என்னை பார்த்ததும் அஜித் காலில் விழுந்துட்டார் - நெகிழ்ச்சியில் ஜான் பாபு மாஸ்டர் பகிர்ந்த விஷயம்
தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை கடின உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அஜித் அவர்கள் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார்.
இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பல அர்ஜுன் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வின்டேஜ் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதை ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். அதிலும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு பிரியா வாரியார் நடனமாடிய காட்சி எல்லாம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
குட் பேட் அக்லி படம்:
மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற ஒத்த ரூபாய் தாரேன் பாடல் மிகப்பெரிய அளவில் வைரலாகி இருக்கிறது. இந்த பாடலுக்காக மொத்த ரூபாயையும் கொட்டிக் கொடுத்து படம் பார்க்கிறோம் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கமெண்ட்களை அள்ளி வீசி வருகிறார்கள். இந்நிலையில் இந்த பாடலுக்கு நடனம் ஆடியவரும், நடன இயக்குனருமான மாஸ்டர் ஜான் பாபு பேட்டியில், கஸ்தூரிராஜா சாருக்கு நான் பண்ணின முதல் படம் நாட்டுப்புறப்பாட்டு. அந்த படம் ரிலீஸ் ஆன காலகட்டத்தில் ரொம்ப பிசியாக வேலை செய்து கொண்டிருந்தேன். கஸ்தூரிராஜா ஒரு நாள் போன் பண்ணி இந்த படத்தில் நான்கு பாடல்களுக்கு நீங்கள் தான் நடனம் அமைக்கணும் என்று சொன்னார்.
மாஸ்டர் ஜான் பாபு பேட்டி:
ஒரு பாட்டுக்கு மட்டும் நீங்க குஷ்பூவுடன் டான்ஸ் பண்ணனும் என்று கேட்டுக்கொண்டார். அந்த பாட்டு தான் ஒத்த ரூபா தாரேன். அதுவும் ஒரே நாளில் அந்த பாட்டை சூட் பண்ண வேண்டும் என்று சொன்னார். கொஞ்சம் சேலஞ்ச் தான். இருந்தாலும் நானும் ஓகே சொல்லிவிட்டேன். அதற்கு காரணமும் குஷ்பு தான். குஷ்பு மேடம் ரொம்ப சின்சியர். அவர்களுடன் நிறைய படங்களுக்கு கோரியோகிராபியாக பண்ணியிருக்கிறேன். டக்கு டக்குனு ஸ்டெப்பை புரிந்து கொண்டு பிரமாதமாக ஆடி விடுவார்கள். எக்ஸ்பிரஷனும் வேற லெவல் இருக்கும். அதனால் தான் யோசிக்காமல் நான் ஓகே சொன்னேன். குஷ்பு தவிர்த்து வேறு எந்த நடிகையாக இருந்திருந்தாலும் ஒரே நாள் சூட்டுக்கு ஓகே சொல்லி இருக்க மாட்டேன்.
https://www.youtube.com/watch?app=desktop&v=U-45Ed814Pw
பாடல் பற்றி சொன்னது:
இந்த பாட்டும் ஹிட் ஆனது. எங்க போனாலும் இந்த பாட்டு தான் ஓடும். அந்த அற்புதமான நினைவுகள் இப்பவும் மனதில் பதிந்து இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஒத்த ரூபாய் பாட்டு மூலம் இன்னும் பட வாய்ப்புகள் எனக்கு குவிய ஆரம்பித்தது. இதற்கு இளையராஜா சார் அருமையான இசையை கொடுத்தார்.
இத்தனை வருஷங்கள் ஆகியும் எல்லோருமே கொண்டாடுகிற மாதிரியான டிரெண்டிங் ஆன இசையில் கொடுத்திருக்கிறார். குட் பேட் அக்லி படத்தில் நான் வேலை செய்யவில்லை என்றாலும் நான் ஒர்க் பண்ணின ஃபீலை இந்த ஒத்த ரூபா பாட்டு கொடுத்திருக்கிறது. நான் பெரிதும் மதிக்கும், எனக்கு பிடித்த அஜித் சாரோட படத்தில் இடம்பெற்றது ரொம்ப சந்தோஷம். அஜித் சார் அறிமுகமான அமராவதி படத்திற்கு எல்லா பாடல்களுக்கும் நான்தான் நடன இயக்குனர்.
அஜித் பற்றி சொன்னது:
அவரின் நேசம், கல்லூரி வாசல் படங்களுக்கும் நான் நடனம் அமைத்திருக்கிறேன். அஜித் சார் ரொம்ப தன்னடக்கமான மனிதர். அவர் கூட வேலை பண்ணுவதே ரொம்ப ஆர்வமாக இருக்கும். இன்னைக்கு பெரிய ஸ்டார் ஆக இருக்கிறார். ஆனாலும், முதல் படத்திலிருந்த தன்னடக்கத்தை இப்பவும் பார்க்கிறேன். அதுக்கு உதாரணம் ஒரே சம்பவத்தை சொல்லலாம். சில வருடங்களுக்கு முன்பு நேரு ஸ்டேடியத்தில் எங்க டான்சஸ் யூனியன் அசோசியேஷன் விழாவிற்கு அஜித் சார் குடும்பத்தோடு வந்திருந்தார். எல்லோரும் எக்சைட்மெண்டாக இருந்தோம். அவரைப் பார்க்க நான் வெளியில் வந்தேன். என்னை பார்த்ததுமே குருவிடம் ஆசீர்வாதம் வாங்குற மாதிரி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார் அஜித் சார். இப்படிப்பட்ட மனிதருடன் முதல் படத்துக்கு நான் நடனம் அமைத்தது ரொம்ப பெருமையாக இருக்கு. எவ்வளவு உயரத்துக்கு போனாலும் இன்னும் அப்படியே இருக்கிறார் என்று எனக்கு மெய்சிலிர்த்து விட்டேன் என்று கூறி இருக்கிறார்.