ஈஸ்வரியை மிரட்டும் தமிழ்ச்செல்வி, சேதுக்கு வந்த சோதனை - விறுவிறுப்பில் சின்ன மருமகள்

By subhashini · 1/9/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஈஸ்வரி, சேது- தமிழ் இருவருக்குமே சேர்ந்து வாழ விருப்பமில்லை. எதற்கு தேவையில்லாமல் இப்படி எல்லாம் செய்கிறீர்கள். என்று கோபம் வருமாறு பேசிக் கொண்டிருந்தார். உடனே சேது- தமிழ் இருவருமே சேர்ந்து வாழ முடியாது என்று சொன்னார்கள். பின் தமிழின் அம்மா, இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணம் நான் தான். என் மகளின் உயிரை காப்பாற்ற பொய் சொன்னேன். இதற்கும் என் மகளுக்கும் சம்பந்தமில்லை என்று எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு அழுதார். பின் ராஜாங்கம், அப்பத்தாவிற்காக இந்த முடிவு எடுத்து தான் ஆக வேண்டும். நீங்கள் இருவருமே சேர்ந்து பேசி முடிவெடுங்கள் என்று சொன்னார்.

ஒரு வழியாக மனம் மாறி சேது- தமிழ் இருவருமே சேர்ந்து வாழ்வதாக அப்பத்தா முன்பு உறுதிமொழி எடுத்தார்கள். அந்த சமயம் பார்த்து அப்பத்தா தும்பி விட்டார். அப்பத்தா இறக்கவில்லை என்பது எல்லோருக்குமே தெரிகிறது. அதோடு இது அப்பத்தா நாடகம் என்பதையும் புரிந்துகொண்டு மொத்த வீடுமே கோபப்பட்டார்கள். அப்போது சேது, நான் இவளுடன் சேர்ந்து வாழவே மாட்டேன் என்று திட்டினார். தமிழ் செல்வி, நான் என் தன்மானத்தை இழந்து சேர்ந்து வாழ முடியாது என்று சொன்னார். பின் இருவருமே அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே அப்பத்தா செய்த வேலையை பார்த்து திட்டி இருந்தார்கள்.

சின்ன மருமகள் சீரியல்:

மொத்த குடும்பமும் அப்பத்தா செய்த வேலையை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். தாமரையின் அம்மா, ஈஸ்வரி எல்லோருமே அப்பத்தாவை திட்டிக் கொண்டிருந்தார்கள். உடனே ராஜாங்கம், அம்மா செய்தது தவறுதான். இருந்தாலுமே அவர் குடும்ப நலனுக்காக தான் செய்தார். தயவு செய்து இதைப் பற்றி இனிமேல் யாரும் பேச வேண்டாம் என்று சென்று விட்டார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி கல்லூரிக்கு தாமதமாக சென்றதால் ஆசிரியர் திட்டி வார்னிங் கொடுத்தார்.

கடந்த வாரம் எபிசோட்:

இன்னொரு பக்கம் அப்பத்தாவிடம் தாமரை அம்மா, ஈஸ்வரி இருவருமே பேசி இருந்தார்கள். அப்போது அப்பத்தா, நான் உங்களுக்கு பணம், நகை தருகிறேன் என்று சொன்னேனா? என்று இருவரையுமே வெளுத்து வாங்கினார். அதற்குப்பின் அப்பத்தாவிடம் சேது- ராஜாங்கம் இருவருமே பேசினார்கள். அப்போது ராஜாங்கம், நீ குடும்ப ஒற்றுமைக்காக தான் இப்படி எல்லாம் செய்தாய் அம்மா. நீ செய்ததை நினைத்து எனக்கு வருத்தம் இல்லை என்றார். சேதுவுமே தன்னுடைய பாட்டியிடம் ரொம்ப எமோஷனலாக பேசினார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரியின் மகன் போஸ் வீட்டிற்கு வந்திருக்கிறார். இதை அறிந்த தமிழ், எதற்காக உங்கள் மகன் வீட்டுக்கு வந்தான்? ஒழுங்கு மரியாதையாக வெளியே போக சொல்லுங்கள் என்கிறார். அதற்கு ஈஸ்வரி, அப்பத்தா இறந்தது நினைத்து தான் அவன் வந்தான். அதுக்காக அவன் எப்போதுமே வெளியே இருக்க முடியாது என்று சொல்கிறார். தமிழ், உங்கள் மகன் இங்கிருந்து கிளம்பவில்லை என்றால் அவன் மாமாவை கொலை செய்ய முயற்சித்த விஷயத்தை சொல்லி விடுவேன் என்று மிரட்டுகிறார். ஈஸ்வரியும் எதுவும் பேசாமல் அமைதியாகிறார்.

சீரியல் ட்ராக்:

பின் போஸ்ஸிடம் ஈஸ்வரி, நீ இங்கிருந்து கிளம்பு. இந்த தமிழின் ஆட்டத்தை அடக்கி விட்டு உன்னை கூப்பிடுகிறேன் என்று சொல்கிறார். அதற்குப்பின் சேது வீராப்பிற்காக தமிழ்ச்செல்வியை வெறிப்பேற்ற சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிட்டார். இதனால் ஜீரணம் ஆகாமல் சேது வாமிட் செய்கிறார். இதையெல்லாம் பார்த்த தமிழ் அவருக்கு நாட்டு வைத்தியம் செய்கிறார். அதற்குப் பிறகு சேது உடல்நிலை சரியாகிறது. பின் சேது, எதற்காக இதை செய்தாய் என்று கேட்கிறார். அதற்கு தமிழ், இருவரும் ரூமேட். அதனால் தான் செய்தேன் என்றார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full