சென்னை போய் ஏமாறப்போறன்னு என் அப்பா சொன்னார், ஆனால் - 'யூத்' பட நடிகர் சின்னா தமிழா எமோஷனல்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் கென் கருணாஸ். இவர் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் கருணாஸ் மகன் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான அழகு குட்டி செல்லம் என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். இருந்தாலும் இவரை பிரபலமாக்கியது தனுஷ் அவர்களின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘அசுரன்’ படத்தில் தான். இந்த படத்தில் கருணாஸின் மகன் கென் நடிப்பை பார்த்து பல பேர் பாராட்டினார்கள்.
இதை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியிருந்த விடுதலை 2 படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் கென் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து வாத்தி என்ற படத்திலும் கென் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்தார். தற்போது இவர் யூத் என்ற படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.
கென் கருணாஸ் குறித்த தகவல்:
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய சக்சஸ் மீட்டில் சின்ன தமிழா, சினிமாவில் நடிக்கணும் என்பது என்னுடைய சின்ன வயதிலிருந்தே ஆசை கனவு. ஆனால் என்னுடைய கனவை நிறைய பேர் நம்பவில்லை. இங்கு இருக்கிற நிறைய பேருக்கு சினிமாவில் வாய்ப்பு இல்லை. லண்டனில் பிறந்த உனக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும் என்று நிறைய கேள்விகள் இருந்தது. அப்போதுதான் நான் சின்ன தமிழா என்று ஒரு இன்ஸ்டாகிராம் பேஜை உருவாக்கினேன்.
சின்ன தமிழா பேட்டி:
வாய்ப்புகள் கிடைக்கிற வரை டிக் டாக், சோசியல் மீடியா மூலமாக ஏதாவது பண்ணி நம் திறமையை நிரூபிக்கலாம் என்று ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் தான் கென் எனக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் பண்ணினார். ப்ரோ நீங்க சென்னைக்கு வரும்போது நம்ம மீட் பண்ணலாம், என்கிட்ட கதை இருக்கு. அதில் ஒரு கேரக்டர் இருக்கு. இன்ஸ்டாவில் நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அதையே இங்க பண்ணுங்க என்று சொல்லியிருந்தார். கென் சினிமாவிற்கு புதிது. எனக்கும் புதிது. ஆனால், ஒவ்வொரு மாதமும் எனக்கு போன் பண்ணி அப்டேட் கொடுத்துக் கொண்டே இருப்பார். கென் இந்த ஆபீசுக்கு போனேன், அங்கு இப்படி சொன்னாங்க என்று சொல்லுவான். அவனையே ரிஜெக்ட் பண்ணும் போது நம்மை எப்படி ஏற்றுப்பாங்கன்னு நான் அப்போ யோசிப்பேன்.
https://www.youtube.com/watch?v=I1JhZHNhZ4M
படம் பற்றி சொன்னது:
கடைசியாக ஒரு நாள் கென் போன் பண்ணி ஆகஸ்ட் 25ஆம் தேதி நீ சென்னைக்கு வா, நீ நடிக்க போற என்று சொன்னான். நான் சென்னைக்கு வந்து ஒரு ரூமுக்குள் நுழைந்தேன். அங்கு ஒரு பத்து பேர் படுத்திருந்தார்கள். எங்க அப்பா, நீ அங்க போய் ஏமாற போறேன்னு சொன்னார். ஆனால், எனக்கு அந்த டீம் மேல் நம்பிக்கை இருந்தது. அந்த ஏழு மாதம் கஷ்டமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், அங்கு இருந்தது முழுவதும் கென் கேங்க் தான். அவங்க தான் இன்னைக்கு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். சக்சஸ் ஆகுறதுக்கு பேக்ரவுண்ட் தேவையில்லை ஃபேஷன் இருந்தால் கண்டிப்பாக ஜெயிக்கலாம். இந்த கேங்கில் சேர்த்துக்கொண்ட கென்னுக்கு ரொம்ப நன்றி என்று எமோஷனலாக பேசி இருக்கிறார்.