண்மணி மண்டபத்திற்கு இன்னும் வரவில்லை என்ற விஷயம் ஈஸ்வரிக்கு தெரிந்துவிட்டது. இதனால் கண்மணி அம்மாவிடம் விசாரித்தார். பின் ஈஸ்வரியின் கணவர் கண்மணியை தேடி அலைந்து விட்டு மண்டபத்திற்கு வந்தார். அப்போது அவர், கண்மணியை எங்குமே காணவில்லை காணவில்லை என்று சொன்னார். இந்த விஷயம் ராஜாங்கத்திற்கு தெரிந்து விட்டது. என்ன செய்வது என்று புரியாமல் ராஜாங்கம் ரொம்பவே பதறினார். இன்னொரு பக்கம் ஆறுமுகம், கண்மணியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றார்.

அங்கு இருவரும் மாலை மாற்றி, ஆறுமுகம் கண்மணிக்கு தாலி கட்ட போனார். அந்த சமயம் வந்த தமிழ்ச்செல்வி, திருமணத்தை நிறுத்தி நீ செய்வது ரொம்ப தவறு கண்மணி. நீங்கள் ஆசைப்பட்ட மாதிரி எல்லோர் சமூகத்துடன் கல்யாணம் நடக்க வேண்டும். தயவுசெய்து நான் சொல்வதைக் கேள். நாம் மண்டபத்திற்கு போகலாம் கிளம்பு என்றார். தமிழ்ச்செல்வி செல்வதை கேட்டு ஆறுமுகம் மனம் மாறி மாலையை கழட்டி போட்டார். பின் தமிழ், கண்மணி, ஆறுமுகம் மூவருமே மண்டபத்திற்கு கிளம்பி போனார்கள்.

சின்ன மருமகள் சீரியல்:

நேற்று எபிசோட்டில் கருப்பு, தாமரை இருவருமே மண்டபத்திற்கு அவசர அவசரமாக ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் கல்யாண பெண் காணவில்லை என்று மண்டபத்தில் எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராஜாங்கத்திற்கு போன் செய்தவர் ஆறுமுகம், கண்மணிக்கு திருமணம் நடந்து விட்டது. அதை நடத்தி வைத்ததே தமிழ்ச்செல்வி தான் என்று சொல்லிவிட்டார்கள். இதனால் கொந்தளித்த சேது, தமிழ்செல்வியை வெட்டுவேன் குத்துவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். உடனே இது தான் சந்தர்ப்பம் என்று தாமரையின் அம்மாவும், ஈஸ்வரியும் தமிழை பற்றி ரொம்ப மோசமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

நேற்று எபிசோட்:

அந்த சமயம் பார்த்து தமிழ்செல்வி, கண்மணி- ஆறுமுகத்தை அழைத்து வந்தார். இதனால் மண்டபத்தில் உள்ள எல்லோருமே தமிழ்செல்வியை திட்டிக் கொண்டிருக்க, கோபத்தில் சேது, தமிழை அடிக்கப் போனார். உடனே தடுத்து நிறுத்திய கண்மணி, எனக்கு கல்யாணம் நடக்கவே இல்லை. நான் ஆறுமுகத்தை காதலிக்கிறேன். எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை. இருந்தாலும் என்னுடைய சம்மதம் கேட்காமல் முடிவு செய்துவிட்டார்கள். இதை பற்றி அண்ணியிடம் சொன்னேன். ஆனால், அவர்கள் எதுவுமே செய்ய முடியவில்லை என்று நடந்ததை சொல்லி அழுதார். இதைக் கேட்டு மொத்த குடும்பமே ஷாக் ஆகி நிற்கிறது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கண்மணி, ஆறுமுகத்தை தான் திருமணம் செய்து கொள்வேன். அண்ணி நம்பிக்கை கொடுத்து அழைத்து வந்ததால் தான் இங்கு வந்தேன். நாங்கள் கல்யாணம் செய்ய போனதற்கும் அண்ணிக்கும் சம்மந்தமே இல்லை என்று சொன்னார். இதை கேட்டு சேது அமைதியாகி விடுகிறார். பின் கோபத்தில் ஈஸ்வரியின் கணவர், ஆறுமுகத்தை அடித்து வெளியே துரத்தி விடுகிறார். கண்மணி எவ்வளவு சொல்லியுமே கேட்கவில்லை. பின் சேது, கண்மணிக்காக சப்போர்ட் செய்து பேசுகிறார். ஆனால், ஈஸ்வரி ஒத்துக் கொள்ளவே இல்லை.

சீரியல் ட்ராக்:

ராஜாங்கம் மாப்பிள்ளை வீட்டில் பேசி மாப்பிள்ளையை மணமேடைக்கு போக செல்கிறார். உடனே தமிழ் செல்வி, மாப்பிள்ளை நல்லவனே கிடையாது. இந்த கல்யாணம் நடக்கக்கூடாது என்று சொல்கிறார். கோபத்தில் ஈஸ்வரி, தமிழ்செல்வியை திட்டி வெளியில் போக சொல்கிறார். அதற்குப்பின் தாமரையின் அம்மா, கருப்பு- தாமரை இருவருமே வந்து கொண்டிருக்கிறார்கள். மாப்பிள்ளை பற்றி அவர்கள் ஏதோ சொல்ல வேண்டுமாம். அதுவரை கல்யாணத்தை நடத்த வேண்டாம் என்கிறார்கள். இதைக் கேட்டு ராஜாங்கத்திற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full