1989ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் நடைபெற்ற நாகரிகமற்ற செயலை முதல்வர் அதை நாடகம் என்று சொல்வது முழு பூசணிக்காய்யை சோற்றில் மறைப்பது போல் உள்ளது என்று ஒ.பி.எஸ் அவர்களின் கருத்து. சமிபத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மறைந்த முன்னாள் ஜெயலலிதாவிற்கு சட்டசபையில் அவருக்கு நடைபெற்ற இன்னல்கள் குறித்து பேசினார்.

அதில் 1989ஆம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதாவிற்கு அப்போதையை ஆளுங்கட்சியாக இருந்த திமுக எம்.எல்.ஏ கள் அவரிடம் தகாத வார்த்தைகளாலும் அவரது சேலையை பிடித்து இழுத்து தகாத முறையில் திமுகவின் எம்.எல்.ஏ நடந்து கொண்டார் எனவும் அவர் கூறியிருந்தார். இது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியது.

Advertisement

முதல்வர் கருத்து:

இந்த கருத்து குறித்து மறுப்பு தெரிவித்த தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் இது போன்ற நிகழ்வு இங்கு நடைபெறவில்லையென்றும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏதோ வாட்ஸ் ஆப்பில் வரும் செய்திகளை நாடாளுமன்றத்தில் கூறி வருகிறார் என்றும் அவர் கூறியிருந்தார். அது அவராக நடத்தி கொண்ட நாடகம் அது அந்த அவையில் இருந்த அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் கூறினார். சட்டசபையில் இது போன்று நடந்து கொள்ள அவர் போயஸ் கார்டனில் ஒத்திகை பார்த்தார் என்றும் கூறி இருந்தார்.

ஒ.பி.எஸ் கருத்து:

அப்போது த.மிழக சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வு உண்மையே இதை நாடாளுமன்றத்தில் நாடகம் என்று திமுகவினர் கூறி வருகின்றனர். 1989ஆம் ஆண்டு தமிழக சட்ட சபையில் ஜெயலலிதாவிற்கு நடைபெற்ற நிகழ்வுவை நாடகம் என்று சொல்வதற்க்கு ஸ்டாலினுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். 25-03-1989 அன்று நடைப்பெற்றது முழுவதும் உண்மையே, அங்கு ஜெயலலிதா அம்மையாரின் புடவை நீக்கி அவரை வெளியே அனுப்பியது உண்மை தான்.

Advertisement

அன்று நடந்த இந்த சம்பவங்களை அப்போதையே பேரவை தலைவர் தீர்ப்பு வழங்கியிருப்பதையும், அவை நடவடிக்கைக் குறிப்புகள் என அன்றைய தினம் 25-03-1989 அன்று நடந்ததாக வெளியிடப்பட்டுள்ள இக்குறிப்புகள் அனைத்தும் நாடாளுமன்ற மரபுகள் மற்றும் நடைமுறைகளுக்கு முற்றிலும் விரோதமானவை. அவர் அப்போது ஒரு சபதம் எடுத்தார் மீண்டும் இந்த அவைக்குள் நான் வந்தால் முதல்வராக தான் வருவேன் என்று சபதம் எடுத்தார்.

Advertisement

அது படி மக்கள் அவருக்கு வாக்களித்து அவரை வெற்றி பெற வைத்தனர் என்பதை ஸ்டாலினுக்கு நினைவு படுத்த கடமைபட்டு இருக்கிறேன். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற அநாகரிகமான செயலை மறைப்பது முழு பூசணிக்காய்யை சோற்றில் மறைப்பதற்கு சமம் என்றும் அவர் கூறினார். ஒரு வேலை உணமையான சம்பவத்தை நாடகம் என்று கூறுவது தான் திராவிட மாடல் ஆட்சியா என்று பன்னீர்செல்வம் கூறியிருந்தார்    

Advertisement