போஸின் முகத்திரையை கிழிக்க நினைக்கும் சேது, தாமரை போட்ட மாஸ்டர் பிளான் - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ், நான் மருந்தை எடுத்து வந்தது உண்மை. ஆனால், என் தலையில் அடித்தது போல இருந்தது. போஸ் அடித்தானா? என்று எனக்கு தெரியாது என்று சொன்னார. இதெல்லாம் போஸ் தான் செய்தார் என்று சேதுவுக்கு தெரிந்து விடுகிறது. இன்னொரு பக்கம் போஸ் நிச்சயதார்த்தத்திற்காக வீட்டிற்கு துணி, நகைகளை எல்லாம் வர வைத்து எடுத்தார்கள். ஈஸ்வரி, அவருடைய மகளும் ரொம்ப காஸ்ட்லியான துணிகளை வாங்கினார்கள். வழக்கம் போல சாவித்திரிக்கும் தாமரைக்கும் ரொம்ப குறைவான விலையில் புடவையை கொடுப்பதால் அவர்கள் இருவருமே கோபப்பட்டு அங்கிருந்து சென்று விட்டார்கள்.
அதற்குப்பின் தாமரை குளித்துவிட்டு தயாராகிக் கொண்டிருந்தார். இதை கதவு வழியாக போஸ் பார்த்தார். இதை கவனித்த தாமரை கதவை திறக்க, போஸ் ஏதேதோ சொல்லி சமாளித்தார். அது மட்டும் இல்லாமல் தாமரைக்கு போஸ் ரூட் விட்டார். இதை அறிந்து கொண்ட தாமரை, அம்மா இல்லாத நேரமாக வாருங்கள் என்று சொல்லி அனுப்பினார். பின் போசை எப்படியாவது சிக்க வைத்து கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்றெல்லாம் தாமரை திட்டம் போட்டார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, இந்த கல்யாணத்தில் எந்த பிரச்சினையும் வர கூடாது, ஒழுக்கமாக இரு, மாட்டிக் கொள்ளாதே என்று போஸுக்கு அறிவுரை சொன்னார்.
சின்ன மருமகள் சீரியல்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் போஸ் மருந்தை எடுக்கவில்லை என்று சேதுவுக்கு தெரிந்து விடுகிறது. பின் இதைப்பற்றி சேது தன்னுடைய அண்ணனிடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். அதற்கு அண்ணன், வீட்டில் உண்மையை சொல்லலாம் என்கிறார். அதற்கு சேது, அப்பா நம்ப மாட்டார். ஆதாரத்துடன் அப்பாவிடம் சொல்லணும் இல்லையென்றால் சித்தியே பழைய பகையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு பிரச்சனை எழுப்புவார்கள் என்று சொல்கிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரியின் அண்ணன் மகள், தங்கை மகன் இருவருமே போஸ் திருமணத்திற்காக வந்திருக்கிறார்கள்.
இன்றைய எபிசோட்:
அவர்கள் மாடன் உடையில் இருப்பதால் அப்பத்தா திட்டுகிறார். பின் வீட்டில் உள்ள எல்லோரையும் நலம் விசாரித்துவிட்டு ஈஸ்வரி, அவர்கள் இருவருக்கும் வீட்டை சுத்தி காண்பிக்கிறார். அதற்குப்பின் சேது, புதிய ஸ்பீக்கரை வாங்கி வந்து வீட்டில் வைக்கிறார். அதில் இனிமையான பாடல்களை எல்லாம் போட வைக்கிறார். இதைப்பற்றி தனம், மலர் இருவரும் அந்த பொருள் கொண்டு வந்த நபர்களிடம் விசாரிக்கிறார்கள். அதற்கு அந்த நபர், தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதால் அவர் ஸ்பீக்கர் வேண்டும் என்று கேட்டார். அதுவும் இனிமையான பாடல்கள் அதில் இறக்கி கொடுக்க சொன்னார்.
சீரியல் ட்ராக்:
அதனால்தான் நாங்களும் கொண்டு வந்து வைத்தோம் என்று சொன்னவுடன் இருவரும் சந்தோஷப்படுகிறார்கள். அதற்குப் பின் தாமரை, தன்னிடம் போஸ் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி சொல்கிறார். இதை கேட்டு சாவித்திரி பயங்கரமாக கோவப்படுகிறார். அதற்கு தாமரை, போஸை கையும் களவுமாக மாட்டிவிட்டு இந்த கல்யாணத்தை நிறுத்த வைக்க வேண்டும். அதற்கு என்னிடம் திட்டம் இருக்கிறது. நீ காவியா உடைய போன் நம்பரை மட்டும் எப்படியாவது எடுத்து வந்து விடு என்று சொல்கிறார்.
அதற்கு சாவித்திரி, ஈஸ்வரி போனில் நம்பரை எடுக்கப் போகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.