பிரம்மாண்டமாக நடக்கும் தமிழ்செல்வியின் வளைகாப்பு, கட்சித் தலைவர் போட்ட கண்டிஷன் - சின்ன மருமகள்

By subhashini · 9/2/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் வளைகாப்பு நடைபெறுவதற்கு முன்பு முருகனுக்கு வைர வேலை கொடுப்பதற்காக தமிழ்- சேது இருவரும் கோவிலுக்கு கிளம்பினார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று ஈஸ்வரி தன்னுடைய உறவுக்கார தம்பி இடம் தமிழ்- சேது கிளம்பும் விஷயத்தைப் பற்றி சொன்னார். அதற்கு பின் ராஜாங்கம், தாமரை கல்யாண விஷயமாக வீட்டில் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வந்த தாமரை, எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை என்றார். யாரையாவது காதலிக்கிறாயா என்று ராஜாங்கத்தின் மனைவி கேட்டார். தாமரை உண்மை சொல்ல வரும்போது ஈஸ்வரி தடுத்து ஏதேதோ பேசி குழப்பி விட்டார்.

கோபத்தில் ராஜாங்கம், நான் பார்க்கும் மாப்பிள்ளை தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தீட்டிவிட்டு சென்றார். அதற்குப்பின் தாமரை, காமேஷிற்கு ஃபோன் செய்து நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லி வீட்டில் வந்து பெண் கேட்க சொன்னார். காமேஷ், என்னால் யாரிடமும் கைகட்டி பதில் சொல்ல முடியாது என்று திமிராக பேசிவிட்டு போனை வைத்து விட்டார். இன்னொரு பக்கம் தமிழ்-சேது சந்தோஷமாக பேசிக்கொண்டு வந்தார்கள். அப்போது ரவுடிகள் சேதுவை சேதுவை தாக்கினார்கள். ஒரு கட்டத்தில் சேதுவை அந்த ரவுடிகள் மடக்கி பிடித்து விட்டார்கள்.

சின்ன மருமகள்:

சேதுவை அடித்துப் போட்டுவிட்டு தமிழை கடத்தி சென்று விட்டார்கள். அந்த பக்கம் வந்தவர்கள் சேதுவின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி விசாரித்தார்கள். சேதுவும் கண்விழித்து தமிழை தேடினார். பின் சேது, ராஜாங்கத்திற்கு போன் செய்து நடந்ததை சொன்னார். ராஜாங்கம், சேது, தமிழின் அப்பா, கருப்பு எல்லோரும் தமிழை தேடி சென்றார்கள். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, தன் உறவுக்கார தம்பியிடம் தமிழை கொலை செய்ய சொன்னார்

சீரியல் ட்ராக்:

அவருமே தமிழை கொலை செய்வதற்கு தன் ஆட்களிடம் சொன்னார். தமிழ் ரொம்பவே பயந்து போய் இருந்தார். இன்னொரு பக்கம் எல்லோரும் தமிழை தேடி அலைந்தார்கள். ஒரு கட்டத்தில் கருப்பு , தன் வண்டியின் டயர் அடையாளத்தை வைத்து தமிழிருக்கும் இடத்திற்கு சென்று விட்டார்கள். சேது அங்கு இருக்கும் ரவுடிகள் எல்லாம் அடித்துப் போட்டு விட்டு தமிழை காப்பாற்றி விட்டார். கடைசியில் போலீஸ் அந்த ரவுடி கும்பலை கைது செய்து விட்டது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ்ச்செல்வியின் வளைகாப்பு கோலாகலமாக தொடங்குகிறது. வசதி வாய்ப்பு குறைவாக இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் ராஜாங்கம் வளைகாப்பை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார். வீட்டிற்கு வந்த தலைவர் வளைகாப்பு விழாவை சிறப்பாக தொடங்கி வைக்கிறார். ராஜாங்கம் வீடு சந்தோஷமாக இருக்கிறது. பின் ஏழைப் பெண்களுக்கு ராஜாங்கம், ரெண்டு பவுன் தங்கம் செயின், 50,000 ரூபாய் பணமும் கொடுக்கிறார். விழா சிறப்பாக முடிந்தவுடன் கட்சியின் தலைவர், தேர்தல் வர இருப்பதால் ராஜாங்கம் குடும்பம் கவனமாக இருக்க வேண்டும். எதிர்கட்சிகள் நிறைய சூழ்ச்சிகள் செய்வார்கள். அதில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் அறிவுரை சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது

behindtalkies AMP · Quick view
View full