சக்தி-ஜெனியின் காதலை சேர்த்து வைத்த சின்னபாண்டி, தமிழ் வீட்டில் வெடிக்கும் பூகம்பம் - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, தாமஸை அடிக்கப் போனார். ராஜாங்கம் தடுத்து கூப்பிட்டு வந்து விட்டார்.
பின் வீட்டிற்கு வந்த ராஜாங்கம், தேர்தல் முடியும் வரை எந்த பிரச்சனையிலும் எந்த பிரச்சனையும் செய்ய வேண்டாம். எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிந்த பின் பேசிக்கொள்ளலாம் என்றார். தமிழ் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். அதற்குப் பின் ஜெனி, தமிழுக்கு போன் செய்து பேசி இருந்தார். அப்போது ஜெனியின் அப்பா, அம்மா இருவருமே ஜெனியை அடித்தார்கள்.
ராஜாங்கம் எதுவும் செய்ய வேண்டாம் என்று சொன்னதால் சேது- தமிழ் இருவரும் அமைதியாக இருந்தார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று ஈஸ்வரி, தமிழின் மொபைலை எடுத்து வந்து ஐஸ்வர்யாவிடம் சொன்னார். அதில் ஐஸ்வர்யா, தமிழின் அப்பாவிற்கு ஃபோன் செய்து ஜெனியின் காதலுக்கு உதவ சொல்லி தமிழ் குரலில் பேசி இருந்தார். தமிழின் அப்பா சின்ன பாண்டியுமே, ராஜாங்கம் செய்ய சொன்னதால் ஜெனியின் காதலை சேர்த்து வைக்க ஒத்துக் கொண்டார்.
சின்ன மருமகள்:
அதற்கு பின் சக்திவேலுக்கு போன் செய்து தன்னுடைய திட்டத்தை பற்றி சின்ன பாண்டி சொன்னார். சக்தி தயங்கினாலும் பிறகு ஒத்துக் கொண்டார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி வருவதற்குள் போனை ஈஸ்வரி உள்ளே வைத்து விட்டார். தமிழ்-சேது இருவருமே எமோஷன் ஆக ஜெனியின் காதலைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் சின்ன பாண்டி- சக்தி இருவரும் ஜெனியின் வீட்டிற்குள் வந்தார்கள். ஜெனியின் அப்பா அந்த சமயம் பார்த்து வெளியே வந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சின்ன பாண்டி, ஜெனியை அவருடைய வீட்டிற்கு தெரியாமல்
அழைத்து சென்று விடுகிறார். பின் கோவிலில் ஜெனி- சக்தி இருவருக்கும் சின்ன பாண்டி திருமணம் செய்து விடுகிறார். திருமணம் முடிந்தவுடன் சின்னபாண்டி, ராஜாங்கம் வீட்டின் கெஸ்ட் ஆவுஸில் யாருக்கும் தெரியாமல் தங்க வைத்து விடுகிறார். ஜெனி வீட்டில் இல்லை என்று தெரிந்த உடனே ஜெனியின் அப்பா, அம்மா இருவரும் பதறி கொண்டு ராஜாங்கம் வீட்டிற்கு வருகிறார்கள். ஜெனின் அப்பா தாமஸ், ராஜாங்கத்தையும் அவருடைய குடும்பத்தையும் ரொம்ப மோசமாக பேசுகிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் கோபத்தில் சேது சண்டைக்கு போகிறார். ஒரு கட்டத்தில் ராஜாங்கம், தமிழிடம் விசாரிக்கிறார். தமிழ், எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நாங்கள் எதுவும் செய்யவில்லை என்கிறார். பின் ஈஸ்வரி, கெஸ்ட் ஹவுஸில் யாரோ இருக்கிறார்கள் என்று சொல்கிறார். பின் மொத்த குடும்பமே கெஸ்ட் ஹவுஸ்க்கு போகிறார்கள். முதலில் சின்ன பாண்டி வருகிறார். சின்னபாண்டி பின்னாடியே ஜெனி- சக்தி இருவரும் மாலை கழுத்துமாக வருகிறார்கள். அவரைப் பார்த்தவுடன் ராஜாங்கம், தமிழ்செல்வி எல்லோருமே ஷாக் ஆகிறார்கள்.