பிரச்சனை செய்த ரவுடிகளுக்கு பதிலடி கொடுத்த தமிழ், குழம்பி நிற்கும் சேது - பரபரப்பில் சின்ன மருமகள்

By subhashini · 12/5/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் காமேஷ் ரொம்பவே கெஞ்சி கதறுகிறார். ஆனால் தாமரை முடியாது என்றார். கடைசியில் இருவரையும் பிரித்து விட்டார்கள். அந்த சமயம் பார்த்து காமேசுக்கு லாட்டரி டிக்கெட் வின் பண்ணுவதால் லட்சாதிபதி ஆனார். அதற்குப்பின் ஈஸ்வரி, தமிழுக்கு போன் செய்து வம்பு இழுத்தார். கோபத்தில் தமிழ்ச்செல்வி, சரியான பதிலடி கொடுத்து ஈஸ்வரியின் வாயை மூட வைத்து விட்டார். அதற்குப்பின் வீட்டில் தாமரை காமேஸ் பிரிந்த விஷயத்தை பற்றி சொன்னார்கள். அதைக் கேட்டு ராஜாங்கம் ஷாக் ஆனார்.

சாவித்திரி, என் மகளுக்கு அந்த திருமணத்தில் விருப்பமே இல்லை. அவன் எங்களை ஏமாற்றி விட்டான். என் மகள் இனிமேல் அவன் பொண்டாட்டியில்லை. சேதுவும் இப்போது தனிமரமாக நிற்கிறான். ஆனால், என் மகளை திருமணம் செய்து வையுங்கள். நாம் இருவரும் சம்மந்தியாகலாம் என்றார். ராஜாங்கம் எதுவும் பேச முடியாமல் இருந்தார். ஈஸ்வரி அதெல்லாம் முடியாது என்று சண்டை போட்டார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி, சேதுவிற்கு இன்னொரு கல்யாணம் ஏற்பாடு செய்தார்கள்.

சின்ன மருமகள்:

நான் சொல்லும் போது ஆட்களை ரெடி பண்ணுங்கள். நாம் அவர்கள் வீட்டுக்கு போகணும் என்றார்.
மாணிக்கம் சந்தோஷப்பட்டார். அதற்குப்பின் வீட்டில் உள்ள எல்லோருமே சேது திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். ஈஸ்வரி- சாவித்திரி இருவருமே மாற்றி மாற்றி விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் ராஜாங்கம், சேது உடைய முடிவு தான் என்னுடைய முடிவு. அவர் யாரை திருமணம் செய்து கொள்கிறாரோ எனக்கு அது சம்பந்தம் என்று சொல்லி விட்டார்

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ஐசு, நான் சேது மாமாவை கல்யாணம் செய்து கொள்ள தயார் என்று சொல்கிறார். சேதுவால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அங்கிருந்து சேது கிளம்பி விடுகிறார்.
அதற்குப்பின் ஈஸ்வரி, சேதுபதி தனியாக சந்தித்து ஐஸ்வர்யாவை பற்றி பேசுகிறார். அதோடு சேதுவுக்காக ஐஸ்வர்யா கோவிலில் வேல் குத்திய விஷயத்தை எல்லாம் சொல்லி வீடியோவாக ஈஸ்வரி காண்பிக்கிறார். அதை பார்த்து சேதுவின் மனம் மாறுகிறது. இன்னொரு பக்கம் தமிழ் நடத்தும் ஹோட்டலில் சில ரவுடிகள் சாப்பிட வந்திருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

அவர்கள் தமிழ்செல்வியின் தங்கையை ரொம்ப கிண்டலாகவும் மோசமாகவும் பேசுகிறார்கள். இதை கவனித்த தமிழ்செல்வி, அவர்களின் கைகளை கிழித்து திட்டி எல்லோரையும் ஓட வைக்கிறார். அதற்குப்பின் ஐஸ்வர்யா, சேதுவை சந்தித்து பேசுகிறார். ஐஸ்வர்யா தன் மனதில் இருக்கும் காதலை வெளிப்படையாக சேதுவிடும் சொல்லி விடுகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full