கோபத்தில் தமிழை அடிக்க போகும் சேது, கண்மணியின் திருமணம் என்ன ஆனது? சின்ன மருமகள்

By subhashini · 10/8/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்ச்செல்வி சொன்ன ஐடியாவை கருப்பு, தாமரை இடம் சொன்னார். இன்னொரு பக்கம் கல்யாண மண்டபத்திற்கு ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே கிளம்பினார்கள். அப்போது கண்மணியை ஆறுமுகம் தான் அழைத்துக் கொண்டு வந்தார். வண்டியில் வரும்போது கண்மணி, நீ தாலி கட்டவில்லை என்றால் நான் செத்து விடுவேன் என்று ரொம்ப எமோஷனலாக அழுது புலம்பினார். ஆறுமுகத்திற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இன்னொரு பக்கம் தாமரை துணி மாற்றுவது போல பேசி ட்ராமா செய்தார். உடனே கருப்பு கேமராவை மறைத்ததால் நந்தகுமார் நண்பர்கள் கோபப்பட்டார்கள்.

கேமராவை நகர்த்துவதற்காக ரூம் சர்வெண்ட் வந்தார். அப்போது கருப்பு, தாமரை இருவருமே அவனை பிடித்து அடித்து உண்மையை கேட்டார்கள். பின் நந்தகுமாரின் நண்பர்கள் இருக்கும் அறைக்கு கருப்பு, தாமரை போலீசை வர வைத்து விட்டார்கள். நந்தகுமார் நண்பர்கள் தப்பிப்பதற்கு முன்பு போலீஸ் அவர்களை பிடித்து விட்டது. உண்மையை கேட்டு போலீஸ் வெளுத்து வாங்குகிறார்கள். அப்போது ஓட்டலுக்கு வரும் பெண்களை தப்பாக வீடியோ எடுத்து வைத்து மிரட்டும் உண்மையை போலீஸ் அறிந்து கொள்கிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணி நந்தகுமார் என்றும் தெரிந்து கொண்டார்கள்.

சின்ன மருமகள் சீரியல்:

பின் கல்யாணத்தை நிறுத்துவதற்காக போலீஸ், கருப்பு, தாமரை எல்லோருமே கிளம்பினார்கள். அப்போது தாமரை, தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து நடந்தது எல்லாம் சொல்லி, உன்னுடைய சொந்தக்காரர் மாப்பிள்ளையை தயாராக சொல் என்றார். இன்னொரு பக்கம் கருப்பு, தமிழ் செல்விக்கு போன் செய்து நடந்ததை எல்லாம் சொன்னவுடன் தமிழ்ச்செல்வி மண்டபத்திற்கு கிளம்பினார். இன்னொரு பக்கம் கண்மணி- ஆறுமுகம் இருவருமே மண்டபத்திற்கு செல்லாமல் வேறு எங்கோ சென்றார்கள். மண்டபத்தில் சேது அம்மா, கண்மணி இன்னும் வரவில்லை என்று புலம்பி கொண்டிருந்தார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் கண்மணி மண்டபத்திற்கு இன்னும் வரவில்லை என்ற விஷயம் ஈஸ்வரிக்கு தெரிந்துவிட்டது. இதனால் கண்மணி அம்மாவிடம் விசாரித்தார். பின் ஈஸ்வரியின் கணவர் கண்மணியை தேடி அலைந்து விட்டு மண்டபத்திற்கு வந்தார். அப்போது அவர், கண்மணியை எங்குமே காணவில்லை காணவில்லை என்று சொன்னார். இந்த விஷயம் ராஜாங்கத்திற்கு தெரிந்து விட்டது. என்ன செய்வது என்று புரியாமல் ராஜாங்கம் ரொம்பவே பதறினார். இன்னொரு பக்கம் ஆறுமுகம், கண்மணியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றார்.

சீரியல் ட்ராக்:

அங்கு இருவரும் மாலை மாற்றி, ஆறுமுகம் கண்மணிக்கு தாலி கட்ட போனார். அந்த சமயம் வந்த தமிழ்ச்செல்வி, திருமணத்தை நிறுத்தி நீ செய்வது ரொம்ப தவறு கண்மணி. நீங்கள் ஆசைப்பட்ட மாதிரி எல்லோர் சமூகத்துடன் கல்யாணம் நடக்க வேண்டும். தயவுசெய்து நான் சொல்வதைக் கேள். நாம் மண்டபத்திற்கு போகலாம் கிளம்பு என்றார். தமிழ்ச்செல்வி செல்வதை கேட்டு ஆறுமுகம் மனம் மாறி மாலையை கழட்டி போட்டார். பின் தமிழ், கண்மணி, ஆறுமுகம் மூவருமே மண்டபத்திற்கு கிளம்பி போனார்கள்.

https://www.youtube.com/watch?v=EaLAm6H-6eA

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆறுமுகம்- கண்மணி திருமணம் செய்து விட்டார். திருமணத்தை நடத்தி வைத்தது தமிழ்ச்செல்வி தான் என்று ராஜாங்கத்திடம் சொல்கிறார்கள். இதைக் கேட்ட சேது கோபப்படுகிறார்கள். பின் மண்டபத்திற்கு தமிழ்ச்செல்வி, ஆறுமுகம்- கண்மணியை அழைத்து வருகிறார்கள். அப்போது ஆறுமுகத்தை அடித்து அங்கிருந்து இழுத்து சென்று விடுகிறார்கள்.
தமிழ்செல்வி மீது சேது கோவப்பட்டு அடிக்கப் போன உடனே கண்மணி, எங்களுக்கு கல்யாணமே ஆகவில்லை என்று சொல்கிறார். பின் ராஜாங்கம், மேடைக்கு போக சொல்கிறார். கண்மணி ஷாக் ஆகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full