சிரஞ்சீவியின் முதல் மாத இரங்கல் கூட்டம் - சிரிப்போடு குடும்பத்தினர் கொடுத்த போஸ்- காரணம் இது தானாம்.

By Rajkumar · 7/7/2020

சமீபத்தில் கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சிரஞ்சீவி சார்ஜுன் உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த மேக்னா ராஜ்ஜின் கணவரும், நடிகர் அர்ஜுனின் மருமகனும் தான் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா. ஜூன் 6 ஆம் தேதி சிரஞ்சீவி சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. பின் உடனடியாக இவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை. தற்போது இவருக்கு 39 வயது தான் ஆகிறது. இவர் இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக ‘ஷிவார்ஜுனா’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.

https://www.instagram.com/p/CCU9fvdn22q/

தற்போது இவர் நான்கு படங்களில் நடித்து வந்தார். லாக்டவுனுக்குப் பிறகு இந்தப் படங்களின் ஷூட்டிங் தொடர இருந்தது. இந்நிலையில் இவர் உயிரிழந்தார். இவரின் மரணம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய வைத்தது. மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. நடிகை மேக்னாவும், சிரஞ்சீவி சார்ஜாவும் 10 வருடங்களாகக் காதலித்து வந்தார்கள். பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இதையும் பாருங்க : ஜல்லிக்கட்டில் கருப்பன் வென்ற பரிசுகளை எல்லாம் இதைத்தான் செய்வோம் - சூரி சொன்ன சூப்பர் தகவல்.

இன்றோடு சிரஞ்சீவி இறந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் சிரஞ்சீவி குடும்பத்தினர் இரங்கல் கூட்டத்தை ஏற்பாடு செய்த்தனர். அப்போது எடுத்த சில புகைப்படங்களை சிரஞ்சீவியின் மனைவி மேக்னா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துருந்தார். ஆனால், அதில் அனைவரும் சிரிப்புடன் காணப்பட்டதால் இரங்கல் கூட்டத்தில் எப்படி இப்படி ஒரு சந்தோசம் என்று ரசிகர்கள் குழம்பி இருந்தனர். இதற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் மேக்னா.

https://www.instagram.com/p/CCU9nh7n_KJ/

அதில்,அன்புக்குரிய ச்சிரு, ச்சிரு என்றால் கொண்டாட்டம்தான். இதற்கு முன்னால் எப்படியோ அப்படியே தான் எப்போதும். இதை தவிர வேறு மாதிரி இருந்தால் நீங்கள் அதைவிரும்ப மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும். நீங்கள் தான் என் புன்னகைக்கு காரணம். எனக்கு அவர் கொடுத்த இந்த குடும்பம் மிகவும் விசேஷமானது. எப்போதும் நாங்கள் ஒன்றாக நீங்கள் நினைத்தது போல அனைத்து நாட்களையும் வாழ்வோம். அன்பு, சிரிப்பு, நேர்மை எல்லாவற்றுக்கும் மேலாக ஒற்றுமையுடன் நாங்கள் வாழ்வோம். லவ் யு பேபி மா என்று பதிவிட்டிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full