மருந்தை எடுக்க தமிழ்செல்வியின் புத்திசாலித்தனம், சேது சொன்ன விஷயம் - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ் ஹாஸ்பிடலில் இல்லை என்பது அதற்கு பிறகு தான் எல்லோருக்குமே தெரிய வந்தது. தமிழ் காட்டுக்குள் செல்வது யாருக்குமே தெரியாது. தமிழை எல்லோருமே தேடி பார்த்தார்கள். அப்போது அங்கு வந்த ஒரு நபர் தமிழ்ச்செல்வி காட்டுக்குள் சென்ற விஷயத்தை சொன்னார். அதனால் வீட்டில் உள்ள எல்லோருமே ரொம்பவே பதறி போனார்கள்.
நேற்று எபிசோட்டில் தமிழ்- சேது இருவருமே காட்டுக்குள் சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் செல்லும் வழியில் எல்லாம் விச உயிரினங்கள் வந்தது. அந்த தடைகளை தாண்டி தமிழ்-சேது சென்றார்கள். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலுக்கு வந்த போஸ், மருந்து காட்டுக்குள் தான் இருக்கிறது என்று தெரிந்து கொண்டு சென்றார். எல்லோரும் வேண்டாம் என்று தடுக்கமே போஸ் கேட்கவில்லை காட்டுக்குள் சென்று விட்டார்.
சின்ன மருமகள்:
பின் தமிழ்-சேது இருவரும் வெவ்வேறு பாதையில் சென்றார்கள். அப்போது தமிழ், செல்லும் வழியில் எலும்புக்கூடு தொங்கிருப்பதை பார்த்து பயந்து ஒரு புதை குழியில் விழுந்து விட்டார்.
பின் தமிழ் காப்பாற்றுங்கள் என்று கத்திக்கொண்டு இருந்தார். தமிழ் கத்தும் சத்தம் சேதுவிற்கு கேட்டு விட்டது. பின் தமிழ் போன வழியில் சேது சென்றார். அதற்குள் தமிழ் புதைக்குழிக்குள் சென்று விட்டார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ் புதை குழிக்குள்ளே சென்று விடுகிறார். அந்த நேரம் பார்த்து சேது வந்து விடுகிறார். பின் ஒரு குச்சியை வைத்து தமிழை புதைகுழியிலிருந்து வெளியே எடுத்து விடுகிறார். அதற்குப்பின் சேது, எதற்காக வந்தாய் என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு தமிழ், மாமாவின் உயிரை காப்பாற்ற மருந்து வேண்டும். அதற்காகத்தான் வந்தேன் என்று சொல்கிறார். அந்த சமயம் பார்த்து வண்டுகள் வருகிறது. ஆனால், இருவரின் மீதும் சேரு இருந்ததால் வண்டுகள் சென்று விடுகிறது. இதுதான்
மருந்து எடுப்பதற்கு சரியான வழி என்று இருவருமே தங்கள் உடலின் மீது சேருகளை பூசிக்கொண்டு போகலாம் என்கிறார் சேது.
சீரியல் ட்ராக்:
அதற்கு தமிழ், வேண்டாம் தனித்தனியாக சென்று சீக்கிரம் மருந்து எடுக்கலாம் என்று பிரிந்து செல்கிறார்கள். ஒரு வழியாக மருந்து இருக்கும் இடத்திற்கு தமிழ்ச்செல்வி வந்து விடுகிறார். பின் வண்டுகளை வெளியே வர வைப்பதற்காக தன் கையை கிழித்து ஒரு துணியில் ரத்தத்தை சிந்துகிறார். பின் வண்டுகள் ரத்த வாடைக்கு அந்த துணியின் மீது உட்காருகிறது. உடனடியாக தமிழ்செல்வி நெருப்பை போட்டு அந்த வண்டுகள் எல்லாம் கொல்லுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.