80-களில் தமிழ் சினிமாவில் நடிப்பது ரொம்ப கஷ்டம், ஆனால் இப்போ - நடிகர் சின்னி ஜெயந்த் ஓபன் டாக்
தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் சின்னி ஜெயந்த்தும் ஒருவர். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பல குரலில் பேசும் கலைஞர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் 1984 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கை கொடுக்கும் கை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக இவர் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சின்னி ஜெயந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம்
வவ்வல்ஸ். இந்த படத்தை ராஜு ஷெரேகர் தயாரித்திருக்கிறார். ஐந்து கதைகளை கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை திலீப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி, ஜெகன் ராஜேந்திரன் ஆகிய இந்து இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள்.
சின்னி ஜெயந்த் குறித்த தகவல்:
இந்த படத்தில் யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ்
உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் மார்ச் 13ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. அப்போது விழாவில் பேசிய சின்னி ஜெயந்த்,
இந்த படத்தின் பட குழுவினர் ரொம்பவே தைரியமானவர்கள். கர்நாடகாவில் இருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்திருக்கிறார்கள். நிச்சயம் தமிழ் சினிமா உங்களை கைவிடாது. வந்தாரை வாழவைக்கும் தமிழகம்.
https://www.youtube.com/watch?v=mn3zOeGdKAg
சின்னி ஜெயந்த் பேட்டி:
கதா சங்கமம் கன்னட படத்தில் தான் நான் முதலில் எடுத்தேன். அந்த படத்தை தமிழகத்தில் கமலா தியேட்டரில்தான் பார்த்தேன். எனக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டது. தமிழ் ரசிகர்கள் நன்றாக ரசிப்பார்கள். புரூஸ்லீயின் படமும் சென்னையில் ஒரு ஆண்டு ஓடியது. தமிழக ரசிகர்கள் நல்ல படங்களை நிச்சயமாக அங்கீகரிப்பார்கள். ஐந்து இயக்குனர்களுடைய ஒற்றுமை எனக்கு ரொம்பவே பிரமிக்க வைத்தது. இந்த படத்தை 5 பாகங்களாக, ஐந்து கதைகளை விரிவாக இருக்கும். மிகப்பெரிய அறிவாளியான யூகி சேது இந்த படத்தில் நடித்திருக்கிறார்.
தமிழ் சினிமா நிலை:
எண்பதுகளில் சினிமாவில் நடிப்பது கஷ்டம். நடிக்க வாய்ப்பு கிடைக்காது. அப்படி கிடைத்தால் நடித்துக் கொண்டிருக்கலாம். இப்ப நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் தொடர்ந்து நடிக்க ஒழுக்கம், கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. நான் 42 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். பல படங்களில் காதலுக்கு சப்போர்ட் செய்திருக்கிறேன். அந்த அனுபவத்தில் இந்த படத்தில் நானே காதலித்திருக்கிறேன் என்று பேசி இருக்கிறார்.