பா நடிகையின் வழக்கு, திலீப்பை காப்பாற்ற இரண்டாம் மனைவி காவ்யா செய்த வேலை, குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை - பின்னணி இது தான்

By subhashini · 1/4/2022

நடிகை பாலியல் பலாத்கார சம்பவத்தில் சாட்சியைக் கலைத்ததற்காக நடிகை காவியா மாதவன் மீது புகார் எழுப்பி விசாரணை நடத்தி வருகிற சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மலையாள திரை உலகில் பிரபலமான நடிகராக இருந்தவர் திலீப். இவர் கேரளாவை சேர்ந்த பிரபல நடிகையை 2017ம் ஆண்டு காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு சில ஆண்டாகவே நீண்டு கொண்டே சென்றிருக்கிறது. இந்த வழக்கில் நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் கைது செய்தனர். 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த பிறகு நடிகர் திலீப் ஜாமினில் வெளியே வந்து இருந்தார். மேலும், இந்த வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருக்கிறது.

இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டது.
இப்படி ஒரு நிலையில் திலீப்பின் நண்பரும், இயக்குனருமான பாலச்சந்திரகுமார் சில மாதங்களுக்கு முன் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது திலீப் குறித்து கூறி இருந்தார். அதில் அவர், நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இப்போது சிறையில் இருக்கும் பல்சர் சுனிக்கும் நடிகர் திலீப்புக்கும் ஏற்கனவே நட்பு இருந்தது.

மீண்டும் திலீப் கைது செய்யப்பட்ட காரணம் :

அதுமட்டும் இல்லாமல் நடிகர் திலீப் தன்னைக் கைது செய்த போலீஸ் அதிகாரிகளை பழிவாங்குவது பற்றிய ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த தகவலை நான் எங்கு வேண்டுமானாலும் சொல்லுவேன். திலீப் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் பினராய் விஜயனுக்கு நான் கடிதம் எழுதி இருந்தேன் என்று பாலச்சந்திரகுமார் கூறி இருக்கிறார். இதனை தொடர்ந்து நடிகர் திலீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட நடிகையும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இயக்குனர் பாலசந்திரகுமார் வாக்குமூலம்:

பிறகு நடிகர் திலீப்பை கைது செய்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசார் முடிவு செய்து இருந்தனர். பின் பாலசந்திரகுமார் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு கோர்ட்டில் க்ரைம் பிராஞ்ச்சில் போலீஸ் பதிவு செய்திருக்கிறது. அதில் திலீப் கைது செய்யப்பட்ட கோபத்தில் விசாரணை செய்த கைது அதிகாரிக்கு ஆபத்தை ஏற்படுத்த விழிப்புணர்வு ஆலோசனை ஈடுபட்டதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் பாலச்சந்திரகுமாரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும், அவர் வெளியீட்ட ஆடியோவின் அடிப்படையிலும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காவ்யா மாதவன் மீது கேரளா போலீஸ் விசாரணை:

இதை தொடர்ந்து போலீஸ் நடிகர் திலீப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் திலீப் சாட்சியங்களை அழிக்க முயன்றதாக திலீப் மனைவி காவ்யா மாதவன் மீது கேரளா குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாகவே நடிகர் திலீப் இடம் சுமார் 16 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து நடிகை தாக்கப்பட்ட வழக்கில் திலீப்பின் இரண்டாவது மனைவியும், பிரபல நடிகை நடிகையான காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

காவ்யா மாதவன் விசாரணைக்கு காரணம்:

இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் ஆலப்புழாவில் சேர்ந்த ஒருவர் திடீரென பல்டி அடித்தார். இதில் காவ்யா மாதவனுக்கு முக்கிய பங்கு இருப்பதாக போலீசார் கருதுகிறார்கள். இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக காவியா மாதவனிடமும் விசாரணை நடத்த கேரளா குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர். விரைவில் அவர் விசாரணைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full