தமிழ்செல்வியின் மொய் விருந்திற்கு ஊர் மக்கள் வந்தார்களா? விறுவிறுப்பில் சின்ன மருமகள்

By subhashini · 15/6/2025

ஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘சின்ன மருமகள்’. சேதுவின் மீது போடப்பட்ட பழி முழுவதுமாக நீக்கப்பட்டது. இருவருமே சந்தோஷமாக சேர்ந்து வாழ நினைக்கும் போது தமிழ்செல்வி கர்ப்பமாக இருப்பதாக வீட்டில் எல்லோரிடமும் தமிழ்செல்வியின் அம்மா பொய் சொல்லியிருந்தார். உண்மையை சொல்ல முடியாமல் தமிழ்ச்செல்வி தவித்துக் கொண்டிருந்தார். பின் நாட்கள் செல்ல செல்ல தமிழ் உடைய வயிறு பெரிதாக தெரிய வேண்டும் என்று அவருடைய அம்மா துணியை கட்டி அனுப்பி விட்டார். கடைசியில் வளைகாப்பு நடக்கும்போது உண்மையை தமிழ்செல்வி எல்லோரிடமும் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்.

இதனால் மொத்த குடும்பமும் உடைந்து விட்டது. வேதனையில் சேது குடிக்க ஆரம்பித்து விடுகிறார். தற்போது சீரியலில் உண்மையிலேயே தமிழ் செல்வி கர்ப்பமாக இருக்கிறார். இந்த சந்தோஷத்தை சேதுவிடம் தமிழ் செல்வி சொல்கிறார். ஆனால், சேது அந்த குழந்தைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று ரொம்ப கேவலமாக தமிழ் செல்வியை பேசி விடுகிறார். இதனால் பொங்கி எழுந்த தமிழ்ச்செல்வி, இனி நீ எனக்கு கணவனும் இல்லை. நான் உனக்கு மனைவியும் இல்லை.

சின்னமருமகள் சீரியல்:

என் குழந்தையை வளர்த்து என்னால் தனியாளாக நின்று சாதிக்க முடியும் என்று சவால் விட்டு அங்கிருந்து வருகிறார். பின் வீட்டிற்கு வந்தவுடன் தன்னுடைய தந்தை, தன்னுடைய மாமனாரின் பெயரை சொல்லி பணம் வாங்கி குடித்து அழித்தது தெரிந்தது. இதனால் கோபப்பட்ட தமிழ்செல்வி, தன்னுடைய தந்தையிடமும் சண்டை போட்டார். பின் அவர், எனக்கு கணவனும் தேவையில்லை, தந்தையும் தேவையில்லை. என்னால் குழந்தையும் வளர்த்துக் கொண்டு என்னுடைய ஆசைப்பட்ட டாக்டர் படிப்பையும் படிப்பேன் என்று சவால் விட்டார்.

நேற்று எபிசோட்:

தமிழ்செல்வி, மருத்துவ கல்லூரிக்கு கட்டணம் கட்டுவதற்கு ஒரு லட்ச ரூபாய் பணம் தேவைப்படுகிறது. இதனால் அவருடைய அம்மா, எல்லா இடத்திலுமே பணத்தை கடனுக்கு கேட்டார். ஆனால், யாருமே பணம் தரவில்லை. தமிழ்செல்வியின் குடும்பத்தை ரொம்ப மோசமாகத்தான் பேசி இருந்தார்கள். இதனால் தமிழ்ச்செல்வியும் அவருடைய அம்மாவும் ரொம்ப வருத்தப்பட்டார்கள். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி, மொய் விருந்து வைக்கலாம். அதன் மூலம் பணத்தை எப்படியாவது ரெடி பண்ணலாம் என்று யோசித்து ஊர் முழுக்க போஸ்டர் ஓட்டினார்.

சீரியல் ட்ராக்:

பின் தமிழ்ச்செல்வி மொய் விருந்து நடத்துகிறார் என்பதை அறிந்த சேதுவின் அத்தை, தமிழ்ச்செல்வியை பழிவாங்க கிடா விருந்து நடத்த தன்னுடைய அண்ணனிடம் கேட்டார். அவருமே கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்ய சொன்னார். ஊரில் உள்ள எல்லோருமே கிடா விருந்துக்கு போவதாக பேசி கொண்டார்கள். இதை அறிந்த தமிழின் அம்மா தமிழிடம் சொல்லி புலம்பி இருந்தார். அதற்கு தமிழ்செல்வி, என்ன நடந்தாலுமே இந்த மொய் விருந்தை நடத்துவேன் என்று சபதம் போட்டார். இதை அறிந்தும் சேது எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

https://www.youtube.com/watch?v=C75q80tQHRk

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கிடா விருந்துக்காக ராஜாங்கம் ஏற்பாடு செய்த இடத்தில் மும்முரமாக வேலை நடக்கிறது. இதெல்லாம் பார்த்து தமிழ் செல்விக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. கிடா விருந்துக்கான ஆட்டை வரவைத்து அருள்வாக்கு கேட்கிறார்கள். இன்னொரு பக்கம் சோகத்தில் தமிழ்ச்செல்வி, எனக்கு தெரிந்த ஆசிரமம் இருக்கிறது. அங்கு சாப்பாடு கொண்டு போய் கொடுத்துவிடலாம். வண்டிக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்கிறார். தமிழ்செல்வியின் மொய் விருந்து என்ன ஆகும்? அவருடைய படிப்பு செலவிற்கு என்ன செய்யப் போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

behindtalkies AMP · Quick view
View full