விறுவிறுப்பாக நடக்கும் திருமணம், தாமரை கழுத்தில் தாலி கட்டப்போவது யார்? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கல்லூரியில் சேது- தமிழ் இருவரும் ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள். இதை பார்த்த ப்ரொபசர், கிளாஸ் இருக்கு நேரமாகவில்லையா? அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறாயே? என்று தமிழை திட்டினார். தமிழும் கல்லூரிக்கு சென்று விட்டார். அதற்கு பின் வீட்டில் ராஜாங்கத்திற்கு சர்வதேச விருது கிடைத்திருப்பதாக டிவியில் நியூஸ் வருகிறது. இதை பார்த்து மொத்த குடும்பமே சந்தோஷப்பட்டது. கட்சியின் தலைவர் ராஜாங்கத்திற்கு போன் செய்து வாழ்த்துக்கள் சொன்னார்.
இன்னொரு பக்கம் தாமரை, சாவித்திரி இருவரும் கல்யாணத்தை எப்படி நிறுத்த வேண்டி நிறுத்துவது என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த சித்ரா, காமேஸ் உடன் தாமரை பேசியிருந்த புகைப்படத்தை காண்பித்து மிரட்டினார். தாமரை ஏதேதோ சொல்லி சமாளித்தார். பின் ஈஸ்வரி, கல்யாணம் நடக்கப்போகிறது, ஒழுங்காக நடந்து கொள் என்று அறிவுரை சொல்லிவிட்டு சென்றார்.
இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி, ஜெனிக்கு போன் செய்து விசாரித்தார். அப்போது ஜெனியின் அம்மா, போனை பிடுங்கிக் ஜெனிக்கு திருமணமாகப் போகும் விஷயத்தை சொன்னார்.
சின்ன மருமகள்:
தமிழ்ச்செல்வி சோகமாக இருப்பதை பார்த்து சேது விசாரித்தார். அப்போது தமிழ், என்னுடன் படிக்கும் ஜெனியும் சக்தியும் காதலிக்கிறார்கள். இதை அறிந்த ஜெனியின் வீட்டில் அவளுக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். ஜெனி ரொம்பவே வருத்தப்பட்டார். ஏதாவது செய்யணும் என்று சொன்னார். இதற்கு பின் வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். பின் சேது, தமிழ்ச்செல்வியின் தோழி ஜெனி காதல் விஷயத்தை பற்றி ராஜாங்கத்திடம் சொல்லி உதவி கேட்டார்.
சீரியல் ட்ராக்:
ராஜாங்கம், ஜெனி அப்பா- அம்மாவிடம் பேசிப் பார்க்கலாம். ஏதாவது செய்ய முயற்சி செய்கிறேன் என்றார். அதற்குப்பின் தமிழ், சேது இருவரும் கல்லூரிக்கு சென்று விட்டார்கள். அங்கு சக்தி, தமிழை சந்தித்து ஜெனியை பற்றி விசாரித்தார். தமிழ், ஜெனிக்கு நடக்கும் திருமணம் ஏற்படுகளைப் பற்றி சொன்னார். சக்தி ரொம்பவே வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் தாமரையின் திருமணத்திற்காக ராஜாங்கம் நகை, புடவை எல்லாம் வாங்கி தந்தார். தாமரை தன் காதலைப் பற்றி வெளியில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
https://www.youtube.com/watch?v=ufyfgUmJ48g
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமாவில் தாமரைக்கு திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது. தாமரை, காமேஷ் பிச்சைக்கு போன் செய்கிறார். ஆனால், அவருடைய போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது. இதனால் தாமரை என்ன நடக்கும் என்று பயத்தில் இருக்கிறார். பின் மணமேடைக்கு தாமரை அழைக்கிறார்கள். காமேஷ் பிச்சையுடன் திருமணம் நடக்குமா? இல்லையா? என்பதை இனிவரும் நாட்களில் தான் தெரியும்.