ராஜாங்கம் கொடுத்த வாக்குறுதி, அடுத்த பிரச்சனையில் சிக்கிய தமிழ்ச்செல்வி- விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது ஆர்டர் செய்த சாப்பாட்டை சாப்பிட்டு உடம்பு முடியாமல் போனது. இதனால் சேது அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தார். அதற்கு பின் தமிழ் செல்வி கல்லூரிக்கு கிளம்பினார். ஆனால், சேது முடியாது என்று மறுத்தார். உடனே தமிழ்செல்வி, வக்கீலுக்கு போன் செய்ய, அவர் படிக்க அனுமதிக்கவில்லை என்றால் சேது மீது கேஸ் போடலாம் என்றார். அதனால் சேது எதுவும் பேசவில்லை. தமிழ்செல்வி கல்லூரி சென்று விட்டார். இன்னொரு பக்கம் சேது வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்று பிரியாணி சமைத்து வைக்க, இதை பார்த்த அப்பத்தா பிரியாணியில் உப்பு, காரத்தை கொட்டி வைத்தார்.
சேது பிரியாணி எடுத்து சாப்பிட்ட, காரம் தாங்க முடியாமல் கத்தினார். இதையெல்லாம் பார்த்து அப்பத்தா வெளியே சிரித்துக்கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி தன்னுடைய தோழியுடன் கல்லூரியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தமிழ்செல்வியின் பள்ளி நண்பர், ஏதாவது வேண்டுமா என்று கேட்டார். உடனே தமிழ்ச்செல்வி, உங்களை அண்ணா என்று அழைக்கட்டுமா? என்று கேட்டவுடன் அவர், சிரித்துக் கொண்டு சம்மதித்தார். இன்னொரு பக்கம் சேதி என்ன செய்வது என்று புரியாமல் வீட்டில் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தார்.
சின்ன மருமகள் சீரியல்:
அப்போது சேதுவின் அத்தை வேண்டும் என்று தமிழ்செல்வியை பற்றி குறை சொல்லிக் கொண்டிருந்தார். இதை கேட்டு சேது கோபப்பட்டு சென்று விட்டார். இன்னொரு பக்கம் தமிழ்செல்வியின் பள்ளி தோழன், டெம்போவில் ஏற சொன்னார். தமிழ் செல்வி, அவருடைய தோழியுமே ஏறி சென்றார்கள். இன்னொரு பக்கம் ஆறுமுகம் தன் அக்காவிற்கு உடல்நிலை சரியில்லாததால் ஹாஸ்பிடல் போனார். மருத்துவர்கள், அவருடைய உடல்நிலை மோசமாக இருக்கிறது. சீக்கிரம் ஆப்ரேஷன் செய்யணும். லட்ச கணக்கில் பணம் தேவை என்பதால் ஆறுமுகத்திற்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
நேற்று எபிசோட்:
இதை அறிந்த ராஜாங்கத்தின் மகள் தன்னுடைய அப்பாவிடம் ஆறுமுகம் அக்காவின் ஆபரேஷனுக்கு உதவி செய்ய சொன்னார். பின் சேது வீட்டிலேயே வைத்துக் குடித்தார். இதை பார்த்து தமிழ் செல்வி, ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு சேது, நான் அப்படிதான் செய்வேன். என் விருப்பம் என்று தெனாவட்டாக பேசி இருந்தார். அதற்கு பின் தமிழ் செல்விக்கு உடம்பு முடியாமல் வாந்தி எடுத்து மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இதை பார்த்த சேது பதறி அடித்துக்கொண்டு தமிழ்செல்வியை தன் மடியில் வைத்து எழுப்பினார். ஆனால், தமிழ்செல்வி எழவில்லை.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜாங்கம் வீட்டிற்கு வந்த போலீஸ், செல்லப்பாண்டி உங்கள் பெயரை சொல்லி மோசடி வேலை செய்தது உண்மை என்று நிரூபணம் ஆகிவிட்டது. இந்த வழக்கில் உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று அறிவித்து விட்டார்கள் என்று சொல்கிறார். இதைக் கேட்டு ராஜாங்கம் குடும்பமே சந்தோஷப்படுகிறது. அதற்கு பின் தமிழ்ச்செல்வி படிக்கும் கல்லூரி விழாவிற்கு ராஜாங்கம், சேது இருவருமே சிறப்பு விருந்தினராக செல்கிறார்கள். அங்கு ராஜாங்கம், கல்லூரி மாணவிக்கு உதவியாக ஸ்கூட்டி வாங்கி தருவதாக ஒத்துக்கொள்கிறார்.
சீரியல் ட்ராக்:
அது மட்டும் இல்லாமல் அவர், வருடம் வருடம் தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவருக்கு இலவச கல்லூரி கட்டணம் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இதனால் கல்லூரியில் உள்ள மாணவர்கள் எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி பெண் கீழே விழுவது போல் தன் மாமனாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வியின் பள்ளி தோழன் தமிழ்ச்செல்வியின் தோழியை காதலிக்கிறார். இது தெரியாமல் அவருடைய நண்பர் தமிழ்ச்செல்வியை தான் காதலிக்கிறார் என்று புரிந்து கொள்கிறார். பின் இதைப்பற்றி சேதுவின் அத்தை வைத்திருக்கும் ஆளிடம் அந்த நபர் தவறாக சொல்லி விடுகிறார். இதை அவர்களுமே வீடியோ எடுத்து விடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.