மொய் விருந்தில் வென்ற தமிழ்செல்வி, சேது செய்த வேலை - விறுவிறுப்பில் சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ் செல்வி அம்மா, எல்லா இடத்திலுமே பணத்தை கடனுக்கு கேட்டார். ஆனால், யாருமே பணம் தரவில்லை. தமிழ்செல்வியின் குடும்பத்தை ரொம்ப மோசமாகத்தான் பேசி இருந்தார்கள். இதனால் தமிழ்ச்செல்வியும் அவருடைய அம்மாவும் ரொம்ப வருத்தப்பட்டார்கள். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி, மொய் விருந்து வைக்கலாம். அதன் மூலம் பணத்தை எப்படியாவது ரெடி பண்ணலாம் என்று யோசித்து ஊர் முழுக்க போஸ்டர் ஓட்டினார். பின் தமிழ்ச்செல்வி மொய் விருந்து நடத்துகிறார் என்பதை அறிந்த சேதுவின் அத்தை, தமிழ்ச்செல்வியை பழிவாங்க கிடா விருந்து நடத்த தன்னுடைய அண்ணனிடம் கேட்டார்.
அவருமே கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்ய சொன்னார். ஊரில் உள்ள எல்லோருமே கிடா விருந்துக்கு போவதாக பேசி கொண்டார்கள். இதை அறிந்த தமிழின் அம்மா தமிழிடம் சொல்லி புலம்பி இருந்தார். அதற்கு தமிழ்செல்வி, என்ன நடந்தாலுமே இந்த மொய் விருந்தை நடத்துவேன் என்று சபதம் போட்டார். இதை அறிந்தும் சேது எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். கிடா விருந்துக்கான வேலை மும்முரமாக நடந்தது. இதெல்லாம் பார்த்து தமிழ் செல்விக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. சோகத்தில் தமிழ்ச்செல்வி, எனக்கு தெரிந்த ஆசிரமம் இருக்கிறது. அங்கு சாப்பாடு கொண்டு போய் கொடுத்துவிடலாம் என்று சொன்னார்.
சின்னமருமகள் சீரியல்
நேற்று எபிசோட்டில் கோவிலில் கிடா விருந்துக்கான ஆட்டை சாமி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கோயில் பூசாரி, தயவு செய்து இந்த கிடா விருந்தை விட்டு விடுங்கள். இதை மீறி செய்தால் உங்கள் குடும்பத்திற்கு தான் பிரச்சனை என்று சொல்வதால் கிடா விருந்தையே நிறுத்தி விட்டார்கள். அதற்கு பின் ஊர் மக்கள் எல்லோருமே தமிழ் செல்வி நடத்தும் மொய் விருந்துக்கு போனார்கள். அதை பார்த்து தமிழ்ச்செல்வி ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் எல்லோருக்குமே தமிழ்செல்வி சந்தோஷமாக சாப்பாட்டை பரிமாறி இருந்தார். அனைவரும் தமிழ்ச்செல்வியை பாராட்டி தங்களால் முடிந்த பண உதவியை கொடுத்து இருந்தார்கள். அதற்குப்பின் சேதுவின் அப்பத்தா, அம்மா, அண்ணி மூவருமே மொய் விருந்திற்கு வந்தார்கள்.
நேற்று எபிசோட்:
அப்போது அப்பத்தா, நீ சொன்ன பொய்தால்தான் குடும்பமே இப்படி இருக்கிறது என்று தமிழ்செல்வியை திட்டினார். அதற்குப்பின் மூவரும் சந்தோஷமாக மொய் விருந்து சாப்பிட்டு முடித்து தங்க வளையல், செயின், பணம் என்று வைத்தார்கள். இதை பார்த்த தமிழ்ச்செல்வி, இது எதுவும் எனக்கு வேண்டாம். என்னை உங்கள் பேரன் ரொம்ப மோசமாக திட்டிய போது நீங்கள் எதுவுமே பேசவில்லை என்று எமோஷனலாக பேசினார். பின் அவர்கள் கொடுத்த நகைகளை கொடுத்து விட்டார். அதற்குப்பின் சேதுவின் அண்ணி கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்க, இந்த பணத்தை நீ வாங்கவில்லை என்றால் உனக்கும் எனக்குமான உறவு முடிந்து விடும் என்று சொன்னார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சேதுவின் அண்ணி கொடுத்த பணத்தை தமிழ்ச்செல்வி வாங்கிக் கொள்கிறார். பின் அப்பத்தா, என்னால் நிம்மதியாக தூங்கவே முடியாது. தயவுசெய்து என்னிடம் இருந்து ஏதாவது வாங்கிக் கொள் என்று சொல்கிறார். உடனே தமிழ் செல்வி , உங்கள் சுருக்குப்பையில் இருக்கும் பணத்தை கொடுங்கள் போதும் என்கிறார். இன்னொரு பக்கம் சேது குடும்பம் உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அங்குள்ள உறவினர் சாப்பிட்டு விட்டு தான் செல்ல வேண்டும் என்று அவர்களை உட்கார வைத்து விடுகிறார். பின் வீட்டில் உள்ள பெண்கள் சமைக்கவே இல்லை என்று சொல்கிறார்.
சீரியல் ட்ராக்:
இதனால் அவருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. உடனே அந்தப் பெண், நான் தமிழ்ச்செல்வி சமைத்த சாப்பாட்டை காசு கொடுத்து வாங்கி வருகிறேன் என்று சொல்லி மொய் விருந்துக்கு வந்து சாப்பாட்டையும் வாங்கி கொள்கிறார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி சமைத்த சாப்பாடு என்று தெரியாமல் சேதுவின் வீட்டில் உள்ள எல்லோருமே சாப்பிட்டு ஆஹா ஓஹோ என்று பாராட்டுகிறார்கள். அதற்குப்பின் அப்பத்தாவிடம் சேது, நீங்கள் மொய் விருந்துக்கு போனீர்களா? என்று விசாரிக்கிறார். அப்பத்தா, ஆமாம் போனேன். சாப்பாடு நன்றாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் நீ சாப்பிட்ட சாப்பாடு கூட தமிழ் செல்வி செய்து தந்தது தான் என்று சொன்னவுடன் சேது வாந்தி எடுப்பது போல செய்து கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.