தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கு சென்னையில் சிலை வைக்க காரணம் என்ன? சித்ரா லக்ஷ்மணன் பளீச் பதில்
தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கு சென்னையில் சிலை வைத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தெலுங்கு சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக பணியாற்றி இருந்தவர் சோபன் பாபு. இவர் ஆந்திராவை சேர்ந்தவர். இவர் 1959 ஆம் ஆண்டு வெளியான பக்த சபரி என்ற படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.
அதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட இவர் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதோடு இவர் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து இருந்தார். இவருடைய நடிப்பு திறமைக்காக தேசிய விருது உட்பட பல விருதுகள் கிடைத்திருக்கிறது.
சோபன் பாபு பற்றிய தகவல்:
இதற்கிடையே இவர் சாந்தகுமாரி என்பவரை திருமணம் செய்து இருந்தார். இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் ஆவார். மேலும், இவர் நடிப்பிலிருந்து விலகி பிசினஸ் செய்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் சினிமா நடிகர்களுக்கு சொத்துக்கள் வாங்குவது, முதலீடு செய்வது போன்றவற்றை தொடர்பாக ஆலோசனையும் வழங்கியிருந்தார்.
சோபன் பாபு மறைவு:
பின் உடல்நிலை காரணமாக தன்னுடைய 71 வது வயதில் 2008 ஆம் ஆண்டு சோபன் பாபு காலமானார். இவருடைய மறைவு தென்னிந்திய சினிமா உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. சென்னையில் உள்ள அவருடைய பண்ணையில் தான் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நடிகர் சோபன்பாபுவிற்காக நெல்சன் மாணிக்கம் சாலையில் அவருடைய குடும்பத்தினர் சிலை வைத்திருக்கிறார்கள்.
சோபன் பாபு சிலை சர்ச்சை:
இந்த சிலை அவர்களுக்கு சொந்தமான இடத்தில் தான் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த சிலையினால் போக்குவரத்து பிரச்சனை ஏற்படுகிறது என்றும், இந்த சிலை இருக்கும் ஒரு பகுதி சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானது என்றும் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார்.
சித்ரா லட்சுமணன் பேட்டி:
அதில் அவர், நடிகர் சோபன் பாபுவுக்கு சிலை வைத்தது தமிழக அரசோ, ஆந்திர அரசோ கிடையாது. அவருக்கு சொந்தமான இடத்தில் தான் சிலையை வைத்திருக்கிறார்கள். பொதுவாக சினிமா தயாரிப்பாளர்களுக்கும் சோபன் பாபுவுக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. தன்னுடைய சம்பாதியத்தை எப்படி சேமிக்க வேண்டும் என்பதை பலருக்குமே கற்றுக் கொடுத்திருந்த நபர் சோபன் பாபு என்று கூறியிருக்கிறார்.