ராஜாங்கத்தின் மரியாதையை காப்பாற்றும் தமிழ்செல்வி, கோபத்தில் சேது - விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கல்லூரிக்கு சேது, தமிழ், ராஜாங்கம் எல்லோருமே வந்துவிட்டார்கள். அப்போது பேட்டியில் ராஜாங்கத்தை மாற்றி மாற்றி கேள்வி கேட்டார்கள். ராஜாங்கம், தமிழை பற்றி பெருமையாக பேசி வாழ்த்து சொல்லி அனுப்பினார். அதற்குப்பின் தேர்வு எழுதும் அறைக்கு தமிழை சேது அழைத்து சென்றார். அது மட்டும் இல்லாமல் தமிழ் பக்கத்திலேயே உட்கார்ந்து சேது கவனித்துக் கொண்டார். தமிழ்ச்செல்வி சொல்லும் எல்லா வேலைகளையும் சேது செய்து கொண்டிருந்தார். இதையெல்லாம் youtube சேனல் வீடியோ எடுத்துக் கொண்டே இருந்தது.
நேற்று எபிசோட்டில் தமிழின் தேர்வுகள் முடியும் வரை சேது தூக்கிக் கொண்டு சென்று வந்தார். இதனால் தமிழ் ரொம்ப சந்தோஷப்பட்டார். இதையெல்லாம் பார்த்த ஈஸ்வரி, தாமரையின் அம்மா, தாமரை எல்லோருமே கோபப்பட்டு தமிழிடம் வம்பு இழுத்தார்கள். அதற்கு தமிழுமே பதிலடி கொடுத்தார். கடைசி தேர்வுக்கு தமிழை அழைத்துக் கொண்டு சேது சென்றிருந்தார். அங்கு ஒரு பிணத்தை வைத்து பிராக்டிகல் எக்ஸாம் நடக்கிறது. அதை பார்த்து சேது பதறிப் போனார். அதற்குப்பின் கேம்ப் மூன்று நாள்கள் போகணும் என்றார்கள்.
சின்ன மருமகள் சீரியல்:
இதனால் கோபத்தில் சேது முடியாது என்று தமிழிடம் சொல்லிவிட்டார். இன்னொரு பக்கம் ராஜாங்கத்தை பழிவாங்க வேண்டும் என்று அவருடைய எதிரியும் போஸும் சேர்ந்து சேது-தமிழின் விவாகரத்தை பற்றி பிரஸ்மீட்டில் பேச சொன்னார்கள். அப்போது பேட்டி எடுப்பவர்கள் ராஜாங்கத்திடம், சேது-தமிழ் விவாகரத்தை பற்றி கேட்டார்கள். ராஜாங்கம் பதில் சொல்ல முடியாமல் தவித்தார். உடனே அங்கு வந்த தமிழ், அதற்கு பதில் நான் சொல்கிறேன் என்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ்ச்செல்வி, விவாகரத்து என்பது எங்களுடைய தனிப்பட்ட விஷயம். இதற்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லை. எனக்கு திருமணம் ஆன நாளிலிருந்து என்னுடைய கல்விக்கு என்னுடைய மாமனார் பெரும் உதவியாக இருக்கிறார். அந்த மாதிரி தான் இவர் இதையும் செய்கிறார். மற்றபடி நீங்கள் சொல்வது போல் விளம்பரத்திற்காக அவர் செய்யவில்லை. என்னுடைய குடும்பம் எனக்கு துணையாக தான் இருக்கிறது என்று சொல்கிறார். அதற்குப்பின் சேது, தமிழ்ச்செல்வி, ராஜாங்கம் எல்லோருமே வீட்டுக்கு வந்து விடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் தமிழ்ச்செல்வி, கேம்ப் போகும் விஷயமாக ராஜாங்கத்திடம் சொல்கிறார். பின் அவர், சேதுவை அழைத்து போக சொல்கிறார். அந்த சமயம் பார்த்து போன் செய்த கட்சி தலைவரின் மனைவி, மருத்துவ கேம்பிற்கு ராஜாங்கத்தையும் போக சொல்கிறார். அதனால் அவர் ஒத்துக் கொள்கிறார். பின் குடும்பத்துடன் எல்லோருமே கேம்புக்கு செல்ல தயாராகிறார்கள். இன்னொரு பக்கம் மெடிக்கல் ஷாப் போகணும் என்பதால் தமிழ்ச்செல்வியின் தங்கை சேது விடம் உதவி கேட்கிறார். ஆனால், அவர் கோபத்தில் கத்துகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.