புதைக்குழிக்குள் சிக்கி கொண்ட தமிழ்செல்வி, சேது காப்பாற்றுவாரா? விறுவிறுப்பில் சின்ன மருமகள்

By subhashini · 3/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கிராம மக்கள், காட்டுக்குள் போனவர்கள் யாருமே உயிருடன் வந்ததே கிடையாது என்றெல்லாம் சொன்னார்கள். சேதுவும் அந்த வண்டு இருக்கும் இடத்திற்கு செல்ல நினைத்தார். தமிழ்ச்செல்வியுமே மருந்தை கண்டுபிடிப்பதற்காக காட்டுக்குள் யாருக்கும் தெரியாமல் சென்றார். இன்னொரு பக்கம் ராஜாங்கம் குடும்பத்தில் எல்லோருமே வழி தாங்க முடியாமல் கதறினார்கள். மருத்துவர்கள் போடும் மருந்து எதுவும் பயனளிக்கவில்லை. எல்லோருமே அபாய கட்டத்திற்கு சென்று விட்டார்கள்.

நேற்று எபிசோட்டில் ஹாஸ்பிடலில் ஈஸ்வரியின் மகள், தாமரையின் மகள் இருவருமே மூச்சு திணறி இறந்து போனது போல காண்பித்தார்கள். ராஜாங்கமும் வலி தாங்க முடியாமல் கத்தினார். அப்பத்தா, மலர், கண்மணி எல்லோருமே வெளியில் ரொம்பவே பதறிக் கொண்டிருந்தார்கள். அப்போது சேது, நான் காட்டுக்குள் சென்று மருந்து எடுத்து வருகிறேன் என்றார். சேது செல்லும் வழியில் வந்த சாமியை கும்பிட்டு விட்டு சென்றார். ஆனால், தமிழ் யாரிடமும் சொல்லாமல் மருந்தை தேடி சென்றார்.

சின்ன மருமகள்:

பின் தமிழ் ஹாஸ்பிடலில் இல்லை என்பது அதற்கு பிறகு தான் எல்லோருக்குமே தெரிய வந்தது. தமிழ் காட்டுக்குள் செல்வது யாருக்குமே தெரியாது. தமிழை எல்லோருமே தேடி பார்த்தார்கள். அப்போது அங்கு வந்த ஒரு நபர் தமிழ்ச்செல்வி காட்டுக்குள் சென்ற விஷயத்தை சொன்னார். அதனால் வீட்டில் உள்ள எல்லோருமே ரொம்பவே பதறி போனார்கள்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ்- சேது இருவருமே காட்டுக்குள் சென்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செல்லும் வழியில் எல்லாம் விச உயிரினங்கள் வருகிறது. அந்த தடைகளை தாண்டி தமிழ்-சேது செல்கிறார்கள். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலுக்கு வந்த போஸ், மருந்து காட்டுக்குள் தான் இருக்கிறது என்று தெரிந்து கொண்டு செல்கிறார். எல்லோரும் வேண்டாம் என்று தடுக்கமே போஸ் கேட்கவில்லை காட்டுக்குள் சென்று விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் தமிழ்-சேது இருவரும் வெவ்வேறு பாதையில் செல்கிறார்கள். அப்போது தமிழ், செல்லும் வழியில் எலும்புக்கூடு தொங்கிருப்பதை பார்த்து பயந்து ஒரு புதை குழியில் விழுந்து விடுகிறார்.
பின் தமிழ் காப்பாற்றுங்கள் என்று கத்திக்கொண்டு இருக்கிறார். தமிழ் கத்தும் சத்தம் சேதுவிற்கு கேட்டு விடுகிறது.பின் தமிழ் போன வழியில் சேது செல்கிறார். அதற்குள் தமிழ் புதைக்குழிக்குள் சென்று விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full