நிறைய பேரை இழந்துவிட்டேன், நீயும் சிரஞ்சீவியுடன் இருப்பாய்னு நம்புறேன் - மேக்னா பதிவிட்ட உருக்கமான பதிவு.

By Rajkumar · 21/5/2021

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் தேதி கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சிரஞ்சீவி சார்ஜுன் உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த மேக்னா ராஜ்ஜின் கணவரும், நடிகர் அர்ஜுனின் மருமகனும் தான் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா. ஜூன் 6 ஆம் தேதி சிரஞ்சீவி சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது.

பின் உடனடியாக இவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த போது அவருக்கு 39 வயது தான் ஆகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக ‘ஷிவார்ஜுனா’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

நடிகை மேக்னாவும், சிரஞ்சீவி சார்ஜாவும் 10 வருடங்களாகக் காதலித்து வந்தார்கள். பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு தான் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் கூட நடிகர் சிரஞ்சீவியின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.அதில் அனைவரும் சிரித்து கொண்டு இருந்தனர். அதற்கு காரணத்தை சொன்ன மேக்னா, சிரஞ்சீவிக்கு நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது தான் ஆசை. அதை நிறைவேற்றத்தான் நாங்கள் அனைவரும் அன்று முழுதும் சந்தோசமாக அவரது இரங்கலை அனுசரித்தோம் என்று கூறியிருந்தார்.

சிரஞ்சீவி சார்ஜா இறந்த போது மேக்னா ராஜ் கற்பாக இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது. சமீபத்தில் தான் மேக்னாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு நிலையில் மேக்னா வீட்டில் வளர்ந்து வந்த செல்ல நாய் இறந்துள்ளது. இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மேக்னா, இத்தனை இழப்புகள், கண்டிப்பாக நீ சிருவுடன் இருந்து அவரை தொல்லை செய்து கொண்டு இருப்பாய் என்று நம்புகிறேன் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full