சுயமரியாதை உடன் வாழ தமிழ்செல்வி எடுத்த அதிரடி முடிவு, சேது என்ன செய்ய போகிறார்? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, உன்னை திருமணம் செய்தது தான் மிக பெரிய தவறு. நீ என் அப்பாவின் மீது புகார் கொடுத்திருந்த போதே நான் உன்னை தலைமூழ்கி இருக்கணும். உன்னால் தான் இந்த பிரச்சனை. மரியாதையாக வீட்டை விட்டு வெளியே போ என்று ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதனால் கொந்தளித்த தமிழ், நான் தான் உங்களை கல்யாணம் செய்து கொள்ள கேட்டேனா? உங்கள் அப்பாவை ஜெயிலுக்கு அனுப்பியது தாமரை. ஒவ்வொரு முறையும் நீங்கள் தவறு செய்வீர்கள். ஆனால், தண்டனை எனக்கு. பின் நீங்கள் தவறு தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் போது நான் ஏற்றுக்கொள்ளணும்.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை உங்களிடம் நான் நல்லவள் என்று தீக்குளித்து நிரூபிக்க முடியாது. உங்களுடன் வாழ்ந்தவரையும் போதும். நானே வீட்டை விட்டு போகிறேன் என் மீது தவறு இல்லை என்று தெரிந்ததும் நீங்கள் எல்லோருமே என்னிடம் மன்னிப்பு கேட்டு நிற்பீர்கள். நான் யாரையும் மன்னிக்க மாட்டேன். இனி எனக்கும் இந்த குடும்பத்திற்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்லி வீட்டை விட்டு வெளியேறினார். பின் ஒரு குடம் தண்ணியை எடுத்து தமிழ் தலையில் ஊற்றிக் கொண்டார்.
சின்ன மருமகள்:
தமிழ்ச்செல்வி ஈர துணியோடு சாமி முன்பு கற்பூரம் ஏத்தி சத்தியம் செய்து இந்த குடும்பத்திற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்றார். சேது எதுவும் சொல்லாமல் கோபப்பட்டார். பின் தமிழ்ச்செல்வி, ராஜாங்கம் வீட்டிலிருந்து நடந்தே தன்னுடைய வீட்டிற்கு சென்றார். வயிற்றில் குழந்தைகளை வைத்துக்கொண்டு தமிழ்செல்வி ரொம்ப கஷ்டப்பட்டு சென்றார். அக்கம் பக்கத்தில் எல்லோருமே தமிழ்ச்செல்வி நினைத்து வருத்தப்பட்டார்கள். இன்னொரு பக்கம் சேதுவின் கோபத்தை தணிக்க வீட்டில் உள்ள எல்லோருமே பொறுமையாக அமைதியாக இருக்க சொன்னார்கள்.
சீரியல் ட்ராக்:
சேது, இனி தமிழ் செல்விக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அவளைப் பற்றி பேசக்கூடாது என்று கோபமாக பேசிவிட்டு சென்றார். அப்பத்தா, தன் மகனையும் பேரணையும் நினைத்து ரொம்பவே எமோஷனலாக அழுதார். பின் தன்னுடைய வீட்டிற்கு வந்த தமிழை பார்த்து அவருடைய அப்பா, அம்மா பதறினார்கள். அப்போது தமிழ், எனக்கும் அந்த குடும்பத்திற்குமான உறவு அறுந்துவிட்டது என்று சொன்னார். இதைக் கேட்டு தமிழ்செல்வியின் அம்மா ஷாக் ஆகி நின்றார்.
https://www.youtube.com/watch?v=Z5P0LXFD8JA
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தமிழ்ச்செல்வி, இனிமேல் அந்த குடும்பத்திற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. எல்லாம் முடிந்துவிட்டது என்று சொல்கிறார். தமிழ்ச்செல்வியின் அம்மா, கோபப்படாதே பொறுமையாக இரு பேசிக் கொள்ளலாம். ஊர் உலகத்தில் சண்டை இல்லையா? என்று கேட்கிறார். கொந்தளித்த தமிழ்ச்செல்வி, மீண்டும் என்னை அந்த குடும்பத்துடன் சேர்ந்து வாழு என்று சொல்லாதே. அப்படி என்னை கட்டாயப்படுத்தினால் நான் இந்த வீட்டை விட்டு சென்று விடுவேன் என்று சொல்கிறார்.