கண்மணி வாழ்கைக்காக போராடும் தமிழ்செல்வி, கொந்தளித்த சேது - விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, அவள் என் வாழ்க்கை விட்டு போன பிறகு பெயர் எதற்கு? என்று சொல்லி விட்டார். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வி ஹோட்டலில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தார். அந்த ஓட்டலுக்கு சேது தன்னுடைய நண்பரை அழைத்து வந்தார். தமிழ் செல்வி ஓட்டலில் வேலை செய்வதை பார்த்து சேது ஷாக் ஆனார். பின் தமிழ்ச்செல்வி சாப்பாட்டை பரிமாறும்போது அங்கு குறுக்கே வந்த சிறுவன் தமிழ்செல்வியை தள்ளி விடுகிறான். அதனால் சேது மீது தண்ணீர் கொட்டி விட்டது.
இதை பார்த்த ஹோட்டல் ஓனர் தமிழ்ச்செல்வியை கண்டமேனிக்கு எல்லார் முன் அவமானப்படுத்தி விட்டார். சேதுவால் எதுவுமே பேச முடியவில்லை. அதற்கு பின் ஓனரிடம் சேது, அந்த பொண்ணு மீது எந்த தவறும் இல்லை. யாராக இருந்தாலும் மரியாதை கொடுத்து பேசுங்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டு சென்றார். அதற்குப்பின் வேலையை முடித்துவிட்டு தமிழ்ச்செல்வி வீட்டிற்கு வந்தார். இதை பார்த்த சேதுவின் அத்தை, சித்தி எல்லோருமே கோபப்பட்டு கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். உடனே தமிழ்ச்செல்வி அவர்கள் பதிலுக்கு பதில் கொடுத்தார்.
சின்ன மருமகள் சீரியல்:
நேற்று எபிசோட்டில் சேதுவின் அத்தை,சித்தி இருவருமே மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். உடனே தமிழ் செல்வி, நான் ஓட்டலில் வேலை செய்கிறேன். அதனால் தான் வருவதற்கு லேட் ஆனது. இதெல்லாம் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கிளம்பி விட்டார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த தமிழ்செல்வி இடம் சேது, எதற்காக நீ ஓட்டலில் வேலை செய்தார். வேறு ஏதாவது வேலை பார்க்கலாமே? என்று சொன்னார். அதற்கு தமிழ்செல்வி, எனக்கு படிப்பு செலவு, வீட்டு செலவு, ஹாஸ்பிடல் செலவு என்று நிறைய செலவிருக்கிறது. அதையெல்லாம் நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்.
நேற்று எபிசோட்:
மறுநாள் காலையில் கண்மணி, என் திருமணத்திற்கான வேலைகள் மும்முரமாக நடக்கிறது. இன்னொரு பக்கம் தமிழ்செல்வி அம்மா, தன்னுடைய கணவரை பார்ப்பதற்காக ஜெயிலுக்கு சென்றிருந்தார். அப்போது தமிழ்செல்வியை பற்றி எல்லாம் சொன்னார். அதோடு கண்மணிக்கு கல்யாணம் நடக்கும் விஷயத்தையும் சொன்னார். மாப்பிள்ளை பற்றி கேட்டவுடன் தமிழ் செல்வின் அப்பா ஷாக் ஆனார். பின் அவர், சரியான பொம்பள பொறுக்கி. அவனுக்கு நிறைய பிரச்சனை இருக்கு. தயவு செய்து இந்த கல்யாணத்தை நிறுத்தி என்று சென்றார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில் தமிழ்ச்செல்வியை பார்க்க அவருடைய அம்மா ஹோட்டலுக்கு செல்கிறார். அங்கு தமிழ்செல்வி அம்மா, கண்மணிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை ரொம்ப கெட்டவன்.
பல பெண்களுடன் பழக்கம் இருக்கிறது. அவனுக்கு தீராத வியாதி எல்லாம் இருக்கிறது என்றெல்லாம் சொல்கிறார். இதைக் கேட்டவுடன் தமிழ்ச்செல்வி அதிர்ச்சியாகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் கண்மணியை பார்க்க ஆறுமுகம் வருகிறார். அப்போது கண்மணி, நீங்கள் என் கழுத்தில் தாலி கட்டவில்லை என்றால் நான் விஷம் குடித்து இறந்து விடுவேன் என்று சொல்கிறார். இதை கேட்டு ஆறுமுகம் ரொம்பவே எமோஷனலாக அழுகிறார். அந்த சமயம் பார்த்து ஈஸ்வரி வந்து விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
பின் ஆறுமுகம், ஏதோ சொல்லி சமாளித்து விட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். பின் வீட்டில் உள்ள எல்லோருமே கல்யாணத்திற்கான வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப்பின் சேதுவை பார்த்து தமிழ்ச்செல்வி, மாப்பிள்ளை பற்றி விசாரித்தீர்களா? என்று கேட்கிறார். அதற்கு சேது, உனக்கு என்னதான் பிரச்சனை என்று கேட்கிறார். அப்போது தமிழ்செல்வி, மாப்பிள்ளை பற்றி தன் அப்பா சொன்ன விஷயத்தை எல்லாம் சொல்கிறார். இதைக் கேட்டவுடன் சேது கோபப்பட்டு தமிழ்செல்வியை தான் திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது