படத்தில் வைக்கப்பட்ட தனது Reference - ஜிகிர்தண்டா படம் குறித்து ஹாலிவுட் நடிகர் போட்ட பதிவு. காத்திருக்கும் கார்த்திக் சுப்புராஜ்

By subhashini · 14/12/2023

பாலிவுட் நடிகர் க்ளின்ட் ஈஸ்ட்வுட் பதிவிற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் வந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

ஏற்கனவே கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியிருந்த ஜிகர்தண்டா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. அதனை அடுத்து தற்போது வித்தியாசமான வேறுபட்ட கதைகளத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம்:

மேலும், இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. தற்போது இந்த படம் netflix ஓடிடி தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரான க்ளின்ட் ஈஸ்ட்வுட் உடைய காட்சிகள், கட்டவுகள் எல்லாம் வந்திருக்கிறது. இவர் பிரபலமான நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்.

https://twitter.com/RealTheClint/status/1734991509605220408

க்ளின்ட் ஈஸ்ட்வுட் குறித்த தகவல்:

படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் ராகவா லாரன்ஸ் தன்னுடைய சிறுவயதில் படப்பிடிப்பில் அவருடைய க்ளின்ட் ஈஸ்ட்வுட் உயிரை காப்பாற்றியதால் அவருக்கு பரிசாக கேமரா ஒன்றை கிளின்ட் வழங்குகிறார். அதேபோல் கிளின்ட் படத்தை அடிக்கடி ராகவா லாரன்ஸ் பார்ப்பது போலவே வரும். இப்படி படம் முழுக்க ஏதோ ஒரு வகையில் க்ளின்ட் ஈஸ்ட்வுட் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இதனால் இந்த படத்தின் சுவாரஸ்யத்திற்கு இவருடைய கதாபாத்திரமும் முக்கியமென்றே சொல்லலாம்.

க்ளின்ட் ஈஸ்ட்வுட் பதிவு:

இந்த நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போஸ்டரை நடிகர் க்ளின்ட் ஈஸ்ட்வுட் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து, இப்படத்தை பற்றி கேள்விப்பட்டேன். தற்போது நான் தயாரிக்கும் புதிய படமான Juror 2 முடித்தவுடன் இந்த படத்தை பார்க்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இப்படி க்ளின்ட் ஈஸ்ட்வுட் பதிவிட்ட பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/karthiksubbaraj/status/1735163889388524024

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பதில்:

இதை பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்து, இந்த படத்தை லெஜன்ட் க்ளின்ட் ஈஸ்ட்வுட் பார்க்க இருக்கிறார். இந்த படத்தை நான் அவருக்காக சமர்ப்பிக்கிறேன். இந்த படத்தை பார்த்து அவர் என்ன சொல்ல போகிறார் என்பதை தெரிந்து கொள்ள கோடிக்கணக்கான ரசிகருடன் நானும் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full