தமிழ்செல்வி சொன்ன வார்த்தையால் கோபப்பட்ட சேது, மாப்பிள்ளை சுயரூபம் தெரிய வருமா? சின்ன மருமகள்

By subhashini · 29/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்ச்செல்வி வேலை தேடி அலைந்தார். அப்போது ஒரு ஓட்டலில் வேலைக்கு ஆள் தேவை என்பதை பார்த்து அந்த ஹோட்டல் ஓனரிடம் பேசி இருந்தார். அந்த ஹோட்டல் ஓனருமே வேலைக்கு எடுத்துக் கொண்டார். தமிழ்செல்வி வேலையை முடித்து வீட்டிற்கு வர லேட் ஆனது. இன்னொரு பக்கம் செய்து தமிழ் செல்வி வீட்டுக்கு வரவில்லை என்று ஈஸ்வரி, சேதுவிடம் ஒன்றுக்கு இரண்டாக ஏற்றி விட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வி இடம் சேது, எதற்காக லேட்டாக வந்தாய்? என்று கேட்டு சண்டை போட்டார்.

உடனே தமிழ்ச்செல்வி, ஏன் கல்லூரி முடித்து லேட்டாக வந்தேன் என்று தன்மையாக கேளுங்கள் பதில் சொல்வேன். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் என்னை பற்றி தவறாக சொல்வதற்கெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னார். மறுநாள் காலையில் தமிழ்செல்வி நேரம் ஆகவே எழுந்து வேலைக்கு சென்று விட்டார். பின் வேலைக்கு சென்ற இடத்தில் தாமதமாக வந்ததால் அந்த ஓனர் தமிழ் செல்வியை திட்ட, இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தமிழ் செல்வி தன்னுடைய வேலை எல்லாம் முடித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பினார். இன்னொரு பக்கம் சேது தூங்கி எழுந்தவுடன் தாமரையும், அவர் அம்மாவும் தமிழ்செல்வி நேரமாக எழுந்து கிளம்பி சென்றதைப் பற்றி சொன்னார்கள். இதனால் கோபப்பட்ட சேது திட்டி விட்டு சென்றார்.

சின்ன மருமகள் சீரியல்:

நேற்று எபிசோட்டில் கண்மணியின் கல்யாண பத்திரிகையில் சேது பெயருக்கு பக்கத்தில் தமிழ்ச்செல்வியின் பெயர் வந்திருக்கிறது. இதை பார்த்தவுடன் வீட்டில் உள்ள எல்லோருமே சண்டை போட்டார்கள். அப்பத்தா, மலர் இருவருமே அந்த பெயர் அப்படியே இருக்கட்டும் என்றார்கள். அப்போது சேது, அவள் என் வாழ்க்கை விட்டு போன பிறகு பெயர் எதற்கு? என்று சொல்லி விட்டார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி ஹோட்டலில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தார். அந்த ஓட்டலுக்கு சேது தன்னுடைய நண்பரை அழைத்து வந்தார். தமிழ் செல்வி ஓட்டலில் வேலை செய்வதை பார்த்து சேது ஷாக் ஆனார். பின் தமிழ்ச்செல்வி சாப்பாட்டை பரிமாறும்போது அங்கு குறுக்கே வந்த சிறுவன் தமிழ்செல்வியை தள்ளி விடுகிறான்.

நேற்று எபிசோட்:

அதனால் சேது மீது தண்ணீர் கொட்டி விட்டது. இதை பார்த்த ஹோட்டல் ஓனர் தமிழ்ச்செல்வியை கண்டமேனிக்கு எல்லார் முன் அவமானப்படுத்தி விட்டார். சேதுவால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்கு பின் ஓனரிடம் சேது, அந்த பொண்ணு மீது எந்த தவறும் இல்லை. யாராக இருந்தாலும் மரியாதை கொடுத்து பேசுங்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டு சென்றார். அதற்குப்பின் வேலையை முடித்துவிட்டு தமிழ்ச்செல்வி வீட்டிற்கு வந்தார். இதை பார்த்த சேதுவின் அத்தை, சித்தி எல்லோருமே கோபப்பட்டு கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். உடனே தமிழ்ச்செல்வி அவர்கள் பதிலுக்கு பதில் கொடுத்தார்.

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் சேதுவின் அத்தை,சித்தி இருவருமே மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். உடனே தமிழ் செல்வி, நான் ஓட்டலில் வேலை செய்கிறேன். அதனால் தான் வருவதற்கு லேட் ஆனது. இதெல்லாம் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கிளம்பி விடுகிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த தமிழ்செல்வி இடம் சேது, எதற்காக நீ ஓட்டலில் வேலை செய்கிறார். வேறு ஏதாவது வேலை பார்க்கலாமே? என்று சொல்கிறார். அதற்கு தமிழ்செல்வி, எனக்கு படிப்பு செலவு, வீட்டு செலவு, ஹாஸ்பிடல் செலவு என்று நிறைய செலவிருக்கிறது. அதையெல்லாம் நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் ஓட்டலில் வேலைக்கு போகிறேன் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:

மறுநாள் காலையில் கண்மணி, என் திருமணத்திற்கான வேலைகள் மும்முரமாக நடக்கிறது. ஈஸ்வரி, மாப்பிள்ளை வீட்டிற்கு போன் செய்து டீலிங் பேசுகிறார். ஆனால், மாப்பிள்ளை மொத்த குடும்பமே பிராடாக இருக்கிறது. இன்னொரு பக்கம் தமிழ்செல்வியை அம்மா, தன்னுடைய கணவரை பார்ப்பதற்காக ஜெயிலுக்கு சென்றிருக்கிறார். அப்போது தமிழ்செல்வியை பற்றி எல்லாம் சொல்கிறார். அதோடு கண்மணிக்கு கல்யாணம் நடக்கும் விஷயத்தையும் சொல்கிறார். மாப்பிள்ளை பற்றி கேட்டவுடன் தமிழ் செல்வின் அப்பா ஷாக் ஆகிறார். பின் அவர், சரியான பொம்பள பொறுக்கி. அவனுக்கு நிறைய பிரச்சனை இருக்கு. தயவு செய்து இந்த கல்யாணத்தை நிறுத்தி என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full