சேதுவை நினைத்து வருத்தப்படும் தமிழ், குடும்பமாக சேர்ந்து சதி வேலை செய்யும் ஈஸ்வரி - சின்ன மருமகள்

By subhashini · 28/10/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் அப்பத்தா, தமிழ்ச்செல்வி எல்லாருமே சேர்ந்து தீபாவளி பலகாரங்களை செய்தார்கள். மறுநாள் காலையில் தீபாவளி கொண்டாட்டத்திற்காக அப்பத்தா, தமிழ் - மலர் இருவருக்குமே புது புடவை, நகைகளை எல்லாம் கொடுத்து விட்டார். ஆனால், தமிழ்ச்செல்வி வேண்டாம் என்றார். இருந்தாலுமே வலுக்கட்டாயமாக தனம் அவர்களை கட்டிக்கொள்ள சொன்னார். அதற்குப் பின் சேதுவும் தீபாவளிக்கு தயாரானார்.

தீபாவளியை ராஜாங்கம் குடும்பத்தில் எல்லோருமே சேர்ந்து கொண்டாடுகிறார்கள். பட்டாசு, கிடா விருந்து, போட்டோ சூட் என்று அமர்க்களமாக தீபாவளியை கொண்டாடுகிறார்கள். சேதுவுமே அப்பத்தாவின் விருப்பத்திற்காக தமிழ்செல்வி உடன் சேர்ந்து போட்டோ எல்லாம் எடுத்துக் கொண்டார். இதை பார்த்து அப்பத்தா ரொம்பவே சந்தோஷப்பட்டார். பின் சினிமா, பாட்டு, கச்சேரி என்று ரொம்ப குதூகலகமாக தீபாவளி இருந்தது.

சின்ன மருமகள்:

ராஜாங்கம் வீட்டில் தீபாவளி பண்டிகையை ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடினார்கள். ஒவ்வொருவருமே தங்களுடைய நடிப்பு திறமையை காண்பித்தார்கள். அதற்குப்பின் அப்பத்தா போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு எல்லாம் கொடுத்தார். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே பட்டாசு வெடித்தார்கள். இதையெல்லாம் பார்த்து ஈஸ்வரி பயங்கரமாக வயிறு எரிகிறார். போஸ், தமிழை பழிவாங்க வேண்டும் என்று பட்டாசு பாக்சில் மத்தாப்பை எரிய வைத்து போட்டு விட்டார். அந்த சமயம் பார்த்து தமிழ்ச்செல்வி பட்டாசு எடுக்க வந்தார்.

இன்றைய எபிசோட் :

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பட்டாசு வெடித்ததில் தமிழ் மயக்கம் போட்டு கீழே விழுந்து விடுகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் ராஜாங்கம் குடும்பத்தில் எல்லோருமே பதறிக் கொண்டிருக்கிறார்கள். உடனே சேது மாடியில் இருந்து கீழே குதித்து தமிழை காப்பாற்றி விடுகிறார். பின் ராஜாங்கம், பட்டாசு வெடித்த வரையும் போதும் என்று திட்டுகிறார். இன்னும் தமிழ் அந்த அதிர்ச்சியில் இருக்கிறார். இதனால் அய்யனார் தமிழுக்கு சுத்தி போடுகிறார். இன்னொரு பக்கம் அப்பத்தா, தமிழ்ச்செல்வியை காப்பாற்றியதால் சேதுபதியை ரொம்ப பெருமையாகவும் பேசி கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் அமைச்சர் வீட்டில் இருந்து போஸை பெண்பார்க்கும் விஷயத்தைப் பற்றி ஈஸ்வரிடம் சொல்கிறார்கள். இதனால் ஈஸ்வரி, தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மகன் மற்றும் மகளிடம் எப்படியாவது இந்த சம்மந்தத்தை முடித்து விட வேண்டும் என்றெல்லாம் சதி திட்டம் போடுகிறார். அதற்குப்பின் சேது மேலிருந்து கீழே விழுந்ததால் காலில் அடிபட்டு இருக்கிறது. இதை அறிந்த தமிழ், சேதுவின் காலில் எண்ணெய் தேய்த்து நீவி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full