தமிழ்செல்வியின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றினாரா சேது? சின்ன மருமகள்

By subhashini · 8/3/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சாவித்திரி, ஈஸ்வரியின் சதி செய்து தான் திருமணம் நடந்தது என்று எல்லா விஷயத்தையும் சொன்னார். இதனால் தாமரைக்கு பயங்கர கோபம் வருகிறது. அப்போது வந்த காமேஷிடம் சாவித்திரி- தாமரை இருவரும் கேட்டார்கள். காமேஷ், நான் உண்மையாலுமே தாமரையை காதலிக்கிறேன் என்றெல்லாம் டயலாக் பேசி இருந்தார். இதனால் தாமரை இன்னும் கோபப்பட்டார். இன்னொரு பக்கம் சேது- தமிழ் இருவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பாகவும் பாசமாகவும் நடந்து கொண்டார்கள்.

தாமரை, ராஜாங்கத்திடம் எல்லா உண்மையையும் சொல்லி நியாயம் கேட்க சொன்னார். சாவித்திரி, தாமரையை தடுத்து நிறுத்தி இதற்கு நாம் வேறு வழியில் ஈஸ்வரிக்கு பதிலடி கொடுக்கலாம். பொறுமையாக இரு என்று சமாதானம் செய்தார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, பரிகாரம் நிறைவேறியது என்று ராஜாங்கம் குடும்பத்தில் சந்தோஷமாக இருந்தார்கள். ஆனால், தமிழ்- சேது இருவரும் சேர்ந்து வாழ மாட்டார்கள். அதை நடத்த விட மாட்டேன் என்று வில்லிப்போல் பேசிக் கொண்டிருந்தார்.

சின்ன மருமகள்:

அதற்குப்பின் தமிழ்ச்செல்வி தூக்கத்தில் எழுந்து உட்கார்ந்து அழுது கொண்டிருக்க சேதுபதி விசாரித்தார். அப்போ தமிழ் செல்வி, நான் கரப்பான் பூச்சியை மிதித்து விட்டேன். என்னால் ஒரு உயிர் போனவிட்டது. அந்த பாவம் எனக்கும் என் குழந்தைக்கும் வந்துவிடும் என்று ஏதேதோ சொல்லி அழுதார். சேது, கோழி ஆட்டை சாப்பிடும் போது பாவம் வரவில்லையா? என்று கேட்டவுடன் தமிழ்ச்செல்வி கோபப்பட்டு கத்தினார். அதற்குப்பின் ராஜாங்கம், அப்பத்தா எல்லோருமே பரிகாரம் நல்லபடியாக நடந்து முடிந்ததை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

சீரியல் ட்ராக்:

ஈஸ்வரி, கோயிலுக்கு சென்றிருந்தால் பரிகாரம் நன்றாக இருந்திருக்கும் என்று ஒன்றுக்கு இரண்டாக ஏற்றி விட்டார். கோபத்தில் அப்பத்தா, ஈஸ்வரியை திட்டி விட்டார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி கர்ப்பமாக இருப்பதால் அதிகமாக கோபப்பட்டார், அழுகிறார், கத்துகிறார். சேதுவிற்கு ஒன்றுமே புரியவில்லை. பின் இதைப்பற்றி சேது, அப்பத்தாவிடம் சொன்னார். அதற்கு அப்பத்தா, மாசமா இருக்கும்போது எல்லா பெண்களுக்கும் குணங்கள் அப்படித்தான் இருக்கும். நீ தான் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை சொன்னார். தமிழ்ச்செல்வி, அந்நியன்- அம்பிப்போல் மாறி மாறி நடந்து கொள்வதால் சேது கோவப்படாமல் நிதானமாக தமிழ்செல்வி இடம் பேசி இருந்தார்.

https://www.youtube.com/watch?v=6Q3YZth9sSM

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் தமிழ்செல்வி கர்ப்பமாக இருப்பதால் தன்னுடைய சின்ன சின்ன ஆசைகளை எல்லாம் போர்டில் எழுதி வைக்கிறார். அதை பார்த்து சேதுவும் செய்கிறார். தமிழ்செல்வி எழுதிக் கொண்டே போவதால் ஒரு கட்டத்தில் சேது என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full