ஈஸ்வரி சூழ்ச்சியில் சிக்கிய தமிழ்செல்வி, ராஜாங்கம் எடுக்க போகும் முடிவு என்ன? சின்ன மருமகள்

By subhashini · 22/3/2026

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஜெனியின் காதலுக்காக ராஜாங்கம் ஜெனியின் அப்பா தாமஸிடம் பேசப் போனார். தாமசின் உறவினர் ராஜாங்கத்திற்கு எதிர்க்கட்சிக்காரர். அதனால் தாமஸ், ராஜாங்கம் பேசுவதையெல்லாம் எதிர்க்கட்சிக்காரர் கேட்பதற்காக போனை ஆனில் வைத்திருந்தார். ராஜாங்கம், ஜெனியின் காதலுக்காக பேசுகிறார். கோபத்தில் தாமஸ், உன் வீட்டு பிரச்சனையை மட்டும் பார். கட்சிப் பிரச்சினையை பார். என் வீட்டு விஷயத்தில் தலையிடாதே. உன்னுடைய மரியாதையை காப்பாற்றிக்கொள் என்று அவமரியாதையாக பேசி விட்டார்.

இதனால் கோபத்தில் சேது, தாமஸை அடிக்கப் போனார். ராஜாங்கம் தடுத்து கூப்பிட்டு வந்து விட்டார்.
பின் வீட்டிற்கு வந்த ராஜாங்கம், தேர்தல் முடியும் வரை எந்த பிரச்சனையிலும் எந்த பிரச்சனையும் செய்ய வேண்டாம். எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிந்த பின் பேசிக்கொள்ளலாம் என்றார். தமிழ் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். அதற்குப் பின் ஜெனி, தமிழுக்கு போன் செய்து பேசி இருந்தார். அப்போது ஜெனியின் அப்பா, அம்மா இருவருமே ஜெனியை அடித்தார்கள்.

சின்ன மருமகள்:

ராஜாங்கம் எதுவும் செய்ய வேண்டாம் என்று சொன்னதால் சேது- தமிழ் இருவரும் அமைதியாக இருந்தார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று ஈஸ்வரி, தமிழின் மொபைலை எடுத்து வந்து ஐஸ்வர்யாவிடம் சொன்னார். அதில் ஐஸ்வர்யா, தமிழின் அப்பாவிற்கு ஃபோன் செய்து ஜெனியின் காதலுக்கு உதவ சொல்லி தமிழ் குரலில் பேசி இருந்தார். தமிழின் அப்பா சின்ன பாண்டியுமே, ராஜாங்கம் செய்ய சொன்னதால் ஜெனியின் காதலை சேர்த்து வைக்க ஒத்துக் கொண்டார்.

சீரியல் ட்ராக்:

அதற்கு பின் சக்திவேலுக்கு போன் செய்து தன்னுடைய திட்டத்தை பற்றி சின்ன பாண்டி சொன்னார். சக்தி தயங்கினாலும் பிறகு ஒத்துக் கொண்டார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி வருவதற்குள் போனை ஈஸ்வரி உள்ளே வைத்து விட்டார். தமிழ்-சேது இருவருமே எமோஷன் ஆக ஜெனியின் காதலைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் சின்ன பாண்டி- சக்தி இருவரும் ஜெனியின் வீட்டிற்குள் வந்தார்கள். ஜெனியின் அப்பா அந்த சமயம் பார்த்து வெளியே வந்தார்.

https://www.youtube.com/watch?v=wt7XwsyHiUU

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் சின்னபாண்டி, ஜெனி- சக்தி இருவரையும் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து வைத்தார். பின் தாமஸ், ராஜாங்கம் வீட்டிற்கு வந்து ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி, கெஸ்ட் ஹவுஸில் யாரோ இருக்கிறார்கள் என்று எல்லோரையும் அழைத்து செல்கிறார். அப்போது சின்னபாண்டி, ஜெனி- சக்தி இருவரையும் வெளியே அழைத்து வந்து நீங்கள் சொன்னபடி திருமணம் செய்து வைத்தேன் என்று சொல்கிறார். இதை கேட்டு
ராஜாங்கம், தமிழ்ச்செல்வி ஷாக் ஆகி நிற்கிறார்கள்.

behindtalkies AMP · Quick view
View full