தன் தோழியின் காதலுக்கு துணையாக தமிழ் பிரச்சனையில் சிக்கிக் கொள்வாரா? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழின் தங்கை, நான் உங்களை மாமாவாக தான் நினைக்கிறேன். உங்களுக்கும் இருக்கும் பிரச்சனைக்கு எனக்கு தெரியாது என்றார். இதனால் மனம் மாறிய சேது, தமிழின் தங்கைக்கு உதவினார். அதற்குப்பின் எல்லோரும் கேம்ப் போகும் விஷயத்தைப் பற்றி தாமரையும் அவருடைய அம்மாவும் ஈஸ்வரிடம் சொல்லி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். அதனால் ஈஸ்வரி, அவருடைய மகளும் கேம்ப் போவதற்காக தயாராகினார்கள்.
இன்னொரு பக்கம் ஆறுமுகம் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதை பார்த்த கண்மணி கோபப்பட்டு சண்டை போட்டார். அதற்கு ஆறுமுகம், நண்பர்கள் பார்ட்டி கேட்டார்கள் கொடுத்தேன். அப்படித்தான் குடித்துவிட்டு வருவேன். அதை நீ பழகிக்கொள் என்று திமிராக பேசி இருந்தார். இதை பார்த்து கண்மணிக்கு கோபம் தான் வந்தது. மறுநாள் காலையில் மருத்துவ முகாமிற்கு ராஜங்கம் குடும்பத்தில் எல்லோருமே கிளம்பினார்கள். ஆனால், ஆறுமுகம் மட்டும் போகவில்லை. ஈஸ்வரியும் அவருடைய மகளுமே கிளம்பினார்கள்.
சின்ன மருமகள்:
நேற்று எபிசோட்டில் மருத்துவ முகாம் நடக்கும் மலை கிராமத்திற்கு ராஜாங்கம் குடும்பத்தில் சென்று விட்டார்கள். அங்கு மருத்துவ முகாமை பற்றி ராஜாங்கம் நிறைய விஷயங்களை சொன்னார். இன்னொரு பக்கம் ராஜாங்கத்தின் எதிரி, போஸ் உடன் சேர்ந்து ராஜாங்கத்தை அழிக்க திட்டம் போட்டார்.
அதற்குப்பின் மருத்துவ முகாமில் ராஜங்கம் குடும்பத்தில் உள்ள எல்லோருமே ரத்த தானம் செய்தார்கள். தாமரை, ஈஸ்வரிக்கு விருப்பமில்லை என்றாலும் ரத்த தானம் கொடுத்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கேம்பில் தமிழ்செல்வி எல்லோருக்கும் பிபி, சுகர் டெஸ்ட் செய்கிறார். இதை ஓரமாக நின்று சேது பார்த்து ரசிக்கிறார். அதற்குப்பின் கேம்ப் நடக்கும் இடத்தில் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். அங்கு பெரிய பசங்களுக்கு போட்டியாக பெரிய இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு போன சேது சிறுவர்களுக்கு சப்போர்ட் செய்து கிரிக்கெட் விளையாடுகிறார். ஆரம்பத்தில் சேது தடுமாறினாலும் ஒரு வழியாக விளையாடி கிரிக்கெட்டில் வெற்றி பெறுகிறார். இதையெல்லாம் சேது குடும்பத்தினர் பார்த்து கைகட்டி கொண்டாடுகிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அதற்கு பின் தமிழ்ச்செல்வியின் தோழி ஜெனி, நான் காதலிக்கும் விஷயம் வீட்டிற்கு தெரிந்து விட்டது. அதனால் தான் என் படிப்பை நிறுத்துகிறார்கள் என்று எமோஷனலாக சொல்லி அழுகிறார். அப்போது தமிழ்ச்செல்வி, எதனால் உங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று கேட்கிறார். அதற்கு ஜெனி, நானும் சக்தியும் வெவ்வேறு மதம், அதோட அவர் ஜாதியை தெரிந்து கொண்டு இந்த பிரச்சனை செய்கிறார்கள் என்கிறார். அந்த சமயம் பார்த்து தமிழில் மொபைலுக்கு சக்தி போன் செய்து ஜெனியிடம் பேசுகிறார். தமிழ் செல்வி தன்னுடைய தோழிக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.