கணவனும் வேண்டாம், தகப்பனும் வேண்டாம் தமிழ்செல்வி எடுத்த அதிரடி முடிவு - விறுவிறுப்பில் சின்ன மருமகள்

By subhashini · 4/6/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘சின்ன மருமகள்’. இந்த சீரியலின் கதாநாயகி தமிழ் செல்விக்கு பள்ளி படித்துக் கொண்டிருக்கும் போதே கட்டாய திருமணம் செய்து வைக்கிறார்கள். அவரை கதாநாயகன் ஒருதலையாக காதலித்துக் கொண்டிருக்க அதற்கு அவருடைய பெற்றோரும் சம்மதம் சொல்லுகின்றனர். இவர்களின் திருமணத்திற்கு பிறகு, கதாநாயகி மருத்துவராக வேண்டும் என்று ஆசைப்படுவதை நிறைவேற்ற வேண்டும் என்று கதாநாயகன் நினைக்கிறார். இதற்காக இவர்கள் இருவருமே பல சிக்கல்களை சந்தித்து இருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் சேதுவின் அத்தை மகள் எப்படியாவது சேதுவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து பல திட்டங்களை போட்டார். ஒரு கட்டத்தில் சேது தன்னை கற்பழித்து ஏமாற்றி விட்டார் என்றெல்லாம் டிராமா போட்டார்கள். அதை மொத்த குடும்பம் நம்பி இருந்தது. எப்படியாவது தன் கணவர் மீது இருக்கும் பழியை போக்க வேண்டும் என்று தமிழ்ச்செல்வி போராடி இருந்தார். கடைசியில் தமிழ்செல்வி தான் அதில் வெற்றியும் பெற்றார்.

சின்னமருமகள் சீரியல்:

சேதுவின் மீது போடப்பட்ட பழி முழுவதுமாக நீக்கப்பட்டது. இருவருமே சந்தோஷமாக சேர்ந்து வாழ நினைக்கும் போது தமிழ்செல்வி கர்ப்பமாக இருப்பதாக வீட்டில் எல்லோரிடமும் தமிழ்செல்வியின் அம்மா பொய் சொல்லியிருந்தார். உண்மையை சொல்ல முடியாமல் தமிழ்ச்செல்வி தவித்துக் கொண்டிருந்தார். பின் நாட்கள் செல்ல செல்ல தமிழ் உடைய வயிறு பெரிதாக தெரிய வேண்டும் என்று அவருடைய அம்மா துணியை கட்டி அனுப்பி விட்டார். கடைசியில் வளைகாப்பு நடக்கும்போது உண்மையை தமிழ்செல்வி எல்லோரிடமும் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்.

சீரியல் ட்ராக்:

இதனால் மொத்த குடும்பமும் உடைந்து விட்டது. வேதனையில் சேது குடிக்க ஆரம்பித்து விடுகிறார். தற்போது சீரியலில் உண்மையிலேயே தமிழ் செல்வி கர்ப்பமாக இருக்கிறார். இந்த சந்தோஷத்தை சேதுவிடம் தமிழ் செல்வி சொல்கிறார். ஆனால், சேது அந்த குழந்தைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று ரொம்ப கேவலமாக தமிழ் செல்வியை பேசி விடுகிறார். இதனால் பொங்கி எழுந்த தமிழ்ச்செல்வி, இனி நீ எனக்கு கணவனும் இல்லை. நான் உனக்கு மனைவியும் இல்லை.

https://youtu.be/gqu3eh95iuE?si=xum1haoh1OClNoMd

இன்றைய எபிசோட்:

என் குழந்தையை வளர்த்து என்னால் தனியாளாக நின்று சாதிக்க முடியும் என்று சவால் விட்டு அங்கிருந்து வருகிறார். பின் வீட்டிற்கு வந்தவுடன் தன்னுடைய தந்தை, தன்னுடைய மாமனாரின் பெயரை சொல்லி பணம் வாங்கி குடித்து அழித்தது தெரிகிறது. இதனால் கோபப்பட்ட தமிழ்செல்வி, தன்னுடைய தந்தையிடமும் சண்டை போடுகிறார். பின் அவர், எனக்கு கணவனும் தேவையில்லை, தந்தையும் தேவையில்லை. என்னால் குழந்தையும் வளர்த்துக் கொண்டு என்னுடைய ஆசைப்பட்ட டாக்டர் படிப்பையும் படிப்பேன் என்று சவால் விடுகிறார். இனி அடுத்து என்ன நடக்கும்? என்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full