தமிழ்ச்செல்வியை அசிங்கப்படுத்தும் தாமரை அம்மா, சேது கொடுத்த பதிலடி - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ராஜாங்கம் வீட்டிற்கு வந்த போலீஸ், செல்லப்பாண்டி உங்கள் பெயரை சொல்லி மோசடி வேலை செய்தது உண்மை என்று நிரூபணம் ஆகிவிட்டது. இந்த வழக்கில் உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று அறிவித்து விட்டார்கள் என்று சொன்னார். இதைக் கேட்டு ராஜாங்கம் குடும்பமே சந்தோஷப்பட்டது. அதற்கு பின் தமிழ்ச்செல்வி படிக்கும் கல்லூரி விழாவிற்கு ராஜாங்கம், சேது இருவருமே சிறப்பு விருந்தினராக சென்றார்கள். அங்கு ராஜாங்கம், கல்லூரி மாணவிக்கு உதவியாக ஸ்கூட்டி வாங்கி தருவதாக ஒத்துக்கொண்டார்.
அது மட்டும் இல்லாமல் அவர், வருடம் வருடம் தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவருக்கு இலவச கல்லூரி கட்டணம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். இதனால் கல்லூரியில் உள்ள மாணவர்கள் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வியின் பள்ளி தோழன் தமிழ்ச்செல்வியின் தோழியை காதலிக்கிறார். இது தெரியாமல் அவருடைய நண்பர் தமிழ்ச்செல்வியை தான் காதலிக்கிறார் என்று புரிந்து கொண்டார். பின் இதைப்பற்றி சேதுவின் அத்தை வைத்திருக்கும் ஆளிடம் அந்த நபர் தவறாக சொல்லி விட்டார். இதை அவர்களுமே வீடியோ எடுத்து விட்டார்கள்.
சின்ன மருமகள் சீரியல்:
நேற்று எபிசோட்டில் தமிழ்செல்வியை அழைத்த கல்லூரி பேராசிரியர், நீ எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கிறாய் என்பது எனக்கு தெரியும். நல்லபடியாக மதிப்பெண் எடுத்து உனக்கான பீஸை நீயே கட்டிக் கொள். நீ நன்றாக படிக்கும் மனைவி என்று தெரியும் என அறிவுரை எல்லாம் சொன்னார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வியின் பள்ளி தோழன், தமிழ்ச்செல்வியின் தோழி இடம் போனில் கடலை போட்டுக் கொண்டிருந்தார். இதை அறியாமல் சேது அவரை பார்த்து முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், சேது அந்த நபரை அடித்தாரா? இல்லையா? என்ன செய்தார்? என்று தெரியவில்லை.
நேற்று எபிசோட்:
உடனே சேது வீட்டில் ராஜாங்கம் மகள் கண்மணிக்கு பெண்பார்க்கும் விஷயமாக பேசினார்கள். ஆனால், கண்மணிக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமே இல்லை. கண்மணி வீட்டில் வேலை செய்யும் ஆறுமுகத்தை தான் காதலிக்கிறார். இருந்தாலும் பெற்றோர்கள் சொன்னதால் தயாராகி வந்தார். மாப்பிள்ளை வீட்டாருக்கு கண்மணியை பிடித்துப் போய் விட்டதாக சொன்னார்கள். அப்போது மாப்பிள்ளை அப்பா, எனக்கு ஒரே கண்டிஷன் தான். கல்யாணத்தை எளிமையாக செய்ய வேண்டும். ஒரே வாரத்தில் கல்யாணத்தை முடித்து இருவரையும் ஃபாரின் அனுப்ப வேண்டும் என்று சொன்னார். இதனால் ராஜாங்கமும் சம்மதித்தார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கண்மணியின் திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதம் என்பதால் வெற்றிலை பாக்கு மாற்றிக் கொள்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து ஆறுமுகம் மனதுக்குள்ளே வேதனைப்பட்டு கொண்டிருக்கிறார். அதற்குப்பின் ரூமிற்கு வந்த ஆறுமுகத்திடம் கண்மணி, என்னுடைய விருப்பத்தை யாருமே கேட்கவில்லை. நான் என்ன செய்வது என்று புலம்பி அழுகிறார். அதற்கு ஆறுமுகம், உங்கள் வீட்டில் சொல்வதைப் போல் செய் என்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இன்னொரு பக்கம் சேதுவை பார்க்க தாமரையும் அவர் அம்மாவும் வருகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அப்போது தாமரையின் உடைய அம்மா, தமிழ்செல்வியை பற்றி ஒரு தவறான வீடியோவை காண்பிக்கிறார். அதை பார்த்து சேது கோபப்படவில்லை. உடனே பதிலுக்கு ஒரு வீடியோவை சேது காண்பிக்கிறார். அதில், நான் தமிழ்செல்வியை ஒருதலையாக காதலித்து உண்மைதான். ஆனால், அவள் காதலிக்கவில்லை. என்னை அவர் அண்ணா என்றுதான் அழைக்கிறார். நான் அவரை என் தங்கையாக தான் பார்க்கிறேன் என்று சொல்கிறார். இதை எல்லாம் பார்த்து தாமரையும் அவருடைய அம்மாவும் வாயடைத்து போனார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது