ஈஸ்வரி வலையால் சிக்கிய தாமரை, சேதுவிடம் தமிழ்செல்வி சொன்ன விஷயம் - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் கோர்ட்டில் ஒவ்வொரு ஜோடிகள் விவாகரத்து கேட்டு பேசிக்கொண்டிருப்பதை தமிழ்-சேது பார்த்தார்கள். அதற்குப்பின் கோர்ட்டில் சேது, தான் செய்த தவறை மனப்பூர்வமாக உணர்ந்து தமிழிடம் மன்னிப்பு கேட்டார். பின் விவாகரத்து வேண்டாம் என்றார். இதைக் கேட்டு தமிழ் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்கிறார். இன்னொரு பக்கம் தாமரை, சாவித்திரி இருவரும் கோயிலுக்கு போனார்கள். இதை அறிந்த ஈஸ்வரி, அந்த பிச்சைக்காரனை பணக்காரன் போல் வேஷம் போட்டு வர சொன்னார்.
சேது, தான் செய்த தவறை உணர்ந்து அனைவரும் முன்பும் கை கூப்பி மன்னிப்பு கேட்டார். தமிழ்ச்செல்வியால் எதுவுமே பேச முடியவில்லை. சேது தனக்கு விவாகரத்து வேண்டாம் என்று ரொம்ப எமோஷனலாக பேசி அழுதார். பின் நீதிபதி, தமிழ்செல்வி இடம் விசாரித்தார்கள். தமிழ்செல்வி, தன்னுடைய அம்மா, மாமனார், அப்பத்தா எல்லோரும் சொன்னதை நினைத்து பார்த்து விவாகரத்து வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
சின்ன மருமகள்:
இதைக் கேட்டு சேது ரொம்பவே சந்தோஷப்பட்டார். பின் நீதிபதியும் விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்கள். பின் சந்தோஷத்தில் சேது ஆடிப் பாடி குதித்தார். பின் விவாகரத்து வாங்க வந்தவர்களிடம் சேது, அறிவுரை சொன்னார். பின் சேது, தமிழுக்கு பூ கொடுத்து தன் காதலை வெளிப்படுத்தினார். இன்னொரு பக்கம் தாமரை, சாவித்திரி இருவரும் கோவிலில் இருக்கும்போது அந்த பிச்சைக்காரன் பணக்காரன் போல் கெட்டப் போட்டு வந்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோவிலில் ஈஸ்வரி சொன்ன அந்த பிச்சைக்காரன் காமேஷ் பணக்காரன் போல பயங்கரமாக கெட்டப் போட்டு வருகிறார். அவரை பார்த்தவுடன் தாமரை, சாவித்ரி இருவரும் வாயை பிளந்து விடுகிறார்கள். கோயில் குருக்கள், பிச்சைக்காரர்கள் என எல்லா இடங்களிலும் காசு, நகை என்று காமேஷ் வாரி இறக்கிறார். இதையெல்லாம் பார்த்து தாமரைக்கு ஒன்றுமே புரியவில்லை. சாவித்திரி, கல்யாணம் பண்ணினால் இப்படி ஒரு பணக்காரனை தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் என்றெல்லாம் சொல்கிறார். இதை எல்லாம் கேட்டு ஈஸ்வரி ரொம்பவே சந்தோஷப்படுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் வீட்டில் சேது-தமிழ் இருவரும் விவாகரத்து வாபஸ் வாங்கிய விஷயத்தை அறிந்தவுடன் எல்லோருமே ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். அதற்குப்பின் சேது, தமிழ் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சேது, நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். ஆனால், உன் முகத்தில் அது தெரியவில்லையே என்கிறார். அதற்கு தமிழ், என்னால் சீக்கிரமாக இந்த சந்தோஷத்தை எடுத்துக் கொள்ள முடியவில்லை. எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும். அதுக்கு முழுமையாக நான் என் மனதை தயார் படுத்தனும் என்று சொல்கிறார். அதற்குப்பின் அப்பத்தா, மீண்டும் தமிழை திட்டி சேது வீட்டை விட்டு துரத்துவது போல கனவு காண்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.