தமிழ் செய்த துணிச்சலான விஷயம், சேதுவின் மண்டையை கழுவும் ஐஸ்வர்யா - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ் நடத்தும் ஹோட்டலில் சில ரவுடிகள் சாப்பிட வந்திருந்தார்கள். அவர்கள் தமிழ்செல்வியின் தங்கையை ரொம்ப கிண்டலாகவும் மோசமாகவும் பேசி இருந்தார்கள். இதை கவனித்த தமிழ்செல்வி, அவர்களின் கைகளை கிழித்து திட்டி எல்லோரையும் ஓட வைத்தார். அதற்குப்பின் ஐஸ்வர்யா, சேதுவை சந்தித்து பேசி இருந்தார். ஐஸ்வர்யா தன் மனதில் இருக்கும் காதலை வெளிப்படையாக சேதுவிடும் சொல்லி விட்டார். ராஜாங்கம், திருமணத்திற்கு நீ என்ன முடிவெடுத்திருக்கிறாய் என்று கேட்டார்.
சேது, நடந்திருக்கும் விஷயங்களை எல்லாம் யோசித்துப் பார்க்கும்போது நான் ஐசுவை திருமணம் செய்து கொள்கிறேன். அவள் என்னை ரொம்பவே காதலித்தார். இந்த குடும்பத்திற்காகவும் நிறைய நல்லது செய்து இருக்கிறாள் என்றார். இதைக் கேட்டு சாவித்திரி- தாமரை இருவருக்கும் பயங்கரமாக கடுப்பானது. ஐஸ்வர்யா, ஈஸ்வரி ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். அதற்குப்பின் ஐஸ்வர்யாவின் அப்பா- அம்மா இருவரையும் வீட்டிற்கு வரவைத்தார்கள். திருமணத்தைப் பற்றி ராஜாங்கம் பேசி இருந்தார். ஐசுவின் அப்பா, நாளைக்கு நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்றார்.
சின்ன மருமகள்:
ராஜாங்கம், நாளைக்கு எப்படி முடியும் என்றார். ஐசு அப்பா, நீங்கள் திடீரென்று மனம் மாறி ஏதாவது நடந்து விட்டால் என் மகளின் வாழ்க்கை என்ன ஆகுவது? நாளைக்கு நிச்சயதார்த்தம் முடித்துவிடலாம். அதற்குப்பின் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என்றார். இதனால் ராஜாங்கம்-சேது இருவரும் ஒத்துக்கொண்டார்கள். இன்னொரு பக்கம் தமிழ், கல்லூரிக்கு போகும்போது விபத்து ஏற்பட்டு நான்கு பேர் சீரியஸான நிலையில் இருந்தார்கள். தமிழ், அவர்களுக்கு முதலுதவி செய்தார். பின் அவர்களை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார். செல்லும் வழியில் அந்த சின்ன பெண்ணின் உயிரை தமிழ்ச்செல்வி காப்பாற்றி விட்டார். மீதி பேருடைய உயிரை காப்பாற்ற தமிழ் போராடிக் கொண்டிருந்தார்
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ்ச்செல்வி, அந்த நான்கு பேருக்கும் முதலுதவி செய்து கொண்டிருக்கிறார். தேவையான பொருள்களையும் வண்டியில் சென்று கொண்டிருக்கும்போதே மற்றவர்களிடம் சொல்லி ஏற்பாடு செய்கிறார் தமிழ். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி, தான் படிக்கும் கல்லூரிக்கு அழைத்து செல்கிறார். தமிழ்ச்செல்வி நடந்தது எல்லாம் சொல்கிறார். பின் அந்த நான்கு பேரின் உயிருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிந்து விடுகிறது. தமிழ்செல்வ செய்த உதவியை பார்த்து எல்லோருமே பாராட்டுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் கருப்பன், சேதுவின் முடிவை தவறு என்று சொல்லி புரிய வைக்கிறார். அந்த சமயம் பார்த்து ஈஸ்வரி, கருப்பனை திட்டி அனுப்பி விடுகிறார். அதற்குப்பின் அப்பத்தா, மலர் இருவருமே ராஜாங்கத்திடம் சேது- தமிழை சேர்த்து வைக்க சொல்லியும் நிச்சயதார்த்தம் வேண்டாம் என்று சொல்லியும் கெஞ்சி கதறி அழுகிறார்கள். ராஜாங்கம், இது என்னுடைய முடிவோ, விருப்பமோ கிடையாது என்று அங்கிருந்து சென்று விடுகிறார். அதற்குப்பின் சேதுவுக்கு நிச்சயதார்த்தம் நடப்பதை அறிந்து மாணிக்கம் கோபப்பட்டு புலம்பி கொண்டிருக்கிறார். தமிழ்ச்செல்வி, எப்போது? எங்கு நடக்கிறது? கிளம்பி போகலாம் என்று சொல்கிறார்.