தாமரை கழுத்தில் தாலி கட்டியது யாரு? காமேஷ் பிச்சை செய்த வேலை - விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்- சேது இருவரும் சந்தோஷமாக தாமரையை பற்றியும் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அதற்குப்பின் தாமரை வீட்டில் நடந்ததை பற்றி காமேஷிடம் சொன்னார். அதற்கு காமேஷ், நீ தயாராக இரு. நான் நல்ல ஒரு ஐடியா யோசிச்சிட்டு உன்னிடம் சொல்கிறேன் என்றார். அதற்கு பின் தாமரை பின் வாசல் வழியாக கிளம்பப் பார்த்தார். அங்கேயும் ஈஸ்வரி வந்து தடுத்து விட்டார். என்ன செய்வது என்று புரியாமல் தாமரை குழப்பத்தில் இருந்தார்.
ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே திருமணத்திற்கு தயாராகி இருந்தார்கள். தாமரை என்ன செய்வது என்று புரியாமல் பயத்தில் தன் அம்மாவிடம் புலம்பி கொண்டிருந்தார். அப்போது ராஜாங்கம், தாமரையை அழைத்தார். வீட்டில் உள்ள எல்லோருமே தாமரைக்கு வாழ்த்துக்கள் சொன்னார்கள். பின் எல்லோரும் மண்டபத்திற்கு சென்றார்கள். மண்டபத்தில் தாமரை, எப்படி தப்பிப்பது? காமேஸ் பிச்சை வந்துவிடுவாரா? என்று பயத்திலேயே புலம்பி கொண்டிருந்தார்.
சின்ன மருமகள்:
அப்போது அங்கு வந்து ஈஸ்வரி, தாமரையை தப்பிக்க விடக்கூடாது என்பதற்காக ரூமிலேயே இருந்தார். இன்னொரு பக்கம் மாப்பிள்ளை வீட்டில் வந்து விட்டார்கள். ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக இருந்தார்கள். காமேஷ் போன் சுவிட்ச் ஆப்பாக இருப்பதால் தாமரை ரொம்பவே பயந்து கொண்டிருந்தார். அப்போது வந்த தமிழ், தாமரையை மேடைக்கு அழைத்தார்கள் என்றார். இதனால் தாமரை-சாவித்ரி பதறுகிறார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் தாமரை மணமேடைக்கு சென்று புடவை வாங்கிக் கொண்டு ரூமிற்கு வந்து விடுகிறார். காமேஷ் பிச்சை ஃபோன் எடுக்கவில்லை என்று தாமரை ரொம்பவே புலம்பி கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் ரொம்பவே எமோஷனலாகி அழ ஆரம்பித்து விடுகிறார். அந்த சமயம் பார்த்து காமேஷ் பிச்சை ஃபோன் எடுத்து ஒரு மூட்டைக்குள் இருப்பதாக சொல்கிறார். பின் அந்த ரூமுக்குள் இருக்கும் முட்டையை திறந்தால் காமேஷ் பிச்சை இருக்கிறார். தாமரை சந்தோசப்படுகிறார். பின் இருவரும் அங்கிருந்து தப்பிக்க திட்டம் போடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
சாவித்திரி, அதற்கு நேரமில்லை. இங்கே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்கிறார். இன்னொரு பக்கம் தாமரையை அழைத்து வரச் சொல்லி மணமேடையில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சேது, தமிழ்ச்செல்வி, கருப்பன் மூவருமே தாமரையின் ரூமுக்கு வெளியே நின்று அழைக்கிறார்கள். உள்ளே காமேஷ், தாமரை கழுத்தில் தாலியை கட்டி விடுகிறார். பின் அந்த இடத்திற்கு ராஜாங்கமும் வந்து தாமரையை அழைக்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் பயத்தில் சாவித்திரி -தாமரை இருவரும்
இருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது