சேது போட்ட கண்டிஷன், வக்கீலை வைத்து மிரட்டிய தமிழ்செல்வி - சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் அப்பத்தா, அவள் சட்டப்படிதான் வந்திருந்தார். எதற்காக இப்படி சொல்கிறீர்கள். நீ வீட்டிற்குள் வா தமிழ்செல்வி என்றார். அதற்கு தமிழ் செல்வி, நான் வீட்டுக்கு வர மாட்டேன். கெஸ்ட் ஹவுஸில் இருப்பேன் இருப்பேன் என்று சொன்னார். இதனால் அப்பத்தாவால் எதுவும் பேச முடியவில்லை. அதற்குப்பின் கெஸ்ட் ஹவுஸிற்கு சென்ற தமிழ் செல்வி பால் காய்ச்சி தன்னுடைய அக்காவிற்கு கொடுத்தார். அதற்குப்பின் போன் செய் வக்கீல் இடம் தமிழ்செல்வி, சேது நடந்து கொண்ட விதத்தைப் பற்றி சொன்னார். உடனே வக்கீல், இதற்கு நான் ஒரு முடிவு கட்டுகிறேன் என்றார்.
தமிழ்செல்வியின் வக்கீல் ராஜாங்கம் வீட்டிற்கு வந்தார். அப்போது வக்கீல், கோர்ட் ஆர்டரை மதிக்க வேண்டும். சேது கண்டிப்பாக தமிழ் செல்வியுடன் ஆறு மாதம் சேர்ந்து வாழ வேண்டும். நீங்கள் முடியாது என்று மறுத்தால் கண்டிப்பாக உங்கள் மீது கேஸ் போடுவோம் என்று சொன்னார். அதற்குப்பின் சேதுவிடம் ராஜாங்கம், கோர்ட் ஆர்டரை மதிக்க வேண்டும் என்று சொல்வதால் சேதுவிற்கு வேறு வழி தெரியாமல் சம்மதித்தார். அதற்கு பின்பு சேதுவின் அத்தை, சித்தி இருவருமே தமிழ்செல்வியை பற்றி மீண்டும் தேவையில்லாமல் பேசி சேதுவை உஸ் பேத்தி அனுப்பி இருந்தார்கள்.
சின்ன மருமகள் சீரியல்:
தமிழ்செல்வி இருக்கும் இடத்திற்கு போன சேது, வழக்கம் போல் அவரிடம் சண்டை வாங்கிக் கொண்டிருந்தார். அதற்குப்பின் சேது, என்னுடைய துணிகள் எல்லாம் துவைத்துவை என்றார். அதற்கு தமிழ் செல்வி, நான் உங்களுடன் சேர்ந்து வாழ வந்தேன். உங்களுக்கு சேவகம் செய்யவில்லை என்று நக்கலாக சொல்லி சிரித்தார். அதற்குப்பின் தமிழ்ச்செல்விக்கு போன் செய்த அவருடைய அம்மா நடந்ததை பற்றி விசாரித்தார். இன்னொரு பக்கம் சேது, தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று சாப்பிட போனார். அப்போது அப்பத்தா, அந்த வீட்டில் தான் சாப்பிட வேண்டும். நீ இங்கு வரக்கூடாது என்று சொன்னார்.
நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் அப்பத்தா, எந்த ஒரு பெண்ணின் தேவை இல்லாமல் உன்னால் வாழ முடியாதா? நீ சாப்பிடுவது என்றால் உன்னுடைய வீட்டில் உன்னுடைய பொண்டாட்டி இடம் சொல்லி சமைத்து சாப்பிடு. ஒழுங்கு மரியாதையாக இங்கு இருந்து கிளம்பி என்று திட்டி விட்டார். இதனால் சேது கோபப்பட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வியை சந்தித்த சேதுவின் சித்தி, கடை பக்கம் போனேன். நீ கர்ப்பமாக இருப்பதால் பழம் வாங்கிக் கொண்டு வந்தேன். நீ அங்கு வந்து மகாராணி போல் வாழ வேண்டியது.
சீரியல் ட்ராக்:
உன்னுடைய நிலைமை எப்படி இருக்கிறது பார். நான் எப்போதும் உனக்கு தான் சப்போர்ட் செய்வேன் என்று பேசி இருந்தார். ஆனால், தமிழ் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை. அதற்குப்பின் வீட்டிற்கு வந்த சேது, தனக்கு தெரிந்ததை சமைத்தார். தமிழ்ச்செல்வி வாய்க் ருசியாக சமைக்கிறார். இருவருமே தனித்தனியாக தாங்கள் சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டார்கள். சேது சமைத்த சாப்பாடு வாயிலேயே வைக்க முடியவில்லை. இதனால் அவர் சாப்பாட்டை ஆர்டர் போட்டார்.
இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் சேது ஆர்டர் செய்த சாப்பாடு வந்து விடுகிறது. தமிழ்செல்வியை வெறுப்பேற்ற வேண்டும் என்று வகைவகையாக வைத்து சேது சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். பின் தமிழ் நினைத்தது போலவே சேதுக்கு சாப்பாடு ஒத்துக் கொள்ளவே இல்லை. வாந்தி எடுத்து ஒண்ணுமே முடியாமல் அவஸ்தை பட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு பின் தமிழ் செல்வி கல்லூரிக்கு கிளம்புகிறார். ஆனால், சேது முடியாது என்று மறுக்கிறார். உடனே தமிழ்செல்வி, வக்கீலுக்கு போன் செய்ய, அவர் படிக்க அனுமதிக்கவில்லை என்றால் சேது மீது கேஸ் போடலாம் என்கிறார். அதனால் சேது எதுவும் பேசவில்லை. தமிழ்செல்வி கல்லூரி சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் சேது வாய்க்கு ருசியாக சாப்பிட வேண்டும் என்று பிரியாணி சமைத்து வைக்கிறார். இதை பார்த்த அப்பத்தா, சேது சமைத்த பிரியாணியில் உப்பு, காரத்தை கொட்டி வைக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது