கல்யாணத்தை நிறுத்த போலீசுடன் வரும் தாமரை- தமிழ், கண்மணி நிலைமை என்ன? சின்ன மருமகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் அப்பத்தா, நீ திருமணத்திற்கு வர மாட்டாயா? நீ தான் இதையெல்லாம் எடுத்து செய்யணும் என்று எமோஷனாக பேசினார். உடனே தமிழ்ச்செல்வி, நான் எந்த உரிமையில் வந்து இதையெல்லாம் செய்வது? எங்கிருந்தாலும் கண்மணி வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று பேசி இருந்தார். இன்னொரு பக்கம் கருப்பு, ஓட்டலுக்கு அருகில் உள்ள பூக்கடை, பானி பூரி கடை, ஆட்டோ ஸ்டாண்ட் என்று விசாரித்துக் கொண்டே இருந்தார். யாருமே ஓட்டலை பற்றியும் ஹோட்டல் ஓனர் பற்றியும் சரியான தகவலை சொல்லவில்லை. இதனால் கருப்பு என்ன செய்வது என்று புரியவில்லை.
இன்னொரு பக்கம் கருப்புவை பார்த்த ஆட்டோ டிரைவர், இந்த ஓட்டலில் ஒரு பிரச்சனை இருக்கிறது. அது என்னவென்று தெரியவில்லை. இந்த ஓட்டலுக்கு வரும் பெண்கள் எல்லாம் அழுது கொண்டே வெளியே போவார்கள். அந்த ஹோட்டலுக்கு வந்த பெண்களே ஒரு 15 நாள் கழித்து மீண்டும் வருவார்கள். ஆனால், வெளியே வரும்போது அழுது கொண்டுதான் வருவார்கள். என்ன நடக்கிறது? ஏன் அழுகிறார்கள்? என்று தெரியவில்லை என்றார். இதை கருப்பு , தமிழ் செல்விக்கு போன் செய்து சொன்னார்.
சின்ன மருமகள் சீரியல்:
நேற்று எபிசோட்டில் தமிழ்ச்செல்வி, தப்பான விஷயம் நடக்கிறது என்றால் அங்கு வரும் பெண்களை தப்பாக வீடியோ எடுத்து அவர்கள் அதை வைத்து மிரட்டணும் என்று உண்மையை கண்டுபிடித்து விட்டார். அப்போது கருப்பு, அந்த ஓட்டலில் தான் தாமரை தங்கி இருக்கிறார் என்று சொன்னார். உடனே தமிழ்ச்செல்வி, சீக்கிரம் போய் அவளை காப்பாற்றுங்கள். பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறாள் என்று சொன்னார். அதற்குப்பின் தாமரையை பார்த்த கருப்பு, நடந்ததை எல்லாம் சொன்னார். தாமரையுமே ஷாக் ஆகி ரூமிற்கு வந்த சர்வன்ட் பாய் நடந்து கொண்ட விஷயத்தை சொன்னார்.
நேற்று எபிசோட்:
பின் தமிழ்ச்செல்வி சொன்ன ஐடியாவை கருப்பு, தாமரை இடம் சொன்னார். இன்னொரு பக்கம் கல்யாண மண்டபத்திற்கு ராஜாங்கம் வீட்டில் எல்லோருமே கிளம்பினார்கள். அப்போது கண்மணியை ஆறுமுகம் தான் அழைத்துக் கொண்டு வந்தார். வண்டியில் வரும்போது கண்மணி, நீ தாலி கட்டவில்லை என்றால் நான் செத்து விடுவேன் என்று ரொம்ப எமோஷனலாக அழுது புலம்பினார். ஆறுமுகத்திற்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இன்னொரு பக்கம் தாமரை துணி மாற்றுவது போல பேசி ட்ராமா செய்தார். உடனே கருப்பு கேமராவை மறைத்ததால் நந்தகுமார் நண்பர்கள் கோபப்பட்டார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கேமராவை நகர்த்துவதற்காக ரூம் சர்வெண்ட் வருகிறார். அப்போது கருப்பு, தாமரை இருவருமே அவனை பிடித்து அடித்து உண்மையை கேட்கிறார்கள். பின் நந்தகுமாரின் நண்பர்கள் இருக்கும் அறைக்கு கருப்பு, தாமரை போலீசை வர வைத்து விடுகிறார்கள். நந்தகுமார் நண்பர்கள் தப்பிப்பதற்கு முன்பு போலீஸ் அவர்களை பிடித்து விடுகிறது. உண்மையை கேட்டு போலீஸ் வெளுத்து வாங்குகிறார்கள். அப்போது ஓட்டலுக்கு வரும் பெண்களை தப்பாக வீடியோ எடுத்து வைத்து மிரட்டும் உண்மையை போலீஸ் அறிந்து கொள்கிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணி நந்தகுமார் என்றும் தெரிந்து கொள்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
பின் கல்யாணத்தை நிறுத்துவதற்காக போலீஸ், கருப்பு, தாமரை எல்லோருமே கிளம்புகிறார்கள். பின் தாமரை, தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து நடந்தது எல்லாம் சொல்லி, உன்னுடைய சொந்தக்காரர் மாப்பிள்ளையை தயாராக சொல் என்கிறார். இதனால் தாமரையின் அம்மா ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார். இன்னொரு பக்கம் கருப்பு, தமிழ் செல்விக்கு போன் செய்து நடந்ததை எல்லாம் சொன்னவுடன் தமிழ்ச்செல்வி மண்டபத்திற்கு கிளம்பி வருகிறார். இன்னொரு பக்கம் கண்மணி- ஆறுமுகம் இருவருமே மண்டபத்திற்கு செல்லாமல் வேறு எங்கோ செல்கிறார்கள். மண்டபத்தில் சேது அம்மா, கண்மணி இன்னும் வரவில்லை என்று ராஜாங்கத்திடம் சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.