தமிழ்செல்வியை அசிங்கப்படுத்தும் ராஜாங்கம் குடும்பம், சேது சொன்ன வார்த்தை - சின்ன மருமகள்

By subhashini · 7/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ் செல்வி சொன்னதை வக்கில், சேது அப்பாவிடம் சொன்னார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள். தமிழ்ச்செல்வியின் அப்பா செல்லப்பாண்டி ராஜாங்கத்தின் பெயரைச் சொல்லி ஊர் முழுக்க கடன் வாங்கி இருந்தார்கள். இதை அறிந்த போஸ், கடன் கொடுத்தவரிடம் சேதுவின் அப்பா ராஜாங்கத்தின் மீது கம்ப்ளைன்ட் கொடுங்கள். அதற்காக நான் பணம் தருகிறேன் என்று சொன்னார் அதற்காக அந்த கடன் கொடுத்த நபர் ராஜாங்கத்தின் மீது புகார் கொடுத்தார். பின் இதைப் பற்றி செல்லப்பாண்டிக்கு தெரிய வந்தது.

இதனால் கொந்தளித்த தமிழ்ச்செல்வி, அந்த மனுஷன் கௌரவத்திற்கு எந்த கலங்கமும் வரக்கூடாது. அதற்கு என்ன பண்ண முடியுமோ பண்ணுங்கள் என்று சொன்னார். இன்னொரு பக்கம் செல்லப்பாண்டி செய்த வேலை ராஜாங்கத்திற்கு தெரிந்தது. அதோடு புகார் அளித்த விஷயத்தை அறிந்த சேதுபதி, செல்லப்பாண்டி மொத்த குடும்பத்தையும் பழி வாங்க கொந்தளித்தார். சேது வீட்டில் எல்லோருமே தமிழ்செல்வி குடும்பத்தின் மீது கோபப்பட்டார்கள்.

சின்னமருமகள் சீரியல்:

தமிழ்ச்செல்வி போலீஸ் உடன் சேதுவின் வீட்டிற்கு வந்தார். அங்கு எல்லோருமே தமிழ்செல்வி மீது கொலைகாண்டில் இருந்தார்கள். அப்போது தமிழ்ச்செல்வி, எல்லோரும்என்னை மன்னித்து விடுங்கள். என் மாமனார் மீது எந்த தவறும் இல்லை. என் அப்பா தான் இதையெல்லாம் செய்தார். அவர் செய்தது மிகப்பெரிய தவறு. அதனால் தான் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அவர் மீது கம்ப்ளைன்ட் கொடுத்து அவரை கைது செய்யவும் வைத்தேன். பாதிக்கப்பட்டவர்களிடமும் மாமா மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லிவிட்டேன். இனி நீங்கள் இந்த பிரச்சனையை பற்றி கவலை படவேண்டாம். இதை சொல்லிட்டு போக தான் இங்கு வந்தேன் என்று சொன்னார்.

கடந்த வாரம் எபிசோட்:

பின் தமிழ்செல்வி அங்கிருந்து கிளம்பி விட்டார். இருந்தாலுமே சேதுவின் அத்தை, சித்தி எல்லோருமே தமிழ்செல்வியை பற்றி தேவையில்லாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அப்பத்தா, தமிழ்ச்செல்வியின் மீது எந்த தவறும் இல்லை. தமிழ்ச்செல்வி கர்ப்பமாக இருக்கிறார் என்று அவர் அம்மா சொன்னார். ஊரு முழுக்க பொய் சொல்லி கடன் வாங்கியது அவர் அப்பா தான். எல்லா பிரச்சனைக்கும் தமிழ்ச்செல்வியின் அப்பா அம்மா தான் காரணம். தமிழ்செல்வி என்ன தவறு செய்தால் என்று கேட்டார். இருந்தாலுமே சேது, பாட்டி சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் அவளை மன்னிக்கவே மாட்டேன். இதைப்பற்றி என்னிடம் பேசாதீர்கள் என்று சேது கோபப்பட்டார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ்ச்செல்வி தன்னுடைய வகுப்பிற்கு தாமதமாக போகிறார். இதனால் அங்கு இருந்த ஆசிரியர், தமிழ்ச்செல்வியை திட்டி கிளாசை விட்டு அனுப்பி விடுகிறார். இன்னொரு பக்கம் ராஜாங்கத்தை கைது செய்ய வேண்டும் என்று பணம் கொடுத்தவர்கள் எல்லாம் போராட்டம் செய்கிறார்கள். இதனால் வீட்டிற்கு வந்த ராஜாங்கம் கட்சியை சேர்ந்தவர்கள், உங்கள் மீது எந்த தவறில்லை என்றாலும் கட்சிக்காக நீங்கள் விசாரணை கமிஷனுக்கு வந்து தான் ஆகணும் என்று சொல்கிறார்கள். இதனால் ராஜாங்கம் சரி என்கிறார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வியின் அம்மா, தன் கணவர் ஜெயிலுக்கு போனதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். தமிழ்ச்செல்வி, தன்னுடைய அம்மாவிற்கு நியாயத்தை எடுத்து சொல்லி புரிய வைக்கிறார்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் சேது வீட்டிற்கு சென்ற வக்கீல், நாளை விவாகரத்து கேஸ் வர இருக்கிறது. தமிழ்ச்செல்வியை என்ன காரணத்திற்காக விவாகரத்து செய்யப் போகிறீர்கள் என்று கோர்ட்டில் சொல்ல வேண்டும் என்கிறார். அதற்கு சேதுவின் அத்தை, அவள் நடத்த கெட்டவள் என்று தமிழ்செல்வியைப் பற்றி ரொம்ப மோசமாக பேசுகிறார். இதனால் கோபப்பட்ட சேது, தேவையில்லாத விஷயத்தை பேச வேண்டாம். அவள் கர்ப்பமாக இருப்பதாக பொய் சொல்லியதால் தான் நான் அவரை விவாகரத்து செய்ய போகிறேன். மற்றபடி அவள் மீது எந்த வீண்பழியும் போட விருப்பமில்லை. தயவு செய்து தேவையில்லாத விஷயத்தைப் பற்றி பேசவில்லை என்றார் . பின் ராஜாங்கமும் சேது சொல்வதையே சரி என்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full