தள்ளிப்போகும் ஜனநாயகன், பழிவாங்கும் அரசியல், விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிரபலங்கள்

By subhashini · 8/1/2026

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பாபி நடித்து இருக்கிறார்கள். தெலுங்கில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. மேலும், இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. மேலும், சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக மலேசியாவில் நடைபெற்று இருந்தது. மலேசியாவே மிரள வைக்கும் அளவிற்கு இந்த விழாவை நடத்தி இருந்தார்கள். இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய விஷயங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது. இதை அடுத்து ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் படம் வெளியாக தாமதமாகுவதால் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது.

ஜனநாயகன் படம்:

மேலும், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்கான தீர்ப்பு ஜனவரி ஒன்பதாம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். இதை அடுத்து படத்தினுடைய ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக படத்தினுடைய தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமாவதற்கெல்லாம் காரணம் அரசியல் ரீதியாக நடக்கும் பழிவாங்கல் செயல் என்றெல்லாம் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். இப்படி இப்படி இருக்கும் நிலையில் இது தொடர்பாக அரசியல் தலைவர்கள், சினிமா பிரமுகர்கள் பலர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=sXJevG1djkQ

ரிலீஸ் ஒத்திவைப்பு:

அந்த வரிசையில் நடிகர் ரவி மோகன், இதயம் நொறுங்கி இருக்கிறது. விஜய் அண்ணா, ஒரு சகோதரனாக உங்களுடன் இருக்கும் லட்சக்கணக்கான சகோதரர்களில் ஒருவனாக நான் நிற்கிறேன். உங்கள் படத்திற்கு தேதி தேவையில்லை. படம் வெளியாகும் தேதியை எப்போது அறிவிக்கிறார்களோ அன்று தான் பொங்கல் தொடங்குகிறது என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து சிம்பு, மை டியர் விஜய் அண்ணா. பின்னடைவுகள் உங்களை எப்போதும் தடுத்ததில்லை.

பிரபலங்கள் ஆதரவு:

இதைவிட புயலை நீங்கள் கடந்து இருக்கிறீர்கள். இதுவும் கடந்து போகும். ஜனநாயகம் வெளியாகும் நாளில் தான் உண்மையான பொங்கல் தொடங்கும் என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு, எதுவாக இருந்தாலும் சரி இந்திய சினிமாவில் இது மிகப்பெரிய ஃபேர்வெல் படமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இப்படி தொடர்ந்து பல பிரபலங்கள் தங்களுடைய ஆதரவை விஜய்க்கு கொடுத்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full