கோர்ட்டில் தமிழ்செல்வி சொன்ன வார்த்தை, சேது நிலைமை என்ன? பரபரப்பில் சின்ன மருமகள்

By subhashini · 28/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கோவிலில் பிச்சைக்காரன் ஒருவன், கோயிலுக்கு வருபவர்களிடம் ஏலனாகவும் நக்கலாகவும் பேசி இருந்தார். அதோடு முழுநேரம் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதையே ஒரு வேலையாக வைத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்து ஈஸ்வரி, தாமரைக்கு இவரை கல்யாணம் பண்ணி வைத்து சாவித்திரியின் முகத்தில் கரியை பூச வேண்டும் என்று திட்டம் போட்டார். அதற்குப்பின் அந்த பிச்சைக்காரனை அழைத்து ஈஸ்வரி, உனக்கு கல்யாணம் செய்து வைக்கப் போகிறேன் என்றார். இதைக்கேட்டு அந்த பிச்சைக்காரன் ஷாக்கானார்.

கோவிலில் பிச்சைக்காரன் ஒருவன், கோயிலுக்கு வருபவர்களிடம் ஏலனாகவும் நக்கலாகவும் பேசி இருந்தார். அதோடு முழுநேரம் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதையே ஒரு வேலையாக வைத்துக் கொண்டிருந்தார். இதை பார்த்து ஈஸ்வரி, தாமரைக்கு இவரை கல்யாணம் பண்ணி வைத்து சாவித்திரியின் முகத்தில் கரியை பூச வேண்டும் என்று திட்டம் போட்டார். அதற்குப்பின் அந்த பிச்சைக்காரனை அழைத்து ஈஸ்வரி, உனக்கு கல்யாணம் செய்து வைக்கப் போகிறேன் என்றார். இதைக்கேட்டு அந்த பிச்சைக்காரன் ஷாக்கானார்.

சின்ன மருமகள்:

அங்கு கோர்ட்டில் ஒவ்வொரு ஜோடிகள் விவாகரத்து கேட்டு பேசிக்கொண்டிருப்பதை தமிழ்-சேது பார்த்தார்கள். அதற்குப்பின் கோர்ட்டில் சேது, தான் செய்த தவறை மனப்பூர்வமாக உணர்ந்து தமிழிடம் மன்னிப்பு கேட்டார். பின் விவாகரத்து வேண்டாம் என்றார். இதைக் கேட்டு தமிழ் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறார். இன்னொரு பக்கம் தாமரை, சாவித்திரி இருவரும் கோயிலுக்கு போனார்கள். இதை அறிந்த ஈஸ்வரி, அந்த பிச்சைக்காரனை பணக்காரன் போல் வேஷம் போட்டு வர சொன்னார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேது, தான் செய்த தவறை உணர்ந்து அனைவரும் முன்பும் கை கூப்பி மன்னிப்பு கேட்கிறார். தமிழ்ச்செல்வியால் எதுவுமே பேச முடியவில்லை. சேது தனக்கு விவாகரத்து வேண்டாம் என்று ரொம்ப எமோஷனலாக பேசி அழுகிறார். பின் நீதிபதி, தமிழ்செல்வி இடம் விசாரிக்கிறார்கள். தமிழ்செல்வி, தன்னுடைய அம்மா, மாமனார், அப்பத்தா எல்லோரும் சொன்னதை நினைத்து பார்த்து விவாகரத்து வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

இதைக் கேட்டு சேது ரொம்பவே சந்தோஷப்படுகிறார். பின் நீதிபதியும் விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்து விடுகிறார்கள். பின் சந்தோஷத்தில் சேது ஆடிப் பாடி குதிக்கிறார். பின் விவாகரத்து வாங்க வந்தவர்களிடம் சேது, அறிவுரை சொல்கிறார். பின் சேது, தமிழுக்கு பூ கொடுத்து தன் காதலை வெளிப்படுத்துகிறார். இன்னொரு பக்கம் தாமரை, சாவித்திரி இருவரும் கோவிலில் இருக்கும்போது
அந்த பிச்சைக்காரன் பணக்காரன் போல் கெட்டப் போட்டு வருகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full