கல்யாணத்தை நிறுத்த போராடும் தாமரை, சந்தோஷத்தில் ராஜாங்கம் குடும்பம் - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்-சேது இருவரும் தாமரையை பார்த்து திருமணத்திற்கு வாழ்த்துக்கள் சொல்லி அறிவுரை எல்லாம் செய்தார்கள். மனதுக்குள் கோபம் இருந்தாலும் தாமரை வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் அமைதியாக இருந்தார். அதற்குப் பின் போனில் தாமரை, திருமணத்தை எப்படி தடுப்பது? என்றார். காமேஷ் பிச்சை, நீ தயாராக இரு. காலையில் என்னுடைய ஆட்கள் உன்னை அழைத்துக் கொண்டு வருவார்கள். கோயிலில் திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். தாமரையும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
தாமரை விடை விட்டு கிளம்பத் திட்டம் போடுகிறார். சாவித்திரி அதற்கு துணையாக இருந்தார். இதையெல்லாம் கேட்ட ஈஸ்வரி- சித்ரா இருவரும் வீட்டு வாசலில் பாயை போட்டு படுத்து கொண்டார்கள். இதை பார்த்து தாமரைக்கு பயங்கர கடுப்பானது. பின் இதைப் பற்றி சாவித்திரி, ஈஸ்வரிடம் விசாரித்தார். அதற்கு ஈஸ்வரி, என் கனவில் யாரோ ஓடிப்போவது போல் இருந்தது. அதனால் தான் இங்கே படிக்கிறேன் என்றார்.
சின்ன மருமகள்:
இதனால் தாமரை எதுவும் பேசாமல் ரூமுக்கு வந்து விட்டார்கள். இன்னொரு பக்கம் தமிழ்- சேது இருவரும் சந்தோஷமாக தாமரையை பற்றியும் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அதற்குப்பின் தாமரை வீட்டில் நடந்ததை பற்றி காமேஷிடம் சொன்னார். அதற்கு காமேஷ், நீ தயாராக இரு. நான் நல்ல ஒரு ஐடியா யோசிச்சிட்டு உன்னிடம் சொல்கிறேன் என்றார். அதற்கு பின் தாமரை பின் வாசல் வழியாக கிளம்பப் பார்த்தார். அங்கேயும் ஈஸ்வரி வந்து தடுத்து விட்டார். என்ன செய்வது என்று புரியாமல் தாமரை குழப்பத்தில் இருந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே திருமணத்திற்கு தயாராகி இருக்கிறார்கள். தாமரை என்ன செய்வது என்று புரியாமல் பயத்தில் தன் அம்மாவிடம் புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது ராஜாங்கம், தாமரையை அழைக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே தாமரைக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். பின் எல்லோரும் மண்டபத்திற்கு செல்கிறார்கள்.
மண்டபத்தில் தாமரை, எப்படி தப்பிப்பது? காமேஸ் பிச்சை வந்துவிடுவாரா? என்று பயத்திலேயே புலம்பி கொண்டிருக்கிறார்.
சீரியல் ட்ராக்:
அப்போது அங்கு வந்து ஈஸ்வரி, தாமரையை தப்பிக்க விடக்கூடாது என்பதற்காக ரூமிலேயே இருக்கிறார். இன்னொரு பக்கம் மாப்பிள்ளை வீட்டில் வந்து விடுகிறார்கள். ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். காமேஷ் போன் சுவிட்ச் ஆப்பாக இருப்பதால் தாமரை ரொம்பவே பயந்து கொண்டிருக்கிறார். அப்போது வந்த தமிழ், தாமரையை மேடைக்கு அழைக்கிறார்கள் என்று சொல்கிறார். இதனால் தாமரை-சாவித்ரி பதறுகிறார்கள்.