கோர்ட்டில் விவகாரத்து வழக்கு, சேது-தமிழ் செல்வி சொன்ன வார்த்தை - சின்ன மருமகள்

By subhashini · 8/7/2025

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ்ச்செல்வி போலீஸ் உடன் சேதுவின் வீட்டிற்கு வந்தார். அங்கு எல்லோருமே தமிழ்செல்வி மீது கொலைகாண்டில் இருந்தார்கள். அப்போது தமிழ்ச்செல்வி, எல்லோரும்என்னை மன்னித்து விடுங்கள். என் மாமனார் மீது எந்த தவறும் இல்லை. என் அப்பா தான் இதையெல்லாம் செய்தார். அவர் செய்தது மிகப்பெரிய தவறு. அதனால் தான் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அவர் மீது கம்ப்ளைன்ட் கொடுத்து அவரை கைது செய்யவும் வைத்தேன். பாதிக்கப்பட்டவர்களிடமும் மாமா மீது எந்த தவறும் இல்லை என்று சொல்லிவிட்டேன். இனி நீங்கள் இந்த பிரச்சனையை பற்றி கவலை படவேண்டாம். இதை சொல்லிட்டு போக தான் இங்கு வந்தேன் என்று சொன்னார்.

பின் தமிழ்செல்வி அங்கிருந்து கிளம்பி விட்டார். இருந்தாலுமே சேதுவின் அத்தை, சித்தி எல்லோருமே தமிழ்செல்வியை பற்றி தேவையில்லாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அப்பத்தா, தமிழ்ச்செல்வியின் மீது எந்த தவறும் இல்லை. தமிழ்ச்செல்வி கர்ப்பமாக இருக்கிறார் என்று அவர் அம்மா சொன்னார். ஊரு முழுக்க பொய் சொல்லி கடன் வாங்கியது அவர் அப்பா தான். எல்லா பிரச்சனைக்கும் தமிழ்ச்செல்வியின் அப்பா அம்மா தான் காரணம். தமிழ்செல்வி என்ன தவறு செய்தால் என்று கேட்டார். இருந்தாலுமே சேது, பாட்டி சொல்வதை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் அவளை மன்னிக்கவே மாட்டேன். இதைப்பற்றி என்னிடம் பேசாதீர்கள் என்று சேது கோபப்பட்டார்.

சின்னமருமகள் சீரியல்:

நேற்று எபிசோட்டில் தமிழ்ச்செல்வி தன்னுடைய வகுப்பிற்கு தாமதமாக போனார். இதனால் அங்கு இருந்த ஆசிரியர், தமிழ்ச்செல்வியை திட்டி கிளாசை விட்டு அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் ராஜாங்கத்தை கைது செய்ய வேண்டும் என்று பணம் கொடுத்தவர்கள் எல்லாம் போராட்டம் செய்தார்கள். இதனால் வீட்டிற்கு வந்த ராஜாங்கம் கட்சியை சேர்ந்தவர்கள், உங்கள் மீது எந்த தவறில்லை என்றாலும் கட்சிக்காக நீங்கள் விசாரணை கமிஷனுக்கு வந்து தான் ஆகணும் என்று சொன்னார்கள். இதனால் ராஜாங்கம் சரி என்றார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வியின் அம்மா, தன் கணவர் ஜெயிலுக்கு போனதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருக்க, தமிழ்ச்செல்வி நியாயத்தை எடுத்து சொல்லி புரிய வைத்தார்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் சேது வீட்டிற்கு சென்ற வக்கீல், நாளை விவாகரத்து கேஸ் வர இருக்கிறது. தமிழ்ச்செல்வியை என்ன காரணத்திற்காக விவாகரத்து செய்யப் போகிறீர்கள் என்று கோர்ட்டில் சொல்ல வேண்டும் என்றார். அதற்கு சேதுவின் அத்தை, அவள் நடத்த கெட்டவள் என்று தமிழ்செல்வியைப் பற்றி ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட சேது, தேவையில்லாத விஷயத்தை பேச வேண்டாம். அவள் கர்ப்பமாக இருப்பதாக பொய் சொல்லியதால் தான் நான் அவரை விவாகரத்து செய்ய போகிறேன். மற்றபடி அவள் மீது எந்த வீண்பழியும் போட விருப்பமில்லை. தயவு செய்து தேவையில்லாத விஷயத்தைப் பற்றி பேசவில்லை என்றார் .

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்று எபிசோட்டில் சேது தனியாக ரூமில் இருப்பதை பார்த்து அவருடைய சித்தி,அத்தை எல்லோரும் சேர்ந்து தமிழ்ச்செல்வியை பற்றி தப்பு தப்பாக பேசுகிறார்கள். இதனால் கோபப்பட்டு சேது, நீங்கள் தமிழ் செல்வி பற்றியை பேசுவதற்கு தகுதி இல்லை. என்ன செய்யணும் என்று எனக்கு தெரியும். தேவை இல்லாதது பற்றி பேசாதீர்கள் என்று திட்டி அவர்களை வெளியே அனுப்பி விடுகிறார். காலையில் சேது கோர்ட்டுக்கு கிளம்ப தயாராகி இருக்கிறார். அப்போது சேதுவின் அப்பா ராஜாங்கம், நீ குடும்பத்திற்காக எல்லாம் விவாகரத்துக்கு செய்ய வேண்டாம்.

சீரியல் ட்ராக்:

உன்னுடைய மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதை செய் என்கிறார். உடனே சேது, நான் விவாகரத்து செய்வதில் உறுதியாக இருக்கிறேன் என்கிறார். அதற்குப்பின் அப்பத்தா, விவாகரத்து செய்ய வேண்டாம் என்று சேதுவிடம் அழுது புலம்புகிறார். ஆனால், சேது அப்பத்தாவை திட்டி விட்டு சென்று விடுகிறார். பின் கோர்ட்டுக்கு சேது, தமிழ்ச்செல்வி வந்து விடுகிறார்கள். நீதிபதி வழக்கை விசாரிக்கிறார். அப்போது சேது, எனக்கு விவாகரத்து வேண்டும் என்றார். ஆனால், தமிழ் செல்வி விவாகரத்து வேண்டாம் என்கிறார். இதனால் நீதிபதி, விவாகரத்து வாங்குவதற்கு என்ன காரணம் என்று சேதுவிடம் கேட்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full