பேராசையால் கனவில் கோட்டை கட்டும் தாமரை, அப்பத்தாவின் பயம் - பரபரப்பில் சின்ன மருமகள்

By subhashini · 30/1/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் நீதிபதியும் விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்து விட்டார்கள். பின் சந்தோஷத்தில் சேது ஆடிப் பாடி குதித்தார். பின் விவாகரத்து வாங்க வந்தவர்களிடம் சேது, அறிவுரை சொன்னார். பின் சேது, தமிழுக்கு பூ கொடுத்து தன் காதலை வெளிப்படுத்தினார். இன்னொரு பக்கம் தாமரை, சாவித்திரி இருவரும் கோவிலில் இருக்கும்போது அந்த பிச்சைக்காரன் பணக்காரன் போல் கெட்டப் போட்டு வந்தார்.

கோவிலில் ஈஸ்வரி சொன்ன அந்த பிச்சைக்காரன் காமேஷ் பணக்காரன் போல பயங்கரமாக கெட்டப் போட்டு வந்தார். அவரை பார்த்தவுடன் தாமரை, சாவித்ரி இருவரும் வாயை பிளந்து விட்டார்கள். கோயில் குருக்கள், பிச்சைக்காரர்கள் என எல்லா இடங்களிலும் காசு, நகை என்று காமேஷ் வாரி இறக்கிறார். இதையெல்லாம் பார்த்து தாமரைக்கு ஒன்றுமே புரியவில்லை. சாவித்திரி, கல்யாணம் பண்ணினால் இப்படி ஒரு பணக்காரனை தான் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் என்றெல்லாம் சொன்னார். இதை எல்லாம் கேட்டு ஈஸ்வரி ரொம்பவே சந்தோஷப்பட்டார்.

சின்ன மருமகள்:

அதற்குப்பின் வீட்டில் சேது-தமிழ் இருவரும் விவாகரத்து வாபஸ் வாங்கிய விஷயத்தை அறிந்தவுடன் எல்லோருமே ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். அதற்குப்பின் சேது, தமிழ் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சேது, நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். ஆனால், உன் முகத்தில் அது தெரியவில்லையே என்றார். அதற்கு தமிழ், என்னால் சீக்கிரமாக இந்த சந்தோஷத்தை எடுத்துக் கொள்ள முடியவில்லை. எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும். அதுக்கு முழுமையாக நான் என் மனதை தயார் படுத்தனும் என்றார். அதற்குப்பின் அப்பத்தா, மீண்டும் தமிழை திட்டி சேது வீட்டை விட்டு துரத்துவது போல கனவு காண்கிறார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேது, தமிழை மீண்டும் வீட்டை விட்டு வெளியே துரத்தியது போல அப்பத்தா கனவு கண்டதால் ரொம்பவே கத்துகிறார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே அப்பத்தாவை சமாதானம் செய்து ஆறுதலும் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் காமேஷ் பிச்சை நன்றாக நடித்ததை ஈஸ்வரி, சித்ரா இருவரும் பாராட்டுகிறார்கள். பின் அப்பத்தா கவலையில் இருப்பதை பார்த்த சேது விசாரிக்கிறார். அப்போது அப்பத்தா, கனவில் நடந்ததை சொல்லி வருத்தப்படுகிறார். சேது, அப்படியெல்லாம் நடக்காது என்று தமிழ் தன்னிடம் அவகாசம் வாங்கிய விஷயத்தையும் சொல்கிறார். இதனால் அப்பத்தாவிற்கு கவலை இன்னும் அதிகமாகின்றது.

சீரியல் ட்ராக்:

அதற்குப்பின் தமிழ்ச்செல்வி அம்மா வசந்தி, அப்பத்தாவிற்கு போன் செய்து ஹாஸ்பிடலுக்கு போகும் விஷயத்தை சொல்கிறார். இதனால் அப்பத்தாவும் ரொம்ப சந்தோஷப்படுகிறார். இன்னொரு பக்கம் ஈஸ்வரி, தாமரையை தன் வலையில் சிக்க வைக்க காமேஷ் பிச்சையை பற்றி ஒரு பொய்யான கட்டுரையை பேப்பரில் வரவைக்கிறார். இதை பார்த்து தாமரை ரொம்ப சந்தோஷப்படுகிறார். பின் சாவித்ரி, தாமரை இருவரும் அந்த கட்டுரையை படிக்கிறார்கள். பின் தாமரை, காமேஷை எப்படியாவது கல்யாணம் செய்து கொள்ளணும் என்று சந்தோஷப்பட்டு அவருடன் கனவிலேயே டூயட் பாடுகிறார். அதற்கு பின் ஹாஸ்பிடலுக்கு போகும் விஷயத்தை அப்பத்தா, தமிழ்ச்செல்வி சொல்கிறார். சேது, நானும் ஹாஸ்பிடலுக்கு வருகிறேன் என்று சொல்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full