போஸை சிக்க வைக்க சாவித்திரி செய்த சதி வேலை, தமிழ் செய்யும் அட்ராசிட்டி - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் போஸ் மருந்தை எடுக்கவில்லை என்று சேதுவுக்கு தெரிந்து விட்டது. பின் இதைப்பற்றி சேது தன்னுடைய அண்ணனிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். அதற்கு அண்ணன், வீட்டில் உண்மையை சொல்லலாம் என்றார். அதற்கு சேது, அப்பா நம்ப மாட்டார். ஆதாரத்துடன் அப்பாவிடம் சொல்லணும் இல்லையென்றால் சித்தியே பழைய பகையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு பிரச்சனை எழுப்புவார்கள் என்றார். இன்னொரு பக்கம் ஈஸ்வரியின் அண்ணன் மகள், தங்கை மகன் இருவருமே போஸ் திருமணத்திற்காக வந்திருந்தார்கள்.
அவர்கள் மாடன் உடையில் இருப்பதால் அப்பத்தா திட்டினார். பின் வீட்டில் உள்ள எல்லோரையும் நலம் விசாரித்துவிட்டு ஈஸ்வரி, அவர்கள் இருவருக்கும் வீட்டை சுத்தி காண்பித்தார். அதற்குப்பின் சேது, புதிய ஸ்பீக்கரை வாங்கி வந்து வீட்டில் வைத்தார். அதில் இனிமையான பாடல்களை எல்லாம் போட வைத்தார். இதைப்பற்றி தனம், மலர் இருவரும் அந்த பொருள் கொண்டு வந்த நபர்களிடம் விசாரித்தார்கள். அதற்கு அந்த நபர், தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதால் அவர் ஸ்பீக்கர் வேண்டும் என்று கேட்டார். அதுவும் இனிமையான பாடல்கள் அதில் இறக்கி கொடுக்க சொன்னார்.
சின்ன மருமகள்:
அதனால்தான் நாங்களும் கொண்டு வந்து வைத்தோம் என்று சொன்னவுடன் இருவரும் சந்தோஷப்பட்டார்கள். அதற்குப் பின் தாமரை, தன்னிடம் போஸ் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி சொன்னார். இதை கேட்டு சாவித்திரி பயங்கரமாக கோவப்பட்டார். அதற்கு தாமரை, போஸை கையும் களவுமாக மாட்டிவிட்டு இந்த கல்யாணத்தை நிறுத்த வைக்க வேண்டும். அதற்கு என்னிடம் திட்டம் இருக்கிறது. நீ காவியா உடைய போன் நம்பரை மட்டும் எப்படியாவது எடுத்து வந்து விடு என்றார்.
அதற்கு சாவித்திரி, ஈஸ்வரி போனில் நம்பரை எடுக்கப் போனார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சாவித்திரி, வீடு சுத்தம் பண்ணுவது போல் ஈஸ்வரி ரூம்க்கு சென்று அவருடைய மொபைலில் இருந்து காவியாவிற்கு மெசேஜ் அனுப்பி வரவேற்க்க ஒத்துக்கொள்கிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, தன்னுடைய அண்ணன் மகளை வீடு முழுவதும் சுத்தி காண்பிக்க அழைத்து செல்கிறார். அப்போது சேது மீது ஈஸ்வரி அண்ணன் மகள் மோதி விடுகிறார். இதை பார்த்த ஈஸ்வரி, எப்படியாவது சேதுவிற்கு தன்னுடைய அண்ணன் மகனை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப் பின் சாவித்திரி,ஈஸ்வரி போஸ் திருமணத்தை திருமணத்தை பற்றி பேசி வாக்குவாதம் செய்து கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் கல்லூரியில் தமிழ்செல்வி, எங்கு பார்த்தாலும் சேது முகம்தான் தெரிகிறது. மாமா மாமா என்று சேதுவின் முகம் தெரிவார்கள் எல்லாம் பார்த்து தமிழ் அழைக்கிறார். இதை கேட்டு கல்லூரி ஆசிரியர்கள் தமிழை திட்டி வெளியே அனுப்புகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.