மேடையில் பூஜா ஹேக்டேவிடம் சிரஞ்சீவி நடந்து கொண்ட விதம் - வீடியோவை கண்டு திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள் (மேடைக்கு கீழும் என்னெவெல்லாம் பண்ணி இருக்கார் பாருங்க)

By Arun · 1/5/2022

ஆச்சார்யா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிரஞ்சீவி செய்திருக்கும் செயல் குறித்து சோஷியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பியிருக்கிறது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிரஞ்சீவி. ‘மெகா ஸ்டார்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் வெளிவந்த பட்டங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் சைரா நரசிம்மா ரெட்டி. இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பல மொழிகளில் வெளி ஆகி இருந்தது.

https://www.youtube.com/watch?v=QebH_MoGOB8

இந்தப்படம் சுதந்திரப் போராட்டத்திற்கு முக்கிய காரணமான நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கையை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிரஞ்சீவி, சுதீப், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி அவர்கள் காட்பாதர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கௌரவ வேடத்தில் சல்மான் நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஆச்சார்யா படம் பற்றிய தகவல்:

தற்போது சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘ஆச்சார்யா’. இந்த படத்தை கொரட்டால சிவா இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, சோனு சூட் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக திருவும், இசையமைப்பாளராக மணிசர்மாவும் பணியாற்றியிருக்கிறார்கள்.

https://twitter.com/Rascal1_/status/1519890814566301696

ஆச்சார்யா படம் ரிலீஸ்:

மேலும், இந்த படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படு மோசமான விமர்சனங்ளை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் நடிகர் சிரஞ்சீவி செய்தது குறித்து சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் ப்ரமோஷன் விழா நடந்து முடிந்தது. இதில் ராம்சரண், சிரஞ்சீவி, பூஜா ஹெக்டே உட்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

https://twitter.com/iamprasath007/status/1519920185666269190

ப்ரோமோசன் விழாவில் சிரஞ்சீவி செய்தது:

இந்த விழாவில் பூஜா அவர்கள் அழகான சேலையை அணிந்து கொண்டு தேவை போல் வந்து இருந்தார். பின் இவர் தன்னுடைய சோஷியல் மீடியாவில் புரமோஷன் விழாவில் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து இனிமையான மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் என்று பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.ஏனெனில் , இந்த விழாவில் நடிகர் சிரஞ்சீவி அவர்கள் தன் மகன் ராம் சரணை ஒதுக்கிவிட்டு தனியாக பூஜா போஸ் கொடுத்திருக்கிறார்.

https://twitter.com/KohlifiedGal/status/1519918317451972609

சிரஞ்சீவியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

அதுமட்டுமில்லாமல் பூஜா மேடையிலிருந்து கீழே இறங்க முயற்சி செய்தும் அவரை வலுக்கட்டாயமாக நிறுத்தி சிரஞ்சீவி போட்டோக்களை எடுத்து இருக்கிறார். அதே போல அவரை கட்டி அனைத்து போஸ் கொடுத்து இருந்தார். பின் மேடைக்கு கீழும் சிரஞ்சீவி பக்கத்தில் உட்கார்வதை தவிர்க்க பூஜா முயற்சி செய்கிறார். இருந்தும் சிரஞ்சீவி அவரை கட்டாயப்படுத்தி உட்கார வைக்கிறார். இப்படி சிரஞ்சீவி நடந்திருக்கும் செயல் குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து நெட்டிசன்கள், ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full