'கொளத்தூர்ல கொத்து பரோட்டா போட்டுட்டாங்க... இனி Talk Less, Work More!' - கரூரில் திமுகவை கடுமையாக தாக்கிய முதல்வர் விஜய்

'கொளத்தூர்ல கொத்து பரோட்டா போட்டுட்டாங்க... இனி Talk Less, Work More!' - கரூரில் திமுகவை கடுமையாக தாக்கிய முதல்வர் விஜய்

By ·

கடந்த ஆண்டு விஜய் அவர்கள் பிரச்சாரத்தின் போது ஊழிரிழந்த குடும்பத்தினரை சந்தித்து விஜய் ஆறுதல் செய்ய சென்ற போது முதலமைச்சர் விஜய், திமுக அரசையும் அதன் அரசியல் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். தனது முந்தைய பேச்சுக்கு பிறகு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்ட பரபரப்பை குறிப்பிட்ட அவர், "நான் அஞ்சு நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூர்ல கொத்து பரோட்டா போட்டுட்டாங்க" என்று நகைச்சுவையாக பேசியதோடு, இனிமேல் செயல்பாட்டின் மூலமே பதிலளிப்பேன் என்றும் தெரிவித்தார். அதே நேரத்தில், ஊழலுக்கு எதிராக மக்கள் தைரியமாக நிற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

'அஞ்சு நிமிஷம் பேசுனதுக்கே கொத்து பரோட்டா போட்டுட்டாங்க'

கூட்டத்தில் பேசிய விஜய், தனது ஒவ்வொரு பேச்சும் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார். "அன்னைக்கும் சொன்னேன்... இன்னைக்கும் சொல்றேன்... நாளைக்கும் சொல்லுவேன். பணமா... ஜனமான்னு கேட்டா, என் ஜனம் தான்டா எனக்கு முக்கியம். என்னை பேசுங்க பேசுங்கன்னு சொல்றீங்க. நான் அஞ்சு நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூர்ல கொத்து பரோட்டா போட்டுட்டாங்க. இதுக்கு மேல பேசுனா மொத்தமா முடிஞ்சிடும்" என்று கூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

'லஞ்சம் கேட்டா முடியாதுன்னு சொல்லுங்க... நான் உங்க கூட இருக்கேன்'

கரூர் சம்பவத்தை நினைவுகூர்ந்த விஜய், மக்கள் அச்சமின்றி ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். "இனி யாராவது உங்ககிட்ட லஞ்சம் கேட்டா, கொடுக்க முடியாதுன்னு தைரியமா சொல்லுங்க. இது எங்க மகன், எங்க அண்ணன், எங்க தம்பி விஜய்யோட ஆட்சின்னு சொல்லுங்க. உங்க கூட நான் இருக்கேன்" என்று அவர் உறுதியளித்தார். இதன் மூலம், ஊழலுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தினார்.

'நான் ரியல் தாய்மாமன்... ரீல் கிடையாது'

அரசியல் விமர்சனத்தின் நடுவே, தன்னை மற்ற தலைவர்களுடன் ஒப்பிடும் பேச்சுகளுக்கும் விஜய் பதிலளித்தார். "நான் இந்த தீயசக்தி மாதிரி ரீல் தாய்மாமன் கிடையாது. ரியல் தாய்மாமன். இனிமேல் Talk Less... Work More மோடுதான். அதுதான் என்னோட பாலிசி" என்று அவர் கூறினார். அதாவது, இனி வார்த்தைகளை விட செயல்பாடுகளின் மூலமே மக்களின் நம்பிக்கையை பெற விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

'அரசியல் வியாபார Vending Machine திமுகதான்'

திமுகவை நேரடியாக தாக்கிய விஜய், பண அரசியல் குறித்து கடுமையாக விமர்சித்தார். "எங்களை SOFAன்னு சொல்றாங்க... Washing Machineன்னு சொல்றாங்க. ஆனால் அரசியல் வியாபாரம் பண்றதுக்கான Vending Machine-ஏ திமுகதான். தேர்தலிலேயே ஓட்டுக்கே காசு கொடுக்காத நாங்க, எதுக்கு குதிரை பேரம், கழுதை பேரம், ஒட்டக பேரம் செய்யப்போறோம்?" என்று கேள்வி எழுப்பினார்.

கரூர் மேடையில் அரசியல் தாக்குதலை தீவிரப்படுத்திய விஜய்

விஜய்யின் பேச்சு முழுவதும் திமுக அரசை குறிவைத்தே அமைந்தது. மக்களுக்கு தைரியம் அளிக்கும் வகையிலும், ஊழலுக்கு எதிராக நிற்க அழைப்பு விடுக்கும் வகையிலும், அரசியல் எதிரிகளை கடுமையாக விமர்சிக்கும் வகையிலும் அவரது உரை அமைந்தது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விஜய்யின் இந்த பேச்சு தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை